அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள்.

பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”, “எங்கேயும் அவர்களை நுழையவிடாதீர்கள்” என்று குரலெழுப்பினார்கள். 

பிரான்ஸிலிருக்கும் உலக பாரம்பரிய இடமான Pont du Gard க்கு அருகேயுள்ள Fournes நகரில் அமெஸான் நிறுவனம் ஒரு பெரிய கட்டடத்தைக் கட்டவிருக்கிறது. அதையொட்டி அவ்விடத்தருகே செடிகளை நட்டு அமெஸான் நிறுவனத்துக்கெதிரான கோஷங்களை நட்டார்கள் அந்த எதிர்ப்புக் குழுவினர்.

சுமார் 38,000 ச.மீற்றர் அளவில் மனிதச் சங்கிலியை உண்டாக்கி வானத்தில் ஐந்து மாடிகள் உயரத்தில் பலூன்களைப் பறக்கவிட்டு அமெஸான் நிறுவனம் கட்டத் திட்டமிட்டிருக்கும் அளவைக் காட்டினார்கள். 

நந்தேஸ் நகருக்கருகேயிருக்கும் அமெஸான் நிறுவனத்தின் கட்டடங்களுக்கு அருகேயும் சில நூறு பேர் கூடிக் கோஷங்களை எழுப்பினார்கள். அமெஸான் நிறுவனம் தாம் பல்லாயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்குவதாக விளம்பரப்படுத்தினாலும் அதைவிட அதிகமான வேலைகளை அழித்துவருகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் முதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிடும் குழுவினர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *