டிசம்பர் 12, சனிக்கிழமையன்று பெர்லினிலிருந்து இணையத்தளம் மூலமாக 33 வது ஐரோப்பிய சினிமா விழா நிகழ்ந்தேறியது.

சிறந்த சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் பரிசுகளை வென்ற டென்மார்க்கின் “Another Round” நிகழ்ச்சியின் அதிரடி வெற்றியாளராகியது. அச்சினிமாவை இயக்கிய தோமஸ் விண்டர்பெர்க் சிறந்த இயக்குனர் பரிசையும், முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த மட்ஸ் மிக்கேல்ஸன் சிறந்த நடிகர் பரிசையும் வென்றனர். அதே சினிமாவுக்குக் கதையமைப்புச் செய்ததுக்காக தோபியாஸ் லிண்ட்ஹோல்முடன் இணைந்து பரிசைப் பெற்றுக்கொண்டார் தோமஸ் விண்டர்பெர்க். 

இந்தச் சினிமா சமீபத்தில் டென்மார்க்கில் வெளியிடப்பட்டுப் பெரும் பார்வையாளர் வெற்றியாகவும் அமைந்திருந்தது. பகலெல்லாம் மது அருந்தும் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் பற்றிய கதை அது.

இதே சினிமா 2021 ம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான “சிறந்த வெளிநாட்டுச் சினிமா” என்ற பிரிவில் போட்டியிடவிருக்கிறது.

காதல் கதையான “Undine” சினிமாவில் நடித்த பௌலா பீர் சிறந்த நடிகையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *