சிங்கப்பூரில் புலி அலங்காரங்கள்|காரணம் என்னவென்று தெரியுமா!

சிங்கப்பூர் இந்தவருட சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக தன்னை தயார்ப்படுத்தி வருகின்றது. இந்தவருடம் வரும் பெப்பிரவரி மாதம் 1ம் திகதி வரவுள்ள சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஜனவரிமாதம் 7ம்திகதியே பாதையோர அலங்கார வர்ண விளக்குகள் ,மற்றும் சோடனைகளை ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக சிங்கப்பூரின் New Bridge, Cross Street பகுதிகளில் பலரையும் கவரக்கூடிய வகையில் வண்ணமயமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனப்புத்தாண்டில் இந்த வருடம் புலி ஆண்டு /Year of the Tiger என china Zodiac 🇨🇳 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மிரட்டும் புலிகளின் பொம்மைகளாலும் வர்ண சோடனைகளாலும் சிங்கப்பூரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வருட சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெப்பிரவரி மாதம் 1ம் திகதியிலிருந்து பெப்பிரவரி 15ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக 2010 ம் ஆண்டு புலியாண்டாக சீனமக்கள் தங்கள் சீனப்புத்தாண்டை கொண்டாடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.