Monday , January 25 2021
Breaking News
Home / செய்திகள் / சினிமா

சினிமா

ஆரி அர்ஜூனனின் வெற்றிக் கொண்டாட்ட அழைப்பு

அண்மையில் இவரின் பெரு வெற்றி பொதுவெளியில் பலராலும் பேசப்பட்டதொன்று.நேர்மையுடன் கருத்துமோதல்களை போட்டியின் உள்ளே ஆணித்தரமாக  முன்வைத்ததும், விளையாட்டில் பங்குபற்றிய பலராலும் உள்ளுக்குள்ளே குறி வைத்து தாக்கப்பட அல்லது ஒதுக்கப்பட, மக்களின் வாக்குகளால் அவர் நேர்மைக்காக காப்பாற்றப்பட்டு போட்டியில் தக்கவைக்கப்பட்டார் என்பதும் இவரின் பெரு வெற்றிக்கான மிக முக்கியமாக பேசப்படும்  காரணங்களாகும். அவர் தான் இந்த ஆரி அர்ஜுனன் இந்த நுணுக்கங்களை  அவர் அந்தவிளையாட்டுக்கான யுக்தியாக மட்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், பல்வேறு …

Read More »

ஒஸ்கார் விருதுகளை அள்ளிய சினிமாவால் பிரபலமான தாய்லாந்து நகரம் வெறுமையாகிறது.

தாய்லாந்தில் காஞ்சனபுரியில் க்வா நொய் ஆற்றைக் கடக்கும் பாலம் “The Bridge over the River Kwai” என்ற சினிமாவால் பிரபலமாகி உலகெங்குமிருந்தும் சினிமா ரசிகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு தலமாகும். தாய்லாந்தில் கொரோனாப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளால் காஞ்சனபுரியிலும் பொது முடக்கம் அறிவிக்கப்படவே அங்கே தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகளெல்லாம் வெளியேறியபின்னர் வெளியிலிருந்து எவரும் வரலாகாது என்ற கட்டுப்பாடு ஆரம்பமாகியிருக்கிறது. காஞ்சனபுரியில் நாலே நாலு பேர் மட்டுமே கொரோனாத்தொற்றால் …

Read More »

6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021

நேற்று மாலை (26 .12 .2020)  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே கொள்ளக்கூடிதாக அரங்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.  கொவிட் 19 க்கு எதிரான சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தன. விழாவுக்கான ஒழுங்குகளை கிருதர்சன் நிக்கொலஸ் மேற்கொண்டு நிகழ்வை ஆரம்பித் வைத்தார். அகிலன் பாக்கியநாதன் உட்பட சபையிலிருந்த திரைப்பட ஆர்வலர்களள் …

Read More »

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று பெர்லினிலிருந்து இணையத்தளம் மூலமாக 33 வது ஐரோப்பிய சினிமா விழா நிகழ்ந்தேறியது.

சிறந்த சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் பரிசுகளை வென்ற டென்மார்க்கின் “Another Round” நிகழ்ச்சியின் அதிரடி வெற்றியாளராகியது. அச்சினிமாவை இயக்கிய தோமஸ் விண்டர்பெர்க் சிறந்த இயக்குனர் பரிசையும், முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த மட்ஸ் மிக்கேல்ஸன் சிறந்த நடிகர் பரிசையும் வென்றனர். அதே சினிமாவுக்குக் கதையமைப்புச் செய்ததுக்காக தோபியாஸ் லிண்ட்ஹோல்முடன் இணைந்து பரிசைப் பெற்றுக்கொண்டார் தோமஸ் விண்டர்பெர்க்.  இந்தச் சினிமா சமீபத்தில் டென்மார்க்கில் வெளியிடப்பட்டுப் பெரும் பார்வையாளர் வெற்றியாகவும் …

Read More »

அரச மரியாதையுடன் பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் மண்ணுடன் சங்கமம்

வாழ்நாள் சாதனைக்குரிய மக்கள் மனங்களை வென்ற பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் 78 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் மண்ணில் சங்கமமானது.திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரின் பண்ணை வீட்டில் உடல் சமயக்கிரியைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கினை அவரின் மகன் பாடகர் எஸ்பிபி சரண் கண்ணீருடன் செய்து வைத்தார். திரையுலகின் பல கலைஞர்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். அத்துடன் இந்திய பிரதமர்,ஜனாதிபதி,தமிழக முதலைமைச்சர்,எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் …

Read More »

யாழில் கூடும் தமிழ் திரைத்துறை கலைஞர்கள்

வடமாகாண திரைத்துறைக் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி மாலை நான்கு மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகத்தினர் பலரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது தந்தை செல்வா கலையரங்கம் மற்றும் யாழ் மத்திய கல்லூரி ஆகிய மண்டபங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த நேரமான சரியாக 4 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இந்நிகழ்வில் திரைத்துறை சார் ஆளுமைகள், …

Read More »

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நலம் பெற இசைரசிகர்கள் உலமெங்கும் பிரார்த்தனை

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த பாடகர்களில் பாடும்நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனித்துவமான இடத்தை பெறுபவர். தமிழ்,ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு கன்னடா என்று பலமொழிகளிலும் பாடி புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி அவர்களை கொரோனா தொற்று கடந்த வாரத்திலிருந்து ஏற்பட்டு மிகவும் ஆபத்தான கட்டங்களை அவர் நெருங்கி வருகின்றமை ரசிகர்களை மிக அதிச்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.. அதை தொடர்ந்து அவர் பூரண குணமாக வேண்டி இதில் தமிழக ரசிகர்கள் …

Read More »

13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று

நோர்வே நாட்டில் உருவாக்கப்பட்ட நோர்வே தமிழ் பிக்சேர்ஸ் வழங்கும் 13 + to hell திரைப்படம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24:2:2019) பிற்பகல் 4:30 மணிக்கு ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படவுளளது. ஐரோப்பியக் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தொலைந்து போன நிஜத்தின் தேடல் என்று உப தலைப்பு இடப்பட்டிருக்கிறது. முற்றிலும் இலவச காட்சியாகக் காண்பிக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தை எம் மக்கள் பலரும் வந்து பார்வையிட்டு எம் கலைஞர்களுக்கு …

Read More »

பரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்

திரையுலப்பிரமுகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்ட பாராட்டப்பட்ட , திரைப்பட இயக்குனர் செழியனின் டூ லெட் To Let திரைப்படம் பரீஸ் மாநகரத்தின் திரை அரங்கிற்கும் மக்கள் பார்வைக்காக திரையிடப்படவிருக்கிறது. பெரு நகரத்தில் சிறு கனவை எளிமையான சினிமாவாக பிரமாண்டமான திரை அரங்கத்துக்குள் கொண்டு வந்ததில் செழியன் வெற்றிபெற்றிருப்பதாக பலரும் பாராட்டுவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. திரைப்படங்களுக்கு இருக்கவேண்டிய பிரமாண்டமாக, அதனோடு இணைந்து திரைக்கதையின் முக்கியத்துவத்துவத்தை உணர்ந்த செழியன் …

Read More »

மீடூ அலை மோர்கன் ப்ரீமனையும் தாக்குகிறது

பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ப்ரீமன் தங்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், தொல்லைகள் கொடுத்ததாகவும் 16 பெண்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். 2017 ம் ஆண்டு முதல் மீடூ என்ற பெண்கள் குற்றச்சாட்டு அலை ஆரம்பித்தது முதல் பிரபல நடிகர்கள் உட்பட உலகின் அதிகாரத்தில் இருந்த ஆண்கள் பலரும் குற்றஞ்சாட்டப்பட்டுப் பெரும்பான்மையானவர்கள் விலாசம் தெரியாமலே போய்விட்டார்கள். தற்போது 80 வயதான மோர்கன் ப்ரீமன் சுமார் 50 வருடங்களாக ஹோலிவூட்டில் கோலோச்சி வருபவர், 2005 …

Read More »