Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. தனது நாட்டின் மூன்றிலொரு பகுதி மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசியைக் கொடுத்த இஸ்ராயேல் பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு அதைக் கொடுப்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாலஸ்தீன அதிகாரத்தின் பொறுப்பாகும் என்று சொல்லிவிட்டது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி …

Read More »

தாய்லாந்தின் தெற்கிலிருக்கும் பிராந்தியங்களில் அமுலாகும் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள்.

தாய்லாந்தின் தெற்கே மலேசியாவின் எல்லையையடுத்த பகுதியிலிருக்கும் யாலா மாகாணத்தில் சமீபத்தில் கடுமையான ஷரியா சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளைவாக வீதிகளில் இளவயதினரான ஆண் – பெண் ஒருவருடன் ஒருவர் போவது, பேசுவது கண்காணிக்கப்படுகிறது.  சுமார் 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தாய்லாந்தில் முஸ்லீம்கள் சுமார் 3 மில்லியன் பேராகும். அவர்கள் வழமையாக சாதாரணமான வாழ்க்கைமுறையையே கைக்கொள்கிறார்கள். தெற்கிலிருக்கும் மூன்று மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லீம்களிடையே சமீப காலத்தில் பழமைவாத இஸ்லாமியக் …

Read More »

ஐரோப்பாவின் வான்பரப்பில் மீண்டும் சஹாரா தூசிப் படலம்!

சஹாராவில் இருந்துவரும் மணல் தூசிப் படலம் (Saharan dust) மீண்டும் பிரான் ஸின் பல பகுதிகளிலும் வான் பரப்பில் கலந்து காணப்படுகிறது. நேற்றும் தொடர்ந்து இன்றும் இது அவதானிக் கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னரும் இத்தகைய வளிமண்டலப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத் தில் இருந்து மணல் துகள்களை அள்ளி வருகின்ற காற்று மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பிய வான்பரப்பில் கலக்கின்றது. இதனால் காலை வேளைகளில் வானம் …

Read More »

கத்தலோனியாவின் தலைநகரான பார்ஸலோனாவின் கலவரங்கள் தொடர்கின்றன.

ஸ்பெய்னில் கத்தலோனியத் தேர்தல்களையடுத்து உண்டாகிய கலவரங்கள் பார்ஸலோனா நகரில் வன்முறை, ஊர்வலங்கள், சூறையாடுதல்களுடன் தொடர்ந்து வருகின்றன. இந்த நடப்புக்களின் நடுவில் ஒரு ரப் இசைக்கலைஞர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை. எதிர்பாராதவிதமாக பார்ஸலோனாவின் அரசியல் கலவரங்களுக்கு நடு நாயகமாக மாறியிருக்கும் பவுலோ ரிவால்டுல்லா டூரோ என்ற ரப் இசைக் கலைஞர் Hasél   என்ற பெயரில் தோன்றுபவர். கடும் இடதுசாரியான அவரது பாட்டு வரிகள் ஸ்பெய்ன் அரச …

Read More »

பிரிட்டனில் 4 கட்டத் தளர்வு சர்வதேச பயணங்களுக்குமே வரை தொடர்ந்து தடை!

பிரிட்டனில் கடந்த சுமார் ஒன்றரை மாத கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிக மெதுவாக – படிப்படியாக-நான்கு கட்டங்களில் தளர்த்துகின்ற அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று வெளியிட்டிருக்கிறார். தற்போது அமுலில் இருக்கின்ற பொது முடக்க கட்டுப்பாடுகள் (lockdown) மார்ச் 8,மார்ச் 29, ஏப்ரல் 12, மே17, ஜூன் 21 ஆகிய திகதிகளை உள்ளடக்கிய நான்கு கட்டங்களில் படிப்படியாக – மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் – முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று …

Read More »

“வளர்ச்சிக்கும் கூட்டுறவு, பாதுகாப்புக்கும் கூட்டுறவு,” என்று மாலைதீவுக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்தியா.

முன்னாள் ஜனாதிபதி காலத்தில் சீனாவின் சுமார் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டங்களைப் பெற்ற மாலைதீவைத் தன் பக்கமிழுக்க இந்தியா இந்த நாள் ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சோலியின் அரசுடன் எட்டு உதவித் திட்டங்களுக்குக் கைகொடுக்க உறுதிகொண்டிருக்கிறது. இந்தியா தனது பக்கத்து நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை இலவசமாகக் கொடுத்தபோது முதல் நாடாக 1,00.000 தடுப்பூசிகளை மாலைதீவுக்குக் கொடுத்தது. மீண்டும் 20ம் தேதி சனியன்று 1,00,000 தடுப்பூசிகளை …

Read More »

தஞ்சம் தேடிய அகதிகளை விண்ணப்பிக்க விடாமல் விரட்டியதற்காக இத்தாலிய அரசு தண்டிக்கப்பட்டது.

இத்தாலியின் எல்லை நாடுகளிலொன்றான ஸ்லோவேனியாவினூடாக உள்ளே நுழைந்தவர்களை அகதிகளாக விண்ணப்பிக்க விடாமல் தடுத்துத் திருப்பி ஸ்லோவேனியாவுக்குத் துரத்திவிட்டதற்காக இத்தாலி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கை pushback என்று குறிப்பிடப்படுகிறது.  ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனாத் தொற்றுக்களுக்காக நாட்டின் பாகங்கள் மூடப்பட்டதைச் சாக்காக வைத்து ஸ்லோவேனியாவிலிருந்து திரையஷ்டே நகர இத்தாலிய எல்லைக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இத்தாலியப் பொலீசார் கைப்பற்றி ஸ்லோவேனியாவுக்குள் திருப்பியனுப்பினர். வெவ்வேறு சமயங்களில் …

Read More »

கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று நம்பித் தென்னாபிரிக்க இராணுவம், தனது படையினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க சட்டத்துக்கெதிரான, அவ்வியாதிக்கெதிராகப் பயன்படாத ஒரு மருந்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.  கியூபாவிலிருந்து Heberon Interferon alfa-2b என்ற மருந்தை தென்னாபிரிக்காவின் இராணுவத் தலைமை சுமார் 17.7 மில்லியன் டொலர்களைக் கொடுத்து வாங்கியிருக்கிறது …

Read More »

உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு, எவரும் அங்கிருந்து உள்ளேயோ வெளியேயோ நடமாடத் தடை போடப்பட்டிருக்கிறது. நீண்ட காலத்தின் பின்னர் இரகசியமாக ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் உள்ளே நடந்தது, நடப்பவை வெளியே வர ஆரம்பிக்கின்றன.   திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது. …

Read More »

ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது வன்புணர்வுச் சம்பவம்.

ஒவ்வொன்றாக வெளியாகிவரும் ஆஸ்ரேலிய ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகளின் விபரங்கள் நாட்டில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. சமீப வாரங்களில் நாட்டின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நடந்ததாக மூன்று வன்புணர்வுச் சம்பவங்களில் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரதமர் ஸ்கொட் மொரிஸன் “நாட்டின் மற்றைய வேலைத்தளங்களில் எப்படியான கலாச்சாரம் இருக்கவேண்டுமென்று முன்மாதிரிகையாக நடக்கவேண்டிய பாராளுமன்றத்தில் இத்தகைய குற்றங்கள் நடந்திருப்பது சகிக்க முடியாதது. இதுபற்றி ஒரு விபரமான ஆராய்வு நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே …

Read More »

சர்வதேச அணுசக்தி கண்காணிப்பாளர்கள் மேலும் மூன்று மாதங்கள் ஈரானைக் கண்காணிக்கத் தற்காலிக அனுமதி.

சர்வதேச ரீதியில் ஈரான் செய்துகொண்ட “அணுச் சக்தி ஆராய்வுகளை நிறுத்துதல்,” ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகிக்கொண்டதால் ஏற்பட்ட கோபம் ஈரானுக்குத் தீரவில்லை. ஒப்பந்தத்தில் ஈரானை மீண்டும் அமெரிக்கா இணைத்துக்கொள்ளாவிடின் தான் நாட்டிலிருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் ஒத்துழைக்க மாட்டேனென்று அறிவித்திருந்தது. ஈரான் மீது டிரம்ப் போட்டிருந்த வர்த்தகப், பொருளாதாரக் கட்டுப்பாடுகளை ஜோ பைடன் அரசு நேற்றுக்கு [21.02] முன்னர் நீக்கவேண்டுமென்று ஈரான் காலக்கெடு போட்டிருந்தது. ஜோ பைடன் அரசோ சில வாரங்களுக்கு முன்னர் …

Read More »

திட்டப்படி தேர்தல்களை நடத்தாத சோமாலியாவின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் உண்டாகியிருக்கின்றன.

பெப்ரவரி 8 ம் திகதி தேர்தல்கள் நடப்பதாக சோமாலியாவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தல்களின் பிரதிநிதித்துவத்தை வைத்துப் புதிய அரசின் அதிகாரங்களை எப்படிப் பிரிப்பது என்பது பற்றி உள்நாட்டுக் குலங்களுக்குள்ளே வேற்றுக் கருத்துகளால் அத் தேர்தல் எப்போது நடக்குமென்று தெரியாத நிலைமை உருவாகியிருக்கிறது. நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சோமாலியாவில் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர். தேர்தல் நடத்தாததைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து ஊர்வலமொன்றை நாட்டின் தலைநகரான மொகடிஷுவில் நடாத்தினார்கள். …

Read More »

4,500 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு நீங்கள் கொவிட் 19 கிருமிகளை விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளத் தயாரா?

முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும்  4,500 பவுண்டுகள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்காக பிரிட்டிஷ் அரசால் 33.6 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பங்கெடுக்க 18 – 30 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானவர்கள் மட்டும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் போன்றவைகளோ மற்றைய கொவிட் 19 க்கு பலவீனமான …

Read More »

இஸ்ராயேலிலிருந்து சனியன்று வந்த கொவிட் 19 பற்றிய நற்செய்தியொன்று.

திட்டமிட்டுப் படு வேகமாக நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசிகள் போட்டுவரும் நாடு இஸ்ராயேல். அதன் விளைவால் தொற்றுக்கள் பரவுதல் நாட்டில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இரண்டு ஊசியையும் போட்டுக்கொண்டவர்களிடையே தொற்று 98.9% ஆல் குறைந்திருக்கிறது என்கிறார் இஸ்ராயேலின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர். ஜனவரி கடைசியில் Pfizer-Biontech நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளிரண்டும் நாட்டின் 1.7 மில்லியன் பேருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடையே நடாத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு இதுவாகும். வரவிருக்கும் இரண்டு வாரங்களில் இஸ்ராயேலின் …

Read More »

பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களில் தீவிர தொற்று! மூடிமுடக்க யோசனை

தீவிர வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸின் நீஸ், கேன் நகரங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ் (Alpes-Maritimes) பிராந்தியம் பகுதியாக மூடி முடக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை மதிப்பீடு செய்த சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன், அங்கு பகுதியளவு பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு அறிவிக்கப் படவுள்ளன. அவசரமாக அப் பிராந்தியத்துக்கு மேலதிக …

Read More »

மியான்மாரில் இராணுவத்தினர் சனியன்று ஊர்வலத்தினரிடையே தாக்கியதில் இருவர் மரணம்.

மியான்மார் மக்களின், நாட்டின் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்பு, மேலும் உத்வேகம் பெற்று வருகிறது. பல நகரங்களில் வெவ்வேறு துறைகளிலும் வேலை செய்பவர்களும் வீதிக்கு இறங்கித் தமது எதிர்ப்பை ஊர்வலங்களில் கோஷத்துடன் வெளியிட்டு வருகிறார்கள். இராணுவமோ தனது அடாவடித்தனங்களை அதிகரித்து வருகிறது. அரசாங்க, தனியார் துறை ஊழியர்கள் மட்டுமன்றிக் கலைஞர்களும் மியான்மாரின் இராணுவத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். இராணுவத்தின் எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து அவர்கள் தமது வெறுப்பைப் பகிரங்கமாகக் காட்டி வருவதாக …

Read More »

ரஷ்யாவில் பறவை காய்ச்சல் வைரஸ் முதல் முறையாக மனிதரில் தொற்று!

உலகை அச்சுறுத்தக் கூடிய அடுத்த வைரஸ் பெரும்பாலும் பறவைப் பண்ணைகளில் இருந்தே வெளிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நிரூபிக்கின்ற செய்தி ஒன்று ரஷ்யாவில் வெளியாகி இருக்கிறது. உலகின் பல பகுதிகளில் பறவைகளில் காணப்படுகின்ற AH5N8 எனப்படும் புதிய வைரஸ் முதல் முறையாக பறவைகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றி யுள்ளது என்ற தகவலை ரஷ்யா அறிவித் திருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்தே …

Read More »

அமிதாப் பச்சன் வீட்டுக்கு பொலீஸ் காவல் போடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பெற்றோல் விலை அதிகரிக்கும்போது கடுமையாக விமர்சித்துவிட்டுத் தற்போது அவ்விலையுயர்வு பற்றி மௌனமாக இருக்கும் பிரபலங்கள் பற்றிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் மஹாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிலொருவரான நானா பட்டொலெ. முக்கியமாக அமிதாப் பச்சன் அக் ஷய் குமார் ஆகியவர்களைக் குறிப்பிட்டுச் சாடிய அவர் அமிதாப்பின் சினிமாக்கள் படமாக்குவதையும், வெளியிடுவதையும் தடுக்கப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார்.  அதையடுத்து அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் பொலீஸ் காவல் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. சாள்ஸ் ஜெ. போமன்

Read More »

தனது முகக்கவசத்தை மறந்துபோய்விட்ட அஞ்செலா மெர்க்கலின் படம் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

ஜெர்மனியின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருப்பதுடன் நாட்டு மக்களை நாட்டுக்குள் வேகமாகப் பரவிவரும் வெவ்வேறு திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் பற்றி எச்சரித்து வருபவர் அஞ்செலா மெர்க்கல். எப்போதும் தனது முகக் கவசத்துடனேயே பொது மேடைகளில் பேசிவருவதுடன் பொதுமக்களும் முகக்கவசத்தை மறக்காமல் அணியவேண்டுமென்று எச்சரிப்பவர் அவர். ஆனால், பொது மேடையொன்றில் மறந்து போய் முகக்கவசமில்லாமல் அவர் பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்த படமொன்று வெளியாகியிருக்கிறது. அதில் பேச்சின் இடையில் திடீரென்று தனது தவறை ஞாபகம் …

Read More »

நிரந்தரமாக பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள் ஹரியும், மேகனும்.

“ஹரியும், மேகனும் எடுத்திருக்கும் முடிவினால் நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம். எனினும் அவர்களிருவரும் எங்கள் பேரன்புக்குரிய குடும்ப அங்கத்தவர்களாக என்றென்றும் விளங்குவார்கள்,” என்று பிரிட்டிஷ் அரச குடும்பம், விலகிக்கொள்ளும் தம்பதிகளைப் பற்றி அறிக்கை விட்டிருக்கிறது. 2020 இன் ஆரம்பத்திலேயே ஹரி-மேகன் தம்பதி பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கான தமது பொறுப்புக்களிலிருந்து ஓரளவு விலக ஆரம்பித்தார்கள். அதனால், அரசகுடும்பத்தினரிடையே அதை எப்படி ஏற்ற்குக்கொள்வது என்பது பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. “முழுவதுமாக அரசகுடும்பப் பொறுப்புக்களில் இருக்கவேண்டும், …

Read More »