கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி  கமெனியின் கையெழுத்திடப்பட்ட நஸ்ர் [வெற்றி] என்ற அடையாளம் பொதிக்கப்பட்ட இராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் முக்கிய விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

“இராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் முதன்மையான இந்த விருது இஸ்லாமியப் புரட்சியின் மேன்மையையும், ஈரானின் எல்லைக் காவலுக்குத் தம்மை அர்ப்பணிப்பவர்களுக்கும் கொடுக்கப்படுவது,” என்று இராணுவத் தளபதி முஹம்மது பக்ஹேரி குறிப்பிட்டார்.

இஸ்ராயேல் பிரதமரால் ஈரானின் இரகசியமான அணு ஆயுத ஆராய்ச்சியின் மூளை என்று குறிப்பிடப்பட்ட பக்கிரிஸாதே தனது வாகனத்தில் பயணிக்கும்போது கொல்லப்பட்டதும் அதைச் செய்தவர்கள் யாரென்று இதுவரை தெரியாமலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ . போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *