ஐந்தே நாட்களில் ஒன்றரை மில்லியன் எவ்ரோக்களைச் சம்பாதித்துக் கொடுத்த பெர்னியின் பிரபல கையுறைகள்.

ஒரு பக்கம் ஜோ பைடனின் பதவியேற்ற வைபவம் நடந்துகொண்டிருக்க, அதைத் தனியாக, சமூக விலகல் கட்டுப்பாட்டுக்கிணங்க ஒதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருந்த இரண்டு தடவை ஜனாதிபதி வேட்பாளராக முயன்ற பெர்னி சாண்டர்ஸ், தனது கையுறைகள் உலகப் பிரபலமாகப்போவதை அறியாமல்.

பெர்னி சாண்டர்ஸ் கையுறைகளுடன் இருக்கும் படம் படு வேகமாகப் பிரபலமானது. சமூக வலைத்தளங்களிலும், மீம்ஸுகளாகவும் உலகெங்கும் அதற்கு உண்டான மவுசைக் கண்ட சாண்டர்ஸ் அப்படத்தை வெவ்வேறு உடைகளில் பதித்து விற்பனை செய்தார். ”Chairman Sanders” உடைகள் முப்பதே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. வாங்க விரும்புகிறவர்களுக்கு ஒரு வாரம் காத்திருக்கவேண்டியதாக இருக்கிறது.

ஐந்தே நாட்களில் சுமார் இரண்டு மில்லியன் டொலர்களை அப்படங்கள் இலாபமாகச் சம்பாதித்தன. அத்தொகையை மனிதாபிமான உதவியாகக் கொடுக்கிறார் பேர்னி சாண்டர்ஸ். தனது வெர்மண்ட் நகரிலிருக்கும் மீல்ஸ் ஒன் வீல்ஸ் திட்டத்துக்காக அவற்றை அவர் கொடுத்திருக்கிறார்.

பாவித்த கம்பளியை மீள்தயாரிப்பில் ஈடுபடுத்தும் ஜன் எல்லிஸ் என்ற ஆரம்பப் பாடசாலை ஆசிரியையே பெர்னி அணிந்திருந்த கையுறைகளைத் தயாரித்து அதை அவருக்குப் பரிசாகக் கொடுத்திருந்தார். அதன் பிரபலம் கையுறைகளை வாங்கவிருக்கும் கோரிக்கைகளால் அந்த ஆசிரியையை முழுகடித்துவிட்டது. “எல்லோரும் வாங்க விரும்பும் அவைகளின் எண்ணிக்கை 18,000 சோடிகளுக்கும் அதிகம். அவைகளை நான் தயாரிப்பதென்பது கற்பனையிலும் முடியாது,” என்கிறான் ஜன் எல்லிஸ்.  

எனவே Vermont Teddy Bear Company  என்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பல விதங்களில் அதேபோன்ற கையுறைகளைத் தயாரிக்க ஒழுங்குசெய்திருக்கிறார் பெர்னி சாண்டர்ஸ். மெதுவான கரடிப் பொம்மைகளைத் தயாரிக்கும் அந்த நிறுவனம் பெர்னியின் உருவத்துடனான கரடிப் பொம்மைகளை மாதிரிக்குத் தயாரித்து ஜன் எல்லிஸிடம் அனுப்பி அவரைத் தம்முடன் கூட்டுச் சேர்ந்துகொள்ள விண்ணப்பித்திருக்கிறது.

ஜன்னின் கையுறைகளையும் தயாரிப்பதற்காகக் களத்தில் குதித்திருக்கும் Vermont Teddy Bear Company நிறுவனம் நோய்த்தொற்றுக் காலம் தங்கள் வியாபாரத்தில் சுமார் 250,000 டொலர்கள் நஷ்டம் உண்டாக்கியிருப்பதாகவும் புதிய சந்தர்ப்பத்தை உண்டாக்கித் தந்த ஜன், பெர்னி சாண்டர்ஸுக்கு நன்றி கூறுகிறார்கள்.

பெர்னிக் கையுறைகள் முதல் முதலாக எப்போது சந்தைக்கு வருமென்று இன்னும் தெரியவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *