Wednesday , November 25 2020
Breaking News
Home / நிகழ்வுகள்

நிகழ்வுகள்

மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார். அவரின் உன்னத சேவையை பாராட்டி கல்லூரி சமூகமும் கல்லூரி நலன்விரும்பிகளும் இணைந்து அவருக்கு விழா எடுக்க உத்தேசித்துள்ளனர். கல்லூரி அதிபரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி அவரின் ஓய்வுபெறும் நாள் மாபெரும் விழாவாக “மணிவிழா” கொண்டாடப்படவுள்ளது. நிகழ்வுக்கு பணியாளர் நலன்புரி சங்க தலைவர் திரு.தர்மதேவன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். …

Read More »

விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசம்

வருடாவருடம் நடைபெறும் பாவலன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் இந்த வருடம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசமானது. பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவனும் கல்லூரி காலத்திலிருந்து கிரிக்கெட் வீரனுமாக திகழ்ந்த பாவலன், 2015ம் ஆண்டு, மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்தில் உயிர் நீர்த்தவர். அந்த மிக சிறந்த கிரிக்கெட் வீரனை நினைவுகூர்ந்து வருடாவருடம் நடைபெறும் மென்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடமும் ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports Club UK) ஏற்பாட்டில் The …

Read More »

வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா

உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவிக்கப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தரணியெங்கும் இருக்கும் பல உயிரியல் துறை மாணவர்கள் கல்வி கற்ற பேராசான் திரு தம்பிஐயா தம்பிராஜா ஆசிரியர் என்றால் மிகையாகாது. ஒரு காலத்தில் Zoology தம்பிராஜா Botany குணா என்று பல்வேறு தனியார் கல்வி நிலையங்களிலும் …

Read More »

வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா நகர சபைத்தலைவர் கௌதமன் நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தார். பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு எதிராக போராடிய நிறைவு மன்னன் பண்டாரவன்னியனுக்கு அமைக்கப்பட்ட சிலை அமைந்த இடத்திலிருந்து நிகழ்வுகள் ஆரம்பித்தன.இந்த சிலை அமையப்பெறக் காரணகர்த்தாக்களில் ஒருவரான சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை …

Read More »

மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை

மல்லாகம் மக்கள மன்றம் பெரும்மையுடன் வழங்கும் மாபெரும் கலைமாலை (2019.09.28) சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தென்னிந்தியாவில் இருந்து இசையமைபபாளரும் பின்னணிப்பாடகர் சத்யன் மகாலிங்கம். சங்கீத ரத்னா N.ரகுநாதன் சைந்து தரணியா அபிநயா கி்சானா தேனுகா வருணவி சுலக்சன் அபியா , போன்ற கலைஞர்களும் எம நாட்டு ஈழத்தமிழ் கலைஞர்களும் இணைந்து உஙகளை மகிழ்விக்கவிருககிறாாகள். செப்டம்்பா் மாதம் 28ம் திகதி மாபெரும் கலைமாலை 2019 இதற்குரிய நாள். …

Read More »

பத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்

பிரித்தானியாவின் நொட்டிங்காம் பகுதியில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் கல்விக்கூடமாக இயங்கிவரும் நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம் தன் பத்தாவது அகவை நிறைவு நாளை வரும் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி மாசி மாதம் வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்,கலை பண்பாட்டுத் துறைகளின் முன்னோடிகள் பலர் இந்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கல்விக்கூடத்தில் கல்வி கற்கும் சிறார்கள் பலரும் இந்த நிகழ்வில் தங்கள் அரங்க நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள். முற்பகல் …

Read More »

Dartford தமிழ் அறிவியற் கழக விளையாட்டுப்போட்டி

Dartford அறிவியற் கழக இல்ல விளையாட்டுப்போட்டிகள் இந்த வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் திகதி நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கலாசார பாரம்பரிய அம்சங்களை தம் ஒவ்வொர நிகழ்விலும் பிரதிபலிக்கும் டாட்போர்ட் தமிழ் அறிவியற்கழகம் இந்த வருட விளையாட்டுப்போட்டிகளிலும் அப்படியான சிறப்பம்சங்களை உள்வாங்குவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. சங்கிலியன் இல்லமாகவும் எல்லாளன் இல்லாமாகவும் இரு பிரிவாக பிரிக்கப்பட்ட இருவேறு இல்லங்களுக்கும் …

Read More »

“நடுகல்” நாவல் கிளிநொச்சியில் அறிமுகமாகிறது

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிருக்கிறது. கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது. நிகழ்விற்கு வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திரு குருகுலராசா அவர்கள் தலைமை தாங்கவிருக்கிறார். சிறப்பு வருகையாளராக பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் கலந்துகொள்ளவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் நாவலுக்கான விமர்சன உரையை யாழ் …

Read More »

ஹாட்லியின் நாத விநோதம் 2019

ஹாட்லிக்கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வருடாவருடம் பிரமாண்டமாக வழங்கும் நாத விநோதம் அரங்க நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நாத விநோதம் 2019 இசையும் நவீன நடனமும் ஒரே மேடையில் இணையும் கலை அரங்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் முற்றிலும் ஈழத்தமிழ் கலைஞர்களின் அரங்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்களால் வெற்றிகரமாக நெறிப்படுத்தப்பட்டு …

Read More »

தமிழ் அவைக்காற்று கழகத்தின் 40 ஆவது ஆண்டு தமிழ் நாடக விழா   

அடுத்த வாரம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் என்ற பெரும் அரங்கில்(WATERSMEET THEATRE, HIGH ST ,RICKMANSWORTH , WD3 1EH)  மாலை 6மணிக்கு  க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.கடந்த 15வருடங்களாக லண்டனில் முதலாவது தமிழ் நாடகப் பள்ளியை நிறுவி வாராந்தம் நாடக வகுப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது .பயிற்சியாளர்களாக பாலேந்திராவும் ஆனந்தராணியும்செயல்படுகின்றனர்.இந்த நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவும் அதே …

Read More »