Monday , January 25 2021
Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

மூன்றாவது பொது முடக்கம் :எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு!

தற்போது அமுலில் உள்ள இரவு ஊரடங்கின் தாக்கங்களை மதிப்பீடு செய்து அடுத்த கட்டத் தீர்மானத்தை எடுக்கின்ற முக்கிய கூட்டம் எலிஸே மாளிகையில் எதிர்வரும் புதனன்று நடைபெறவுள்ளது. பெரும்பாலும் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை அறிவிப்பதற்கான முன் ஆலோசனைகள் அந்தக் கூட்டத்தில் இடம்பெறும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மூன்றாவது தேசிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அதிபர் எமானுவல் மக்ரோன் வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக அறிவிக்கக் கூடும் என்று …

Read More »

ஜோ பைடன் பதவியேற்பு, திரிபுபடுத்தும் வலதுசாரி கானொன் அமைப்புக்கு ஒரு மரண அடி!

டொனால்ட் டிரம்ப்பை தமது தீர்க்கதரிசி, இரட்சகர் என்று கருதி, அவர் சொல்பவைகளையெல்லாம் வரிக்குவரி நம்பிவந்த கானொன் [QAnon] அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நம்பிவந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததால் குழம்பிப்போயிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பிருந்து ‘சாத்தானை வழிபடும், சர்வதேச ரீதியில் பாலர்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தி வரும் ஒரு இரகசியக் குழு அமெரிக்காவின் அதிகார பீடங்களையும், ஊடகங்களையும் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்,’ என்ற நம்பிக்கையைக் கானொன் அமைப்பினர் பரப்பி வருகிறார்கள். அதன் …

Read More »

கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து.

ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத் தொற்றுக்கள் ஐரோப்பாவில் ஆரம்பித்ததுமே நாட்டுக்குள் வருகிறவர்களுக்கு கிரீன்லாந்து கடுமையான தனிமைப்படுத்தல், பரீட்சித்தல் போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டது. “எங்கள் நாடு ஒரு தீவு என்ற விடயத்தை நாம் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினோம்,” என்கிறார் தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் ஹென்ரிக் ஹான்ஸன். கிரீன்லாந்தின் …

Read More »

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின் கோரிக்கையை மறுக்க முடியாமல் பல தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஈராக்கிய ஜனாதிபதி பர்ஹாம் சாலெ உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்றப்படவிருக்கும் 350 மரண தண்டனைகளில் சிறையிலிருக்கும் தீவிரவாதிகளும், மற்றைய குற்றவாளிகளும் அடங்கும். வழக்குகளும், தீர்ப்புக்களும் சர்வதேசச் சட்டங்களுக்கு இணங்கவே நடாத்தப்பட்டதாக ஈராக்கிய அரசு …

Read More »

ஓமான் நாட்டின் குறிப்பிட்ட சில துறைகளில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது.

வர்த்தகம், பொருளாதாரம், காப்புறுதி, வாகன விற்பனை, அரச திணைக்களங்கள், கடைகள் போன்ற துறைகளில் வெளி நாட்டவர்களை வேலைக்கமர்த்துவது தடை செய்யப்படுவதாக ஓமான் நாட்டின் தொழிலமைச்சு அறிவித்திருக்கிறது. வாகன ஓட்டுவதற்கும் ஓமான் குடிமக்களை மட்டுமே வேலைக்கமர்த்தலாம். ஏற்கனவே இத்துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் விசாக்கள் புதுப்பிக்கப்படமாட்டாது. கடந்த வருடம் முதற்பகுதியில் ஓமான் தனது நாட்டு மக்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாத்தை ஓழிக்கவும், நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்ப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளிலொன்றாக வெளி நாட்டவர்களை …

Read More »

எமிரேட்ஸில் இஸ்ராயேலின் தூதுவராலயம் திறந்துவைக்கப்பட்டது.

மாஜி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மத்தியகிழக்கு – இஸ்ராயேல் உறவுகளை இணைக்கும் திட்டத்தின்படி நாலு மாதங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் முதலாவது நாடாக இஸ்ராயேலுடன் தனது நட்பு நாடு உறவுகளை ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக 24.01 ஞாயிறன்று எமிரேட்ஸுக்கான இஸ்ராயேலின் தூதுவராலயம் அபுதாபியில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே தருணத்தில் எமிரேட்ஸ் அரசு தனது தூதுவராலயத்தை தெல் அவிவில் திறப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும்படி நாட்டின் அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக டுவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டது. …

Read More »

கொவிட் 19 தடுப்பு மருந்து விற்பனையைத் தம்மிடம் வைத்திருப்பதால் பணக்கார நாடுகளே பாதிக்கப்படுவார்கள்!

கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிப்பதற்கான போட்டிகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆராய்ச்சிக்கால நேரத்தில் முதலீடுகள் கொடுத்து ஒப்பந்தங்கள் செய்துகொண்டதன் மூலம் விற்பனைக்கு வந்திருக்கும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஏகபோக உரிமைகளை வளர்ந்த நாடுகளே தம் கையில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக உலகளவில் ஏற்படப்போகும் சமூக, ஆரோக்கிய, பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏழை, வளரும் நாடுகளைப் பாதிப்பதுக்கு இணையான பாதிப்புக்களைப் பணக்கார நாடுகளும் அனுபவிக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. இதுபற்றி வெளிவந்திருக்கும் …

Read More »

உள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 500 மீற்றர் ஆழத்தில் மாட்டிக்கொண்டிருந்த சீனாவின் சுரங்கத் தொழிலாளர்களில் பாதிப்பேரை உதவிப்படை மீட்டெடுத்தது. முதலாவதாக வெளியே எடுக்கப்படுபவரை இயந்திரம் மூலம் வெளியே தூக்கிப் போர்வைகளுக்குள் மூடிச் சிகிச்சைக்குக் கொண்டு செல்வதை அரச தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம். “எதிர்பாராதவிதமாக முதல் படலங்களைத் தோண்டியெடுத்தபின் பெரிய இடைவெளியை நாம் சந்திக்க முடிந்தது. அதனால் அதிர்ஷ்டவசமாக எமது காப்பாற்றும் படையால் 11 பேரை …

Read More »

ஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.

சர்வதேச ரீதியில் தேடப்படுகிறவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சீன – கனடியக் குடிமகன் ஸே சி லொப் [Tse Chi Lop] என்பவரை நெதர்லாந்து பொலீஸ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆசியாவில் என்றுமில்லாத ஒரு பெரிய போதைப் பொருள் சாம்ராச்சியத்தின் தலைவன் ஸே சி லொப் என்று ஓரிரு வருடங்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது. சாம் கோர் சிண்டிகேட் என்றழைக்கப்படும் போதைப் பொருள் சாம்ராச்சியத்தை மக்காவ், ஹொங்கொங்க் மற்றும் …

Read More »

கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark Web” இல் கொவிட் 19 சம்பந்தப்பட்ட பல விதமான விளம்பரங்களைக் காணமுடிகிறது. தடுப்பு மருந்து மட்டுமன்றி, தடுப்பு மருந்து பெற்றதற்கான போலிச் சான்றிதழ், தொற்று இல்லையென்று காட்டும் போலிச் சான்றிதழ்கள் போன்றவையும் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரங்கள் காணக்கிடக்கின்றன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து மனிதர்களிடம் …

Read More »