சுழலும் கட்டடங்கள் – எதிர்கால கட்டட நிர்மாணம்

எதிர்கால கட்டட நிர்மாணத் துறை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு விடையாக இந்த கீழே உள்ள ஒளிப்பதிவு வெளியாகியுள்ளது.கட்டட நிர்மாணத்துறையில் ஒரு காலத்தில் தரையோடு மட்டுமே இருந்த கட்டடங்கள், பல்துறை வளர்ச்சியடைந்து புதிய புதிய வடிவங்களில் அழகியலையும் உள்ளடக்கி கட்டடங்களை அமைக்கும் முயற்சிகளில் வெற்றிகண்ட உலகம் இப்போது கட்டடங்கள் சுழன்றால் எப்படியிருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளது.உயர்ந்த மாடிக்கட்டங்களில் ஓரிரண்டு மட்டங்களை சுழல்வதற்கு ஏற்றதாக அமைத்து வெற்றி கண்ட உலக கட்டட நிர்மாணத்துறை, இப்போது எல்லா தரை மட்டங்களையும் சுழலச்செய்ய திட்டமிட்டுள்ளது. கட்டட நிர்மாணத்துறையில் பல வடிவங்களை உள்ளடக்கியதாக பல்வகை கட்டடங்களை காணக் கூடியதாக இருக்கும் துபாய் மாநகரத்தில் தான் அந்த முயற்சி.அந்த முயற்சியில் ஒவ்வொரு கட்டட தரை மட்டங்களையும் வெவ்வேறு வேகங்களில் சுற்ற வைக்கவும் அதனை விரும்பியவாறு கட்டுப்படுத்தக்கூடியதாகவும் நிர்மாணிக்கபடவுள்ளது.அதுமட்டுமல்லாமல் ஒரே நாளில் சூரிய உதயம்,அஸ்தமனம் இரண்டையும் பார்க்கக் கூடியதான வேகத்திலோ அல்லது யன்னலினூடாக வெவ்வேறு இயற்கை காட்சிகளை பார்க்க கூடியதாக சுழல வைக்க அதற்குரிய கட்டுப்பாட்டுடன் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம்.அறிவியல் துறையின் முன்னேற்றங்களில் கட்ட நிர்மாணத்துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியாக இதை பார்க்கபடுகிறது.
அதன் விவரண காட்சி இங்கே

https://www.vetrinadai.com/featured-articles/france-3d-house/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *