உலக நாடுகளிடையே தொற்றிப் புதியதாகப் பீதியைக் கிளப்பிவரும் பிரிட்டனில் திரிபடைந்த கொரோனாக் கிருமி வகை.

முதல் முதலாகப் பிரிட்டனில் காணப்பட்ட திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் இப்போது எண்பது நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றன. பிரிட்டன் முழுவது அது எப்படிக் காட்டுத்தீ போலப் பரவியதோ அதே போலவே உலகெங்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் பிரிட்டனின் கிருமித்தொற்றுப் பரவல் விற்பன்னர்கள்.

“1.1.7 என்ற அடையாளப் பெயரால் குறிப்பிடப்படும் இந்த வரைக் கிருமிகள் முன்னையதைவிட வேகமாகப் பரவித் தாக்குகின்றன. அவை தொடர்ந்தும் வெவ்வேறு உருவில் திரிபடையக் கூடியவை. அப்படியான திரிபுகளில் ஏதாவது தற்போது பாவிப்பிலிருக்கும் தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்ற நிலைமை வருமானால் அது மிகப்பெரிய ஆபத்தான நிலையாகலாம்,” என்று ஷரோன் பீகொக் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். அவர் பிரிட்டனால் கொவிட் 19 மரபுக்கள் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விற்பன்னர்கள் குழுவின் தலைவராகும்.

முதலில் பரவித் திரிபடையும் கிருமிகள் வெவ்வேறு வகைகளில் திரிபடைந்துகொண்டேயிருக்கும். அவைகளிலெவையாவது கட்டுப்பாடுகளை மீறிப் பலரைக் கடுமையான நோய்க்குள்ளாக்கி, இறப்புக்களையும் அதிகமாக்குமானால் நாடுகளின் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்துவிடும். அந்த நிலைமையைத் தடுப்பதற்காகத் தற்போது பல நாடுகளிலும் கிருமிகளின் திரிபடைதல்களையும் கண்காணிக்கும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *