பெல்ஜியத்தில் தீவிரவாதக் கொலையா?

இரண்டு பெண் பொலீசாரும், வழியே போன ஒருவரும் பெல்ஜியத்தின் லீஜ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களைச் சுட்டது சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் என்று குறிப்பிடப்படுகிறது. சுட்டவரைப் பொலீசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

காலை பத்து மணியளவில் நகர உணவகமொன்றில் சந்தேகத்துக்குரிய நபரொருவரைப் பொலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த நபர் தன்னிடமிருந்த கத்தியால் பொலிசாரைத் தாக்க முயலவே அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. அச்சமயத்தில் பொலீசாரின் துப்பாக்கியை எடுத்த அவன் பொலீசார் இருவரையும் அருகே காரில் பயணம் செய்த ஒருவரையும் சுட்டுக் கொலை செய்தான்.

2015 இல் பரீஸில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின் பின்பு பெல்ஜியம் எப்போதும் அப்படியான தாக்குதல்களை எதிர்நோக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. நேற்றைய தினம் சிறையிலிருந்து விடுமுறையில் வந்த அந்த 30 வயதானவன் ஏற்கனவே பொலீசாரால் அறியப்பட்டவன் ஆனால் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக அல்ல என்று குறிப்பிடப்படுகிறது. பொலீசாரால் சுடப்பட்டு இறக்க முன்பு “அல்லாஹு அக்பர்,” என்று கதறியதாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றன.

நடந்தவை பெல்ஜியத்தின் தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் அரச வழக்கறிஞரால் விசாரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *