ஈகுவடோரின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரங்களால் 62 பேர் மரணம்.

அளவுக்கதிகமான குற்றவாளிகளால் நிறைந்திருக்கும் தென்னமெரிக்க நாடான ஈகுவடோரின் சிறைகளில் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சிறைகளுக்குள் தமது அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் போதை மருந்துக் குழுக்களுக்குள் உண்டாகும் போர்களே இக்கலவரங்கள்.  

சிறைச்சாலைகளுக்குள்ளே குற்றங்கள் செய்வதில் வாழும் குழுக்களிரண்டினிடையே ஏற்பட்ட மோதலே நடந்தவைக்குக் காரணம் என்று ஈகுவடோரின் ஜனாதிபதி லெனின் மொரேனோ சொல்லியிருக்கிறார்.   Guayas, Azuay Cotopaxi ஆகிய நகரச் சிறைகளுக்குள் இந்தக் கலவரங்கள் நடந்திருக்கின்றன.கலவரத்தை அடக்க முற்பட்ட சிறைச்சாலைக் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும், எவரும் இறக்கவில்லையென்றும் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.

சிறைச்சாலை மோதல்களில் இறந்தவர்களின் தொகை 2020 இல் 51 ஆகும். டிசம்பரில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக நடந்திருக்கும் மோதல்களில் இறந்தவர்கள் தொகையே இதுவரை நடந்த மோதல்களிலான இறப்பின் மிகப்பெரிய தொகையாகும்.

17 மில்லியன் மக்கள் வாழும் ஈகுவடோர்ல் சுமார் 38,000 பேர் நாட்டின் சிறைகளில் வாழ்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *