மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ணம் – லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் வி.க. சம்பியன்

ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 29ம் திகதி ஒகஸ்ட் மாதம் நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவில் ஜேர்மனி லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

நான்கு பந்து பரிமாற்றங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் அணிக்கு எட்டுபேர் கொண்ட போட்டியாக மொத்தமாக 12 அணிகள் பங்குபற்றியிருந்தன.

மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சுற்றுப்போட்டி, முதற்சுற்றுப் போட்டிகள் நிறைவுகாண,
இறுதிப்போட்டியில் ஜேர்மனி லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து பிரான்ஸ் அன்பு பறவை அணி மோதியது.
நிறைவில் ஜேர்மனி லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் அணியினர் பிரான்ஸ் அன்பு பறவை அணியை வெற்றிகொண்டு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட ஜேர்மனி லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் அணியினருக்கு வெற்றிக்கிண்ணமும் 750€ பணப்பரிசும்.வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பிரான்ஸ் அன்பு பறவை அணியினருக்கு வெற்றிக்கிண்ணமும் 500€ பணப்பரிசும் வழங்கப்பட்டது.

ஆட்டநாயகனாகவும், தொடர் ஆட்டநாயகனாகவும் லிவர்குசன்
தமிழ் ரேஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த அலி தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 100€ பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.
சிறந்த துடுப்பாட்ட வீரராக அன்பு பறவை அணியைச்சேர்ந்த அகிலன் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 50€ பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.

சிறந்த பந்துவீச்சாளராக லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் அணியைச்சேர்ந்த சபேசன் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 50€ பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.

அத்தொடு போதிய வெளிச்சம் இன்மையால் மூன்றாம் இடத்திற்கான போட்டி நடைபெறவில்லை.மூன்றாம் இடத்திற்காக போட்டியிட இருந்த அணிகளாகிய ஜேர்மனி ஆகன் சிவப்பு அணி, ஜேர்மனி டோட்மூன்ற் இளந்தளிர் அணி  ஆகியன மூன்றாம் இடத்தை அன்று பகிர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *