Monday , January 25 2021
Breaking News
Home / செய்திகள் / அரசியல்

அரசியல்

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல் திட்டமிட்டது போல நடந்தேறும் என்றே தெரிகிறது. சுமார் பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போர்த்துகல் முதலாவது கொரோனாத் தொற்று அலையில் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடக் குறைந்த இறப்புக்களை நேரிட்டது. ஆனால், பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய …

Read More »

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021 ஆகிய இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் அதையொட்டியே உத்ரகாண்டைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியான ஸ்ருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர்கள்/சிறார்கள் மாநில சட்ட மன்ற முதல்வராக இருந்து வரும் ஸ்ருஷ்டி கோஸ்வாமி இந்த ஒரு நாள் மாநில …

Read More »

எல்லாரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளப் போகும் ஒரு சின்னம் – கமலா ஹாரிஸ்.

“உலகின் சிறார்களெல்லாம் எதையும், எவராலும் சாதிக்கமுடியும் என்று புரிந்துகொள்வார்கள், அதுதான் ஐக்கிய அமெரிக்கா,” என்று கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதி பதவியேற்க முன்னர் அறிமுகப்படுத்தினார். கமலா தேவி ஹாரிஸ் ஜனவரி 20 திகதியன்று அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்தின் வாசலினூடாக வெளியே இறங்கும்போது ஒரே உருவில் பற்பல கோணங்களைப் பிரதிநிதிப்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அமெரிக்காவின் இரண்டாவது அதியுயர்ந்த பதவியை அடையும் ஒரு பெண், கறுப்பின, ஆசிய இனத்தவரின் வழிவந்தவர். …

Read More »

யஸீதியர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஈராக்கிய அரசிடம் கோரிக்கை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகப் போரிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டமாக அழித்த இனங்களில் ஒன்று யஸீதியராகும். இவர்கள் ஈராக்கில் சிஞ்யார் மலைப்பிராந்தியத்தில் குர்தீஷ் மக்களிடையே வாழ்ந்து வந்தார்கள். பழங்குடியினரான யஸீதியர்கள் சரித்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூட்டங்கூட்டமாக அழிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். சிஞ்யார் மலைப்பிராந்தியத்தை முற்றுக்கையிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் சில ஆயிரம் யஸீதிகளைக் கொன்று, சுமார் பத்தாயிரம் பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று தங்களது பாலியல் …

Read More »

பதவியிலேறியவுடன் தடாலடியாக டிரம்ப்பின் முடிவுகள் சிலவற்றைக் கிழித்தெறிந்தார் ஜோ பைடன்.

“இவைகளை ஆரம்பிக்க இன்றையதைவிட நல்ல நேரம் வேறெப்போவும் கிடையாது,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன் தனது அலுவலகத்தினுள் நுழைந்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்த இணைவு, குடியேற்றச் சட்டங்களில் மாற்றம் மற்றும் கொரோனாப்பரவல் தடுப்பு விடயங்களிலான கோப்புக்களில் கையெழுத்திட ஆரம்பித்தார். மெக்ஸிகோ எல்லையில் கட்டப்படும் மதில் நிறுத்தப்பட்டது, மீண்டும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பில் இணைதல், அரச கட்டடங்கள் அனைத்திலும் முகக்கவசங்கள் அணிதல், சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் Keystone XL எரிநெய் …

Read More »

ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டு ரப் இசைக் கலைஞர்கள்.

தான் பதவி விலகமுதல் டிரம்ப் 70 தண்டனை மன்னிப்புக்களும் 73 தண்டனைக் குறைப்புக்களையும் செய்திருக்கிறார். ஆயுதங்கள் [துப்பாக்கி] சம்பந்தப்பட்ட குற்றங்கள் செய்த லில் வைன், கொடக் பிளக் ஆகிய ரப் இசைக்கலைஞர்களே அவர்கள். லில் வைன் 10 வருடத் தண்டனையும், கொடக் பிளக் 3 வருடங்கள் 10 மாதங்கள் தண்டனையும் பெற்றிருந்தனர். தனது முதலாவது தேர்தல்ப் பிரச்சாரக் காலத்தில் தனக்குப் பக்கபலமாக நின்று கோட்பாட்டு அமைப்புகளை வகுத்த ஸ்டீவ் பன்னன் …

Read More »

தம்பட்டமடித்துக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பின் உத்தியோகபூர்வமான இறுதிப் பேச்சு!

“உலகிலேயே பெரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம், உலகிலேயே பெரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பினோம்,……..” என்று தனது ஜனாதிபதிக் காலத்தின் கடைசிப் பேச்சில் டிரம்ப் குறிப்பிட்டார், முடிந்தவரை 400,000 அமெரிக்கர்கள் கொவிட் 19 இல் இறந்ததைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து. மற்றைய நாடுகளுடனான அமெரிக்காவுக்கு இலாபம் தராத, பயன் தராத ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது என்று காலநிலை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஒதுக்கிவைத்துவிட்டது பற்றியும் குறிப்பிட்டார். தனது முக்கிய சாதனையாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகச் சரித்திரத்திலேயே …

Read More »

பிரெஞ்சுத் தலைவரின் “அறிவுபூர்வமான இஸ்லாம்” என்ற பெயரிலான கோட்பாடுகளை அங்கிருக்கும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள்.

சமீப வருடங்களாக பிரான்ஸில் வாழும் பிரான்ஸ் மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளின் ஒரு விளைவாகப் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன. அதையடுத்து பிரான்ஸின் குடியரசுக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி நாட்டில் இயங்கக்கூடியதாக இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்த பிரெஞ்ச் அரசு திட்டமிட்டது. முக்கியமாக, தனது வகுப்பில் மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றித் தெளிவுபடுத்துவதற்காக இஸ்லாம் பற்றிய விவாதங்களை நடாத்திய ஆசிரியர் சாமுவேல் பத்தியைத் திட்டமிட்டுச் சில இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொடூரமாகக் …

Read More »

யேமன் போரில் ஒரே வாரத்தில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

யேமன் போரில் ஈடுபடும் வெவ்வேறு பகுதியினரிடையே 2018 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுக ஒப்பந்தத்தின் பின்னர் உண்டான மிகவும் காட்டமான மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள். ஹொடெய்தா நகரருகில் நடந்த இம்மோதலில் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பின்பலத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட யேமன் அரச படைகளும், ஹுத்தி போராளிகளும் பங்குபற்றினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்க வெளிவிவகாக அமைச்சர் மைக் பொம்பியோ ஹூத்தி போராளிகளைத் தீவிரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியதன் …

Read More »

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கோருகிறது கத்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்த வளைகுடா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் கத்தாரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள் சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள். அந்த மூன்று நாடுகளும் மெதுவாக கத்தாருடன் தமது தொடர்புகளை மீள ஆரம்பித்துவரும் நேரத்தில் கத்தாரின் வெளிவிவகார அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி கோருகிறார். எரிவாயுப் பிராந்தியத்தை ஈரானுடன் சேர்ந்து கொண்டிருக்கும் கத்தார் நீண்ட காலமாகவே சவூதி …

Read More »