Friday , February 26 2021
Breaking News
Home / செய்திகள் / தொழிநுட்பம்

தொழிநுட்பம்

செவ்வாயில் வீசும் காற்றின் ஒலி, பூமிக்கு அனுப்பியது நாஸா ஹெலிஅரிய வீடியோ காட்சிகளும் அங்கு பதிவு

மர்மங்கள் நிறைந்த சிவப்புக் கிரகமாகிய செவ்வாயில் தரையிறங்கிய நாஸாவின் மினி ஹெலிக்கொப்ரர் ட்ரோன் அங்கு வீசும் காற்றின் ஓசையைத் துல்லிய மாகப் பதிவு செய்து(First Audio Recording) பூமிக்கு அனுப்பி உள்ளது. “Perseverance robot” என்கின்ற தானியங்கி ஊர்தியுடன் இணைக்கப்பட்ட அந்தச் சிறிய ஹெலியில் பொருத்தப்பட்ட நுண் கமெராக்கள் உலகம் இதுவரை கண்டி ராத செவ்வாயின் தரைத் தோற்றப்படங் களையும் பூமிக்கு அனுப்பி வைத்துள்ள ளன. கடந்த வியாழனன்று (பெப்ரவரி …

Read More »

“பெருமைக்குரிய கூட்டு முயற்சி” – மக்ரோன் புகழாரம்

பிராங்கோ-அமெரிக்க (Franco-American) கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாயின் தரையில் வெற்றிகரமாக இறங்கியிருப் பதை வரவேற்றுள்ள அதிபர் மக்ரோன், பெருமைப்படக் கூடிய அற்புதமான ஒரு குழுச் செயற்பாடு (“magnificent teamwork”) அது என்று புகழாரம் சூட்டியுள்ளார். நேற்றிரவு பாரிஸ் நகரில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சிக் கற்கைகள் நிலையத்தில் (Centre national d’études spatiales-Cnes) இருந்தவாறு விண்கலம் தரை இறங்குவதை அவதானித்த மக்ரோன் அதன் பிறகு அங்கு உற்சாகத் துடன் …

Read More »

போர்ட் தனியார் வாகனங்கள் எல்லாமே 2030 இல் மின்கலத்தால் இயக்கப்படுபவையாக இருக்கும்.

தனியார் போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒவ்வொன்றாக எடுத்திருக்கும் முடிவுகளில் காணலாம். தமது சுற்றுப்புற சூழலில் நச்சுக்காற்றுப் பரவலைக் குறைப்பதற்காக அந்த நாடுகள் எடுத்த முடிவுகளின் விளைவாக வாகனங்களில் பாவிக்கப்படும் சக்தியும் மாற்றமடைகிறது. ஜெர்மனியின் வொக்ஸ்வாகன் நிறுவனம் 2026 இல் தனது தனியார் வாகனங்களெல்லாம் மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்கும் என்று அறிவித்தது. 70 புதிய வகை மின்சாரத் தனியார் வாகனங்களைத் தாம் …

Read More »

விண்வெளியில் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி ஆங்காங்கே செயற்கைக் கோள்களை நிறுத்தி வைக்கும் டாக்சி சேவையை பங்களூர் நிறுவனம் ஆரம்பிக்கிறது.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெவ்வேறு காரணத்துக்காக அனுப்புவதிலிருக்கும் தற்போதைய செலவைக் குறைக்கும் எண்ணத்திலேயே orbital transfer vehicle [OTV] என்ற திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிறது பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் [Bellatrix Aerospace] என்ற பங்களூர் நிறுவனம்.  விண்வெளியில் வெவ்வேறு வட்டப்பாதைகளில் வேண்டிய இடத்தில் செயற்கைக் கோள்களை எடுத்துச் சென்று நிறுவுவதே இந்த வாகனத்தின் [OTV] செயற்பாடாக இருக்கும். எனவேதான் அதை விண்வெளி டாக்ஸி என்று குறிப்பிடலாம். பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் யஷாஸ் கரணம் இதை …

Read More »

உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான திட்டமே எவரும் இலகுவாகக் காவிக்கொண்டு திரியக்கூடிய கொரோனாக் கடவுச்சீட்டு ஆகும். டென்மார்க்கின் வர்த்தக அமைச்சர் மோர்ட்டன் போடஸ்கூவ் அரசாங்கம் சிந்தித்துவரும் கொரோனாக் கடவுச்சீட்டுகள் தயாராக சுமார் மூன்று மாதங்களாகலாம் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  “அந்த டிஜிடல் அடையாளத்தை எதற்காகப் …

Read More »

பிரிட்டனின் கொவென்ரி நகரில் பறக்கும் கார்களுக்கான விமான நிலையம் தயாராகிறது.

பறக்கும் கார்கள், டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் ஆகியவைகளுக்கான ஒரு விமான நிலையம் கொவென்ரி நகரில் தயாராகி வருகிறது. இதுபோன்ற சிறிய பறக்கும் கருவிகளுக்கான உலகத்திலேயே முதலாவது விமான நிலையமாக இது இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. பறக்கும் கார்கள் தொழில்நுட்பம், தயாரிப்பு என்பவை ஏற்கனவே நிஜமாகியிருந்தாலும் பாவிக்கு இன்னும் வழமையாகவில்லை. வெவ்வேறு நகரங்களும், நிறுவனங்களும் இப்படியான கருவிகளை மிக விரைவில் சந்தைப்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.  கொவென்ரியில் இந்த விமான நிலையத்தைத் தயார்ப்படுத்தும் …

Read More »

வட்ஸப்பிலிருந்து பல மில்லியன் பேர் வரையறைகளுள்ள சிறிய தீவுகளை நோக்கிப் புலம்பெயர்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் வட்ஸப் நிறுவனம் தனது பாவனையாளர்களின் விபரங்களை முன்னரை விட அதிகமாகத் தனது உரிமையாளரான பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. அதையடுத்து சுமார் 2 பில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட வட்ஸப்பிலிருந்து சில மில்லியன் பேராவது டெலிகிராம், சிக்னல் போன்ற நிறுவனங்களுக்குப் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இணையத் தொடர்புகள் மூலமாகத் தொலைபேசித் தொடர்புகளையும், குறுஞ்செய்திகளையும் அனுப்புவதற்காகப் பாவிக்கப்படும் வட்ஸப் அந்த வகைச் சேவைகளைக் கொடுப்பதில் இதுவரை உலகிலேயே மிக …

Read More »

பாரிஸில் “பறக்கும் டாக்சி” சேவை, பரீட்சார்த்தப் பறப்பு ஜூனில்!

பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு ‘பறக்கும் டாக்சிகள்’ (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு மேலே சேவையில் ஈடுபடவுள்ள பறக்கும் டாக்சிகளின் முதலாவது பரீட்சார்த்த ஓட்டம் வரும் ஜூன் மாதம் பொந்துவாஸில் உள்ள ஓடு தளத்தில்(Pontoise aerodrome) நடத்தப்படவுள்ளது.பறக்கும் டாக்சி சேவையை நடத்துவதற்கான டாக்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவற்றைத் தயாரிக்கின்ற 30 வெளிநாட்டு …

Read More »

பின்லாந்தின் தொழில்நுட்பத்தால் பொல்சனாரோ தன் பொய்களை மறைக்கிறாரா?

பின்லாந்தின் நிறுவனமொன்று தனது நுணுக்கமான தொழில்நுட்பத்திலான காடுகளைச் செயற்கைக் கோளால் கண்காணிக்கும் இயந்திரத்தை பிரேசிலுக்கு விற்பது பிரேசிலி உள்நாட்டுப் பிரச்சினையொன்றுக்குள் மூக்கை நுழைப்பது போலாகிவிட்டது என்று விமர்சிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் அமெஸான் காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்க அதைக் கண்காணிப்பதற்காக என்ற நோக்கத்தைக் குறிப்பிட்டு அந்த நாட்டு ஜனாதிபதியால் பின்லாந்தின் ICEYE என்ற நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்ட கண்காணிப்புக் கருவிகள் உண்மையிலேயே அக்காடுகள் அழிக்கப்படுவதை வெளியுலகம் தெரிந்துகொள்ளாமலிருக்கப் பயன்படுவதே என்று பிரேசில் …

Read More »

அன்னாசி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட நார் காற்றாடி விமானங்களைச் செய்ய உதவுகின்றன.

பல பாவனைகளுக்கும் உதவும் டிரோன் என்றழைக்கப்படும் சிறிய காற்றாடி விமானங்களின் பெரும்பாலான பாகங்களை அன்னாசி இலையிலிருந்து எடுக்கப்பட நார்கள் மூலம் தயாரிப்பதில் மலேசிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள்.  வீணாகக் குப்பையாக்குப்படும் அன்னாசி இலைகளைப் பாவிப்பதுடன் பாவிக்கப்பட்ட காற்றாடி விமானங்கள் சுற்றுப்புற சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாமலிருக்கவும் இந்த ஆராய்ச்சியின் வெற்றி பயன்படுகிறது. தயாரிக்கப்பட்ட இந்தக் காற்றாடி விமானங்கள் 1,000 மீற்றர் உயரத்தில் பறக்கக்கூடியதாக இருக்கின்றன அவை வான்வெளியில் 20 நிமிடங்கள் பறந்துகொண்டிருந்தன. மலேசியாவில் …

Read More »