உண்மைத் திரைக்கதைக்கான சர்வதேச விருது பெற்ற “வெந்து தணிந்தது காடு”

சர்வதேச திரைப்படவிழாவில் உண்மைத்திரைக்கதைக்கான விருதை ஈழத்திலிருந்து பங்குபற்றிய “வெந்து தணிந்தது காடு/Dark days of heaven” என்ற திரைப்படம் பெற்றிருக்கிறது. அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற Auber International Film Festival இலேயே இந்த விருதைபெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது. 5000 திரைப்படங்களுக்கு மேல் போட்டியிட்ட திரைப்படங்களுக்குள்ளேயே இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை ஈழத்திலிருந்து நீண்டகாலமாக திரைச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இயக்குனர் திரு மதிசுதா இயக்கியுள்ளார். அத்துடன் இது மக்கள் குழுப்பணச்சேர்ப்பு முறையில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்.

அது மட்டுமல்லாமல் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சுயாதீன திரைப்படங்களுக்கான விருதுவழங்கும் விழாவிலும் இரண்டு விருதுகள் கிட்டியிருக்கிறது. Golden Sparrow International Film Festival இல் வெந்து தணிந்த காடு என்ற இந்த திரைப்படம் அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் மதிசுதா அவர்களும் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக சிறப்பு நடுவர் விருதையும் பெற்றுக்கொண்டது.

இந்த திரைக்கதை ஈழத்தின் மக்கள் கதையை திரைப்படமாக்கியிருப்பதாக சொல்லும் இயக்குனர் மதிசுதா , மக்கள் குழு பணச்சேர்ப்பு (Growedfunding ) மூலம் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் விருதுகளை தொடர்ச்சியாக பெற்றிக்கொண்டிருப்பது பற்றி தன மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
மூடப்படட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்துகிடப்பதாக கதையாசிரியர் சொல்லும் இந்த திரைப்படம் தொடர்ந்தும் பல உள்ளூர் சர்வதேச விருதுகளை குவிக்க வேண்டுமென வெற்றிநடை வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *