Monday , January 25 2021
Breaking News
Home / செய்திகள் / விளையாட்டு

விளையாட்டு

ஆண்களின் ஐஸ் ஹொக்கி கோப்பைப் பந்தயங்கள் பெலாரூசிலிருந்து மாற்றப்பட்டன.

பெலாரூசின் ஜனாதிபதி லுகஷெங்கோ அதிகாரத்தின் மீது, தான் வைத்திருக்கும் பிடியைத் தளர்த்தத் தொடர்ந்தும் மறுத்து வருகிறார். 26 வருடங்களாக பெலாரூசை ஆளும் ஐரோப்பாவின் சர்வாதிகாரி ஆகஸ்ட்டில் நடந்த தேர்தலில் தானே வென்றதாகப் பிரகடனப்படுத்தியதும் நாடே திரண்டெழுந்தது. தேர்தல் ஒழுங்காக நடக்கவில்லையென்று சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டார்கள். தேர்தல் முடிவுகளும் அதுவரை கணிக்கப்பட்ட லுகஷெங்கோவின் தோல்விக்கு மாறாக 79 விகிதத்தால் வென்றதாகக் குறிப்பிடப்பட்டதை மக்கள் நம்பவில்லை. நாடெங்கும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் எழுந்தன. எதையும் …

Read More »

சாதனையில் பெலேயைத் தாண்டிய லியனெல் மெஸ்ஸி.

தனது பர்ஸலோனா உதைபந்தாட்டக் குழுவுக்காக 644 வது கோலை வல்லடோலிட் (Valladolid) குழுவுக்கெதிராகப் போட்டதன் மூலம் லியனெல் மெஸ்ஸி சர்வதேச விளையாட்டு வீரர் ஒரே குழுவுக்காக விளையாடிப் போட்ட கோல்களின் எண்ணியில் பெலேயின் சாதனையை முறியடித்திருக்கிறார். “நான் உதைபந்தாட்டம் விளையாட ஆரம்பித்தபோது எந்த ஒரு சாதனையும் போடுவேனென்று கனவு கண்டதில்லை, நிச்சயமாக நான் இன்று செய்த இந்தச் சாதனையை. எனக்கு இத்தனை வருடம் உதவிசெய்தவர்கள் எல்லோருக்கும் இதற்காக நன்றி செலுத்துகிறேன்,” …

Read More »

முதலாவது தேசிய பெண்கள் உதைபந்தாட்டப்போட்டிகளை நடாத்திச் சரித்திரம் படைக்கும் சவூதி அரேபியா.

பெண்கள் உதைபந்தாட்டத்தில் பங்குகொள்வது மட்டுமல்ல அவற்றை மைதானத்தில் சென்று பார்ப்பதே சிலவருடங்களுக்கு முன்னர் வரை தடுக்கப்பட்டிருந்த சவூதி அரேபியா நாட்டின் பெண்களுக்குத் திட்டமிட்டு அவ்விளையாட்டை அறிமுகப்படுத்துவதுடன் தேசியக் கோப்பைக்கான விளையாட்டுகளையும் நடத்தியிருக்கிறது.  சவூதி அரேபிய அரசின் விளையாட்டு அமைச்சினால் நாடு முழுவதுமுள்ள நகரங்களில் 17 – 30 பெண்களுக்கான உதைபந்தாட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் 24 குழுக்களிடையே தேர்வுகள் நடாத்தப்பட்டன. அவற்றில் வெற்றிபெற்ற குழுக்கள் கால், அரை இறுதிப் …

Read More »

மரடோனாவின் உடலை எரிக்கக்கூடாது என்று ஆர்ஜென்ரீனிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உதைபந்தாட்டவீரர் மரடோனா வாழ்நாளில் செய்த பாவங்களெல்லாம் மீதியாக இருப்பவர்களுக்குப் பூதங்களாக எழுந்திருக்கின்றன. அவரது சொத்துக்களின் பெறுமதியை முடிவுசெய்வது, அதன் பின்னர் அவைகளை யார் யாருக்குப் பிரிப்பது என்பதில் பலர் உரிமை கோரி வருகிறார்கள்.  இதுவரையிலான கணிப்பீட்டில் மரடோனா விட்டுச்சென்ற சொத்துக்களின் பெறுமதி சுமார் 400 மில்லியன் பெறுமதியானவை என்று குறிப்பிடப்படுகிறது. அவைகளின் மதிப்பைத் தெளிவாக அறியும் நடவடிக்கைகள் நடக்கும் அதே நேரத்தில் அவரது பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு இதுவரை அறியாத …

Read More »

LPL 2020 கிண்ணம் Jaffna Stallions வசம்

LPL 2020 என அழைக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் 2020 வெற்றிக்கிண்ணத்தை Jaffna Stallions அணி சுவீகரித்துள்ளது. இறுதிப்போட்டியில் சந்தித்த Galle Gladiators அணியை 53  ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற Jaffna Stallions அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி Jaffna Stallions அணி இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது. அணியில் ஆகக் கூடுதலாக சொகைப் …

Read More »

2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.

பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது. சவூதி அரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய அப்போட்டிகளை நடாத்த விரும்பும் நாடுகளுடன் போட்டியிட இறங்கியிருக்கிறது, “உதைபந்தாட்ட உலகில் ஒரு தூங்கும் அரக்கன்” என்று சப் பிளத்தரால் குறிப்பிடப்பட்ட இந்தியா. ஏற்கனவே 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 2021 உதைபந்தாட்டப் போட்டிகள், …

Read More »

இரண்டாம் அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் உலகின் பல நாடுகளில் பரவி வருவது போலவே ஜப்பானிலும் நிலைமை கவலைக்குறியதாகவே இருந்தாலும் திட்டமிட்டபடி இவ்வருடத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதியாகச் சொல்கிறது ஜப்பான். ஜப்பானின் உறுதி பல முனைகளிலும் சோதிக்கப்படுகிறது. ஜப்பானியர்களிடையே நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி சுமார் 25 விகிதமானவர்களே இப்போது அவ்விளையாட்டுக்களை நடத்துவதில் உற்சாகமாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் போட்டிகளைத் தள்ளிப்போட அல்லது முழுசாக நிறுத்திவிட விரும்புகிறார்கள். ஒலிம்பிக்ஸுக்கான செலவுத் திட்டத்திலும் …

Read More »

சிறிலங்கா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து தமிழ் பேசும் நடுவர்

சிறீலங்கா கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் நடுவராக வடமாகாணத்திலிருந்து பங்குபற்றும் ஒருவராக திரு கிருபாகரன் திகழ்ந்து வருகிறார். பாடசாலைப் பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக விளங்கிய கிருபாகரன், தனது கிரிக்கெட் நடுவராக உள்ள துறையில் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஆரம்பித்து, அதில் சிறந்துவிளங்கி , சிறீலங்கா கிரிக்கெட நடுவர்களுக்கான பரீட்சையில் படிப்படியாக தேர்ச்சி பெற்று தன்னை முதல் தர போட்டிகளின் நடுவராக நிலை நிறுத்தியிருக்கிறார். பல போட்டிகளில் நடுவராக பங்குபற்றிக்கொண்டிருக்கும் …

Read More »

விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசம்

வருடாவருடம் நடைபெறும் பாவலன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் இந்த வருடம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ்  வசமானது. பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவனும் கல்லூரி காலத்திலிருந்து கிரிக்கெட் வீரனுமாக திகழ்ந்த பாவலன், 2015ம் ஆண்டு, மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்தில் உயிர் நீர்த்தவர். அந்த மிக சிறந்த கிரிக்கெட் வீரனை நினைவுகூர்ந்து வருடாவருடம் நடைபெறும் மென்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடமும் ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports Club UK) ஏற்பாட்டில் The …

Read More »

மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ணம் – லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் வி.க. சம்பியன்

ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய மாவீரர் நினைவேந்தல் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஜேர்மனி ஆகன் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 29ம் திகதி ஒகஸ்ட் மாதம் நடைபெற்றது.நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவில் ஜேர்மனி லிவர்குசன் தமிழ் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. நான்கு பந்து பரிமாற்றங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் அணிக்கு எட்டுபேர் கொண்ட போட்டியாக மொத்தமாக 12 அணிகள் பங்குபற்றியிருந்தன. மிகவும் சிறப்பாக ஒழுங்கு …

Read More »