Monday , January 25 2021
Breaking News
Home / வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

LPL 2020 கிண்ணம் Jaffna Stallions வசம்

LPL 2020 என அழைக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் 2020 வெற்றிக்கிண்ணத்தை Jaffna Stallions அணி சுவீகரித்துள்ளது. இறுதிப்போட்டியில் சந்தித்த Galle Gladiators அணியை 53  ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற Jaffna Stallions அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி Jaffna Stallions அணி இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது. அணியில் ஆகக் கூடுதலாக சொகைப் …

Read More »

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராக வைத்தியர் கலாநிதி முத்துக்குமாரசாவாமி உமாசங்கர் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். வடமாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.கேதீஸ்வரன் அவர்கள் வழங்கிய நியமனத்தின் அடிப்படையில் இந்த பதவியை டொக்டர் உமாசங்கர் அவர்கள் பதவியேற்றிருந்தார். வைத்திய கலாநிதி திரு மு.உமாசங்கர் அவர்கள் இதற்கு முன்னதாக யாழ் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு போன்ற இடங்களில் தன் பணி செய்திருந்தார். யாழ்ப்பாணம் பருத்தித்துறையை …

Read More »

உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்

உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் செவ்வனே தமிழ்மொழித்தேர்ச்சி பெற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளின் உருவாக்கம் மிக முக்கிய பங்களிக்கிறது. அதனடிப்படையில் ஒக்ரோபர் மாதம் 18ம் திகதியாகிய இன்று அயர்லாந்து தமிழ்க் கல்ல்விக்கழகம் உதயமாகின்றது. அயர்லாந்து நேரம் மாலை நான்குமணிக்கு இணைய வழி ஆரம்ப கொண்டாட்டமாக தன் பணியை ஆரம்பிக்கத் தொடங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கல்வியலாளர்கள்,பேராசிரியர்கள்,தமிழ்ச் சங்க தலைவர்கள் எனப்பலர் தங்கள் வாழ்த்துச்செய்திகளை இணைய வழி …

Read More »

பேராதனை தமிழ்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் பதவியேற்கவுள்ளார்.வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் தன் பதவியை ஏற்கவுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் மண்ணை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் அவர்கள் யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.பாடசாலைக் காலத்திலிருந்து தமிழ்த்துறை சார் அனைத்து விடயங்களிலும் முன்னிலை பெற்றுத்திகழ்ந்த பேராசிரியர் அவர்கள் கொழும்பு கம்பன் கழக மற்றும் தமிழ்ச்சங்க மேடைகளில் பல பேருரைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார். பேராதனை பல்கலையில் கல்வி …

Read More »

நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி 2020 ஆம் ஆண்டான நேற்று அரச உயர் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டுள்ளது திருமறைக் கலாமன்றம் என்ற பெருங் கலை நிறுவனத்தை நிறுவி,யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஐம்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத கலைப்பயணத்தில் ஈடுபட்ட பெருமை அடிகளாருக்கு உண்டு. தன் கலைப்பணிக்காலத்தில் பல்வேறுபட்ட …

Read More »

மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார். அவரின் உன்னத சேவையை பாராட்டி கல்லூரி சமூகமும் கல்லூரி நலன்விரும்பிகளும் இணைந்து அவருக்கு விழா எடுக்க உத்தேசித்துள்ளனர். கல்லூரி அதிபரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி அவரின் ஓய்வுபெறும் நாள் மாபெரும் விழாவாக “மணிவிழா” கொண்டாடப்படவுள்ளது. நிகழ்வுக்கு பணியாளர் நலன்புரி சங்க தலைவர் திரு.தர்மதேவன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். …

Read More »

வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா

உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவிக்கப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தரணியெங்கும் இருக்கும் பல உயிரியல் துறை மாணவர்கள் கல்வி கற்ற பேராசான் திரு தம்பிஐயா தம்பிராஜா ஆசிரியர் என்றால் மிகையாகாது. ஒரு காலத்தில் Zoology தம்பிராஜா Botany குணா என்று பல்வேறு தனியார் கல்வி நிலையங்களிலும் …

Read More »

பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் இனி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த துணைவேந்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த மாதத்தின் 10 மற்றும் 12ம் திகதிகளில் அந்த அந்த பல்கலைகழகங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் மூவர் பெயர்கள் சிபார்சுசெய்யப்பட்டிருந்தது. 1978ம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் 16 இலக்க சட்டத்தின் பிரகாரம் சிபார்சு செய்யப்பட்டவர்களிலிருந்து ஜனாதிபதியே நிறைவில் ஒருவரது …

Read More »

யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன்

யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமத்துவ பீடாதிபதியாக பேராசிரியர் திரு பாலசுந்தரம் நிமலதாசன் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே பல்கலைக்கழகத்தின் வணிக பட்டதாரியான இவர் றாஜறட்ட பல்கலைகலைக்கழ பட்டதாரியுமாகி பங்களாதேஷ் நாட்டின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்று தனது கல்வித்தகமை அந்தஸ்தை மிகக்குறைந்த வயதில் உயர்வாக்கியிருந்தார். பல்கலைகழகத்தில் 2005ம் ஆண்டு விரிவுரையாளராக தனது கல்விப்பணியை ஆரம்பித்த பேராசிரியர் திரு நிமலதாசன், 2010ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளராகவும், 2015 ம் ஆண்டில் …

Read More »