மரடோனாவின் உடலை எரிக்கக்கூடாது என்று ஆர்ஜென்ரீனிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உதைபந்தாட்டவீரர் மரடோனா வாழ்நாளில் செய்த பாவங்களெல்லாம் மீதியாக இருப்பவர்களுக்குப் பூதங்களாக எழுந்திருக்கின்றன. அவரது சொத்துக்களின் பெறுமதியை முடிவுசெய்வது, அதன் பின்னர் அவைகளை யார் யாருக்குப் பிரிப்பது என்பதில் பலர் உரிமை கோரி வருகிறார்கள். 

இதுவரையிலான கணிப்பீட்டில் மரடோனா விட்டுச்சென்ற சொத்துக்களின் பெறுமதி சுமார் 400 மில்லியன் பெறுமதியானவை என்று குறிப்பிடப்படுகிறது. அவைகளின் மதிப்பைத் தெளிவாக அறியும் நடவடிக்கைகள் நடக்கும் அதே நேரத்தில் அவரது பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு இதுவரை அறியாத ஆறு பேர் தங்களுக்கும் சொத்தில் பங்கு கோரி வருகிறார்கள். எனவே, ஆர்ஜென்ரீனிய நீதிமன்றம் அதுபற்றிய மரபணுப் பரீட்சைகளை நடத்துவதற்காக அவரது உடல் எரிக்கப்படலாகாது என்று தடை போட்டிருக்கிறது.

சொத்துக்களில் மூன்றிலொரு பங்கை மரடோனா தனது சகோதரர்கள், பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகளுக்கு எழுதிவைத்திருக்கிறார். மீதியை எப்படிப் பிரிப்பது என்பதில் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *