ஒரு பக்கம் நிதி குவிகிறது டிரம்ப்புக்கு, இன்னொரு பக்கம் விலகுகிறார்கள் அனுபவம் மிகுந்த கட்சித்தலைகள்.

ரிபப்ளிகன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் டிரம்ப்பை நோக்கிச் சாய்ந்து கட்சியையே ஒரு தனிமனித மதமாக்கி வருகிறார்கள், என்று முகம் சுழித்துக்கொண்டு புஷ் காலத்திலிருந்து கட்சியில் முக்கியஸ்தவராக இருந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்.

டிரம்ப்பின் கடைசிப் பதவி நாட்களில் அவரை விமர்சித்தவர்களில் சிலர் கூட டிரம்ப்பை நோக்கி வளையக் காரணம் டிரம்ப்பிடம் குவிந்துவிட்டிருக்கும் நிதி என்று குறிப்பிடப்படுகிறது. நிதியை வைத்து தனக்குப் பிடிக்காத, விமர்சித்த கட்சிக்காரரை முகம் தெரியாமலாக்கிவிடுவாரென்று அவர்கள் பயப்பிடுகிறார்கள். மீண்டும் தேர்தல்களில் வெல்லவும் டிரம்ப்பிடம் இருக்கும் நிதி தங்களுக்கு உதவுமென்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

நவம்பர் தேர்தல் தோல்வியை அறிந்தவுடனேயே டிரம்ப் ஒரு அரசியல் இயக்கத்தை ஸ்தாபித்து திரும்பவும் பதவிக்கு வருவதற்காக நிதிசேர்க்கத் தொடங்கிவிட்டார். அதை அவர் ரிபப்ளிகன் கட்சிக்காகச் சேர்க்காமல் “ஸேவ் அமெரிக்கா” [Save America] என்ற ஒரு இயக்கத்தின் பேரால் செய்யத் தொடங்கியிருந்தார். வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய அவர் அவ்வியக்கத்தைத் தனது பங்கில் பதிவுசெய்துகொண்டிருக்கிறார். அவ்வியக்கத்தில் 31.2 மில்லியன் டொலர்கள் இருப்பதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது.

அந்தத் தொகையும் அந்த இயக்கமும் தான் பல ரிபப்ளிகன் பாரளுமன்ற உறுப்பினர்களைக் கலங்க வைத்திருக்கிறது. தங்களது எதிர்காலத்துக்கு டிரம்ப் முடிவு கட்டிவிடுவாரோ என்ற பயத்திலேயே பாராளுமன்றத்தின் சிறுபான்மைத் தலைவர் சமீபத்தில் டிரம்ப்பைச் சந்தித்து அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது.

https://vetrinadai.com/news/trump-help-republicans/

தேர்தல் முடிவுகளைப் பற்றிய டிரம்ப்பின் ஆதாரமற்ற கட்டுக் கதைகளால் ஏற்கனவே கோபமுற்றிருந்த சுமார் 60 -70 புஷ் கால ரிபப்ளிகன் கட்சியினர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியதும் அவரிலிருந்து விலகிவிடுவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், டிரம்ப்பின் நிதி சேர்ப்பும் அதனால் அவர் கட்சிக்குள் அதிகாரத்தைப் பற்றிக்கொள்ள முனைவதையும் கண்டு “இது எங்கள் கட்சிப் போக்கல்ல, இப்படியாக முதுகெலும்பில்லாமல் எங்களால் இருக்கமுடியாது,” என்று குறிப்பிட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். அவர்களி ஒரு சாரார் கட்சியின் அங்கத்துவராகவும் இல்லாமல் போய்விட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 

அது மட்டுமன்றி அமெரிக்காவின் அதிகாரங்களையெல்லாம் ஒரு இரகசிய சக்தி இயக்கிக்கொண்டிருக்கிறது என்று நம்பி அதைப் பிரச்சாரம் செய்துவரும் கானொன் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ரிபப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடிகிறதென்றால் எங்கள் கட்சி தடம்மாறிப் போயிருக்கிறது என்று குறிப்பிட்ட சில நீண்டகாலக் கட்சி முக்கியத்தவர்கள் விசனப்படுகிறார்கள்.   

https://vetrinadai.com/news/qanon-joe-biden-inaguration/

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *