The Shawshank Redemption, The Godfather சினிமாக்களைப் பின்னால் தள்ளிவிட்டு முதலிடம் பெற்ற ஜெய் பீம்!

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் இயக்கி சமீபத்தில் வெளியான ஜெய்பீம் சினிமா IMDB வரிசையில் முதலிடத்தில் ஏறியிருக்கிறது. அதன் மூலம் அது இதுவரை முதலாம், இரண்டாம் இடங்களில் தரமான சினிமாக்களாக இருந்த The Shawshank Redemption, The Godfather ஆகியவற்றைத் தனக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது.

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்த இருளர் எனப்படும் ஆதிவாசிகளின் பின் தங்கிய நிலைமை பற்றி இயல்பாகக் காட்டுவதாகப் பெரிதும் பாராட்டப்பட்ட ஜெய் பீம் 9.6 புள்ளிகளைத் தரமான அந்த 250 சினிமாக்கள் வரிசையில் பெற்றிருக்கிறது. இரண்டாமிடத்திலிருக்கும் The Shawshank Redemption 9.3 புள்ளிகளையும், மூன்றாமிடத்திலிருக்கும் The Godfather 9.2 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றன.

அந்தச் சினிமா வரிசைப்படுத்தலின் முதல் பத்து இடங்களில் Schindler’s List’, The Lord of the Rings: The Return of the King, Pulp Fiction, Inception ஆகிய சினிமாக்களும் இடம்பெற்றிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்