மேலை நாட்டின் அழகு

வானை தொட்டு விட
போட்டி போடும்
மிரள வைக்கும்
கட்டிடங்கள்!

கண் கவரும்
டிசைன்களில்
ஒளியை உமிழும்
மின் விளக்குகள்!

வழி நெடுகிலும்
நம்மை வரவேற்கும்
நியான் வண்ண
மின் விளக்குகள்!

ஒரு புறம்
எப்போதும்
புன்னகை முகத்துடன்
உலா வரும்
மனிதர்கள்!

தங்கள் உணர்வுகளை
அங்கேயே
தழுவலில்
முத்தத்தின்
மூலம் காட்டும்
மனிதர்கள்!

பேருந்திலும்
ரயிலிலும் ஒழுங்கு
கடைபிடிக்கும் பழக்கம்!

நேரத்தை செலவிடும்
தோரணை!

நேரத்தைச்
சரியாக நிர்வகிக்கும்
திறன்!

அவரவர் வீட்டின்
பணிகளை
அவரவர்களே
செய்யும் அழகு!

எந்த வேலைக்கும்
யாரையும்
சார்ந்து வாழாமல்
தாங்களே
செய்து கொள்ளும் பாங்கு!

குழந்தைகளும்
தங்கள்
பணிகளை அவரவர்
தேவைகளை
பூர்த்தி செய்யும் அழகு!

பார்க்க பார்க்க
பிரமிக்க வைக்கிறது
இது தான்
மேலை நாடு போலும்!

எழுதுவது : விஜயலட்சுமி