யாழ் மத்தி எதிர் சென் ஜோன்ஸ் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் – Big match 2020 (UK)

யாழ் மத்திய கல்லூரி செண் ஜோன்ஸ் கல்லூரி பழையமாணவர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

Big Match 2020 என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வழமையாக ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் போட்டியாகும்.

யாழ்ப்பாணத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மிகபிரபல்யமான வடக்கின் மாபெரும் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியைப்போல இங்கிலாந்திலும் வருடா வருடம் இந்த இரு கல்லூரிகளின் பழையமாணவர்கள் மோதும் போட்டியாக நடைபெற்றுவரு வது வழமை.

இந்த வருடம் உலகமே சவாலாக எதிர்கொள்ளும் கொவிட் 19 காரணமாக இந்த போட்டிகள் நடைபெறுமோ என்று பலரும் எண்ணியிருந்தாலும், இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ள வரையறைகளுக்கு அமைவாக இந்த போட்டிகளை நடத்துவது என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் விளையாடும் விளையாட்டுவீரர்களைப் போலவே பார்வையாளர்களும் கொவிட் 19 கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மைதான நிகழ்வை சிறப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்த வருடம் களத்தில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வடக்கின் மாபெரும் சமர் கிண்ணத்தை சுவீகரித்திருக்கும் சூழலில், இங்கிலாந்தில் நடைபெறும் பழைய மாணவர்களுக்கான போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த பெரும் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் Ilford இல் அமைந்துள்ள Old Parkonians Pavilion, Oakfield Playing field மைதானத்தில் இடம்பெரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *