Monday , January 25 2021
Breaking News
Home / சமூகம்

சமூகம்

social

கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark Web” இல் கொவிட் 19 சம்பந்தப்பட்ட பல விதமான விளம்பரங்களைக் காணமுடிகிறது. தடுப்பு மருந்து மட்டுமன்றி, தடுப்பு மருந்து பெற்றதற்கான போலிச் சான்றிதழ், தொற்று இல்லையென்று காட்டும் போலிச் சான்றிதழ்கள் போன்றவையும் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரங்கள் காணக்கிடக்கின்றன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து மனிதர்களிடம் …

Read More »

கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு!

“சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”.. “கூரையில் புறாக்கள் புறுபுறுக்கின்றன..””வீதி வளைவில் கழுதை கனைக்கிறது…”” வயலில் சூடடிக்கும் சத்தம் என் ஜன்னலில் கேட்கிறது… “.. கோவில் மணி ஓசை கிட்டவாய் ஒலிக்கிறது..” -இப்படியெல்லாம் அயலோடு குற்றம் குறைபட்டுக் கொண்டு யாரும் இனிமேல் நீதிமன்றங்களை நாடமுடியாது. கிராமங்களில் இது சகஜம். …

Read More »

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப காலத்தில் மீன் மற்றும் விலங்குகளை விற்கும் சந்தையொன்றில் ஆரம்பித்ததாகக் குறிப்பிடப்படும் தொற்றல் வேகமாகப் பரவி வருகிறது. தாய்லாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் கூடக் கொரோனாத் தொற்றல்கள் நிற்கவில்லை. குறிப்பிட்ட தொற்றுக்களுக்கான காரணம் பக்கத்து நாடான மியான்மாரிலிருந்து தாய்லாந்துக்குக் களவாக வந்திருக்கும் தொழிலாளிகளே …

Read More »

பாரிஸில் கல்லூரி மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள்

பாரிஸில் 15 வயதான கல்லூரி மாணவன் ஒருவன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் மிக மோசமாகச் தாக்கப்பட்டுக் குற்றுயிராக விடப்பட்ட சம்பவத்துக்கு எதிரான உணர்வலைகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்மான்(Antoine Griezmann,) நடிகர் ஒமர் சீ(Omar Sy) உட்பட பல பிரபலங்கள் மாணவனுக்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டதை அடுத்து இந்தச் சம்பவம் பரவலான கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாக …

Read More »

சிறுமியொருத்தியின் மரணத்தின் பின் இத்தாலி டிக் டொக்குக்கு புதிய வரையறைகளை விதிக்கிறது.

டிக் டொக்கைப் பாவித்த ஒரு 10 வயதுச் சிறுமி அதில் நடந்த போட்டியொன்றால் இறந்து போனதால்  வயது நிர்ணயிக்க முடியாதவர்களை டிக் டொக் செயலியில் சேர அனுமதிக்க வேண்டாமென்று இத்தாலிய அரசு கேட்டுக்கொள்கிறது.  டிக் டொக் செயலியில் சேர்ந்துகொள்வதற்கான வயது 13 என்று அந்த நிறுவனத்தின் நிபந்தனைகள் அறிவிக்கின்றன. ஆனாலும், நிஜத்தில் அதை அந்த நிறுவனத்தால் கண்காணித்துப் பேண முடியவில்லை.  இத்தாலியின் பலர்மோ நகரைச் சேர்ந்த டிக் டொக் பாவிக்கும் …

Read More »

“சர்வதேசப் பயணிகளிடம் கொவிட் 19 தடுப்பு மருந்துச் சான்றிதழ் கோராதீர்கள்!”

உலக நாடுகளிடையே பயணம் செய்பவர்களிடம் கட்டாயம் கொவிட் 19 மருந்து போட்டிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தற்போதைய நிலையில் வரவேற்கத்தக்கது அல்ல என்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு. “சர்வதேசப் பயணிகளிடம் குறிப்பிட்ட காலவரையுள்ள, ஆதாரத்துடன் நிரூபிக்கக்கூடிய, ஆரோக்கியம் பற்றிய தேவையுள்ள நடவடிக்கைகளைக் கூட்டாகச் சிந்தித்து நிறைவேற்றுங்கள்,” என்று கேட்டுக்கொள்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு. ‘ஜனவரி 26 முதல் அமெரிக்காவுக்குப் பயணமாகிறவர்கள் தங்கள் பயணத்தின் முன்னர் கொவிட் 19 ஆல் …

Read More »

பிறேசில் வைரஸ் அச்சம்:எல்லா வழிகளையும்அடைக்கிறது பிரிட்டன்!

பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை நெக்கடீவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்துநாட்கள் வரையான தனிமைப்படுத்தலுக்கும் இணங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படு கின்றது.விதிகளை மீறுவோர் அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடும். விதிவிலக்கு பிரான்ஸிலிருந்து கலே – டோவர் மூலமாக பிரிட்டனுக்கு அவசியமான உணவுப்பொருட்களைக் கொண்டுவரும் பாரவண்டிச் சாரதிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. …

Read More »

பள்ளிகள் தொடர்ந்தும் இயங்கும், கன்ரீன்களில் புதிய கட்டுப்பாடுகள்!

மாணவர் சமுதாயத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பாடசாலைகளை மூடுகின்ற முடிவை அரசு இப்போதைக்கு எடுக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் ஆபத்து உள்ள போதிலும் பாடசாலைகளைத் தீவிர கண்காணிப்புடன் தொடர்ந்து இயக்குவது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தலைமையில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.சுகாதாரம், உளவியல், கல்வி போன்ற மூன்று முக்கிய காரணங்களுக்காக பாடசாலைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று கல்வி …

Read More »

பிரான்ஸ் அரசின் காலநிலை பேணும் நடவடிக்கைகள் போதுமானதா என்பது பற்றி அரசின் மீதான வழக்கு விசாரணை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எரி நெய்விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகிய அதேசமயம் அதிக சத்தமில்லாமல் ஆரம்பமாகிய இன்னொரு போராட்டம் சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிய விழிப்புணர்வால் ஆனது. அதன் விளைவாக காலநிலை மாற்றங்களை எதிர்நோக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காகப் போராடும் நான்கு அமைப்புக்கள் பிரெஞ்ச் அரசின் மீது வழக்குப் போட்டிருக்கின்றன.  அந்த வழக்கின் நோக்கம் பிரெஞ்ச் அரசை தற்போதையதை விடக் கடுமையான சட்டங்களை உண்டாக்கி சுற்றுப்புற சூழலைப் பேணக்கூடிய …

Read More »

கங்கைக்கரையில் ஒரு மில்லியன் பேர் ஒன்று சேரப்போகும் கும்பமேளா!

வருடாவருடம் கங்கைக்கரையில் கும்பமேளா திருவிழாவுக்காகச் சேரும் இந்து விசுவாசிகள் இந்த வருடமும் அதில் பின் நிற்கவில்லை. 800,000 முதல் ஒரு மில்லியன் பேர்வரை 14.01 வியாழனன்று அங்கே ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாத்ரீகர்களிடையே கொரோனாத்தொற்றுக்களைத் தவிர்க்கச் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.  மரணத்தை வெல்லும் பானத்துக்காகத் தேவர்களும், அரக்கர்களும் போர் புரிந்தபோது நாலு துளிகள் அதிலிருந்து வெவ்வேறு இடங்களில் வீழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதிலொரு துளி இவ்விடத்திலும் விழுந்தது …

Read More »