டிசம்பர் 11 – பாரதியின் பிறந்த நாள்- கொண்டாடுகிறது உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கம்

உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் டிசம்பர் மாதம் 11 ம் திகதி இணைய வெளியில் கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் இசைச்சக்கரவர்த்தி டாக்டர் ராஜ்குமார் பாரதி அவர்களும்,
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப் பேரன் பசுமைக் கவிஞன் நிரஞ்சன் பாரதி அவர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பரதத்தில் பாரதி மார்க்கத்தை அமைத்து சிறப்பித்த இலங்கை அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குனரும், உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பாளருமான
” கலாசூரி”திவ்யா சுஜேன் அவர்களும் நாடகத் தமிழினூடாக இந்நிகழ்வில் இணைந்து கொள்கிறார்

அத்துடன் இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக சிறப்பிக்கவுள்ளார்.

மழலைகள் முதல் பெரியவர்கள் வரை கவந்த கவிஞன் பாரதியின் விரும்பிகள் அனைவரும் இணைந்து சிறப்பிக்குமாறு நிகழ்வை ஒழுங்கு செய்து அகில இலங்கை பரத நாட்டிய கலைஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க கீழ்வரும் Zoom இணைப்பினூடாக 11/12/2020 அன்று இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு கலந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Zoom ID : 837 1983 2981
PC : 11122020


இந்த நிகழ்வில் நோர்வேயிலிருந்து கலாசாதனா என்ற அமைப்பும்
லண்டனிலிருந்து சித்திர கலை மன்றம் என்ற அமைப்பும்
கனடாவிலிருந்து அபிராமி நடனப்பள்ளி என்ற அமைப்பும் இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *