Friday , February 26 2021
Breaking News
Home / கொவிட் 19 செய்திகள்

கொவிட் 19 செய்திகள்

கொவிட் 19 தொடர்பான செய்திகள்

சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?

சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன் கப்பாஷ் தெரிவித்தார். அது எந்த நாட்டால் கொடுக்கப்பட்டவை என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஒரு நட்பான நாட்டால் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர் நாட்டின் பெயரை வெளியிடாததால் அதுபற்றிய ஊகங்கள் ஊடகங்களில் சுழன்றன. சீனாவுடனும், ரஷ்யாவுடனும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக சிரியா …

Read More »

கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது கோவக்ஸ் திட்டம். பல நாடுகளின் தேவைகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கான பணக்கார நாடுகளின் உதவிகளையும் பெற்று, ஒன்றுபடுத்துவதே கோவக்ஸ் திட்டமாகும். ஆனால், பணக்கார நாடுகள் பலவும் நேரடியாகத் தமக்கு வேண்டிய தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்துக்கொண்டு பெற்றுக்கொள்ள ஆரம்பித்தன. அதனால், ஏற்பட்ட தடுப்பு மருந்துத் தட்டுப்பாட்டால் …

Read More »

குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.

லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங்கி லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவற்றின் மூலம் 60,000 Pfizer-BioNTech தடுப்பு மருந்துகள் இம்மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.  இரகசியமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெருவின் வெளிவிவகார அமைச்சர் பதவி விலகினார். தமது உதவிகளுக்குக் கட்டாய நிபந்தனையாக “பலவீனமானவர்களுக்கு முதலுரிமை,” என்பது உலக வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனாலும், அரசியல் லஞ்ச ஊழல்களுக்குப் பெயர்போன லெபனானில் …

Read More »

2020 இல் சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதை முந்திய வருடங்களை விட 7.9 % அதிகம்.

கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இறந்தவர்கள் தொகையைக் கடந்த வருடத்தில் இறந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் இறந்தவர்கள் 7.9 % விகிதம் அதிகமாக இருக்கிறது. இப்படியான ஒரு அளவுக்கதிகமான இறப்பு சுவீடனில் 1918 ஸ்பானிய சளிக்காய்ச்சல் பரவியபோது தான் காணக்கூடியதாக இருந்தது. கடந்த பதினைந்து வருடங்களில் மிகக்குறைந்த மக்கள் தொகை அதிகரிப்பு 2020 இல் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 51,000 பேரால் சனத்தொகை அதிகரித்திருக்கிறது.  கடந்த வருடம் இறந்தவர்களில் ஸ்டொக்ஹோம் …

Read More »

ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.

கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் பிள்ளைகளுக்குத் திறக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் குறைவதாக இல்லை என்பதாலேயே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் தடுப்பூசி போடும் ஒழுங்கு முன்போடப்பட்டிருக்கிறது. நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் முன்னரைவிட வேகமானதாகத் தொற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. அவைகளை எதிர்நோக்கும் அதே சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் வரவழைக்கப்பட்ட தடுப்பு மருந்துகளைச் செலுத்தியும் வருகிரது …

Read More »

அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.

வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மருத்துவ சேவையினரின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். உலகிலேயே அமெரிக்காவில் தான் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகை மிக அதிகமாக இருக்கிறது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள், வியட்நாம் போர் ஆகியவைகளில் இறந்தவர்களின் மொத்தத் தொகையைவிட அதிகானவர்கள் இப்பெருவியாதியால் இறந்திருக்கிறார்கள். …

Read More »

பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. தனது நாட்டின் மூன்றிலொரு பகுதி மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசியைக் கொடுத்த இஸ்ராயேல் பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு அதைக் கொடுப்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாலஸ்தீன அதிகாரத்தின் பொறுப்பாகும் என்று சொல்லிவிட்டது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி …

Read More »

பிரிட்டனில் 4 கட்டத் தளர்வு சர்வதேச பயணங்களுக்குமே வரை தொடர்ந்து தடை!

பிரிட்டனில் கடந்த சுமார் ஒன்றரை மாத கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிக மெதுவாக – படிப்படியாக-நான்கு கட்டங்களில் தளர்த்துகின்ற அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று வெளியிட்டிருக்கிறார். தற்போது அமுலில் இருக்கின்ற பொது முடக்க கட்டுப்பாடுகள் (lockdown) மார்ச் 8,மார்ச் 29, ஏப்ரல் 12, மே17, ஜூன் 21 ஆகிய திகதிகளை உள்ளடக்கிய நான்கு கட்டங்களில் படிப்படியாக – மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் – முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று …

Read More »

கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று நம்பித் தென்னாபிரிக்க இராணுவம், தனது படையினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க சட்டத்துக்கெதிரான, அவ்வியாதிக்கெதிராகப் பயன்படாத ஒரு மருந்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.  கியூபாவிலிருந்து Heberon Interferon alfa-2b என்ற மருந்தை தென்னாபிரிக்காவின் இராணுவத் தலைமை சுமார் 17.7 மில்லியன் டொலர்களைக் கொடுத்து வாங்கியிருக்கிறது …

Read More »

4,500 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு நீங்கள் கொவிட் 19 கிருமிகளை விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளத் தயாரா?

முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும்  4,500 பவுண்டுகள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக பிரிட்டிஷ் அரசால் 33.6 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பங்கெடுக்க 18 – 30 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானவர்கள் மட்டும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் போன்றவைகளோ மற்றைய கொவிட் 19 க்கு பலவீனமான …

Read More »