Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

உலகில் அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரம் சென்னை!

CCTV என்றழைக்கப்படும் ஆங்காங்கே வெவ்வேறு காரணங்களுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கமராக்களைக் கொண்ட நகரங்களில் உலகில் முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போகிறது சென்னை. இரண்டாவது இடத்தை பெறுகிறது ஹைதராபாத். சென்னை ஒரு சதுர கி.மீற்றருக்கு 657 கண்காணிப்பு கமராக்களாலும், ஹைதராபாத் 480 கமராக்களாலும் கண்காணிக்கப்படுகிறது. சராசரியாக சென்னையின் ஒவ்வொரு 1,000 குடிமக்களையும் கண்காணிக்க 25.5 கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.  மூன்றாவது இடத்திலிருக்கும் சீனாவின் ஹார்பினில் சதுர கி மீற்றருக்கு 411 கண்காணிப்புக் கமராக்களும், நான்காவது …

Read More »

பாரிஸ் பாடசாலை மாணவ வழிகாட்டுனருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பாரிஸ் நகருக்குத் தெற்கே பான்யூ (Bagneux) பகுதியில் பாடசாலைகளில் பணிபுரியும் மாணவ வழிகாட்டுநரான (animatrice) பெண் ஒருவருக்கு புதிய இங்கிலாந்து வைரஸ் (variant britannique) தொற்றியுள்ளது. இதனால் புதிய மரபு மாறிய வைரஸ் கொத்தணியாகப் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகம் (la Direction générale de la Santé) இதனை அறிவித்துள்ளது. புதிய வைரஸ் தொற்றாளர்கள் இருவர் பாரிஸ் பிராந்தியத்திலும்( Ile-de-France) நாட்டின் வடமேற்குப் பிராந்தியமாகிய …

Read More »

உணவகங்களை பெப்ரவரி நடுப்பகுதி வரைமூடியே வைத்திருக்க முடிவு!

பிரான்ஸில் உணவகங்கள், அருந்தகங்களை (bars and restaurants) தொடர்ந்தும் பெப்ரவரி நடுப்பகுதி வரை மூடி வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் மாலை ஆறுமணி ஊரடங்கு மேலும் பத்து மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப் படுகிறது. அந்தப் புதிய மாவட்டங்களது விவரங்கள் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.சினிமா, அருங்காட்சியகம் போன்ற கலாசார நிலையங்களும் விளையாட்டு மையங்களும் இம்மாத (ஜனவரி) இறுதிவரை திறக்கப்படமாட்டா. பனிச்சறுக்கல் (ski) விளையாட்டு மையங்களை …

Read More »

ஸ்பெயின் நகரொன்று குளிரில் சரித்திரம் படைக்கிறது.

ஸ்பெயினின் வடமேற்கில் சுமார் 1,800 மீற்றர் உயரமுள்ள பிராந்தியத்திய நகரான  இல் வியாழனன்று -35.7ºC குளிர் அங்குள்ள காலநிலை நிலையத்தில் அளக்கப்பட்டிருக்கிறது. இது புதனன்று ஸ்பெயினில் கிழக்கு பிரனீயர் பிராந்தியத்தில் செவ்வாயன்று குளிரில் சரித்திரம் படைத்த -34.1ºC ஐ விட சிறிது அதிகமானதாகும். ஸ்பெயின் நகரொன்று குளிரில் சரித்திரம் படைக்கிறது. ஸ்பெயினின் வடமேற்கில் சுமார் 1,800 மீற்றர் உயரமுள்ள Vega de Liordes பிராந்தியத்திய நகரான  இல் வியாழனன்று -35.7ºC …

Read More »

கொரோனாத் தொற்றுக்களால், சீனாவின் 10 மில்லியன் பேருள்ள நகரமொன்றில் பிரயாணத்தடை.

சீனாவின் வடக்கிலிருக்கும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான ஷிஜுவாஸ்வாங் நகரில் சமீப நாட்களில் 200 பேருக்குக் கொரோனாத் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் தொடர்ந்தும் பரவாமலிருக்கச் சீனா கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது. சுமார் பத்து மில்லியன் பேர் வாழும் முக்கியமான இந்த நகரில் காணப்பட்டிருக்கும் இந்தத் தொற்றுச் கடந்த ஐந்து மாதங்களில் சீனாவில் காணப்பட்டிருக்கும் பெரும் இலக்கமாகும். எனவே நகரிலிருந்து எவரும் பயணம் செய்தத் தடைகள் பிறப்பிக்கப்பட்டு எல்லோரும் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். …

Read More »

உள்நாட்டில் இயற்கையில் மலசலம் கழித்து அசுத்தமாக்கும் நியூசிலந்துச் சுற்றுலாப்பயணிகள்.

நியூசிலாந்தின் 21 விகிதமான அன்னியச் செலாவணியைத் தரும் துறையான சுற்றுலா, பயணத்துறை, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 5.8 விகிதமாகும். அப்படியான ஒரு அதிமுக்கியமான துறை நாடு கொரோனாப்பரவலைத் தடுக்கத் தனது எல்லைகளை மூடியிருக்கும்போது என்னாகும் என்ற கேள்வி அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாதது மட்டுமன்றி நியூசிலாந்து மக்களும் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குப் பயணிக்க இயலாத நிலை 2020 ஏப்ரல் மாதக் கொரோனாக்கட்டுப்பாடுகள் …

Read More »

செனட் சபையைக் கைப்பற்றியாயிற்று, ஜோ பைடனின் வெற்றியும் உறுதியாயிற்று, சம்பிரதாய ரீதியாக.

ஜனவரி ஐந்தாம் திகதி ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த இரண்டு செனட் சபை அங்கத்தவர்களுக்கான தேர்தலில் இரண்டு இடங்களையும் டெமொடிரடிக் கட்சியின் வேட்பாளர்களே கைப்பற்றியதை மாநிலத்தின் தேர்தல் திணைக்களம் உறுதிசெய்திருக்கிறது. டிரம்பை உடனே பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் சக அமைச்சர்கள். ஜான் ஒஸ்ஸொவ், 33 வயதானவர் ஒரு இடத்தையும் ரபாயேல் வார்னொக் மற்ற இடத்தையும் ரிபப்ளிகன் கட்சியிடமிருந்து பறித்திருக்கிறார்கள். முதல் தடவையாக ஜோர்ஜிய மாநிலத்தில் வெற்றிபெற்ற கறுப்பினத்தவரான வார்னொக் …

Read More »

டிரம்பை உடனே பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் சக அமைச்சர்கள்.

புதனன்று டொனால்ட் டிரம்ப்பினால் உசுப்பேற்றப்பட்டு வாஷிங்டனில் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த கூட்டத்தை அகற்றி பொலீசாரும், அதிரடிப் படையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.  பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நிலைமையைச் சீர்செய்த பொலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகரெங்கும் ஊரடங்குச் சட்டம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. “மிகப்பெரும் தேர்தல் வெற்றியொன்றைக் களவாடினால் இதைப்போன்றவைகள்தான் நடக்கும் என்பது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். தேசியப் …

Read More »

ஜனநாயக மாற்றங்கள் கோரும் ஹொங்கொங்வாசிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஒரு பாகமான ஹொங்கொங்கில் சீனா கொண்டுவந்த புதிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாவித்து நாட்டின் சுதந்திர ஊடகங்களை அடைத்து, அதன் தலைவர்களையும் ஜனநாயகக் குரல் கொடுத்த தலைவர்களையும் கைது செய்துவிட்ட சீனா தொடர்ந்தும் ஆங்காங்கே போராட்டங்கள் செய்பவர்களைக் கைது செய்கிறது.  புதனன்று காலை ஹொங்கொங்கில் சுமார் 1,000 பொலீசார் பங்குபற்றிய தேடல்களில் நாடு முழுவதும் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரே …

Read More »

வாஷிங்டனில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்.

ஏற்கனவே அறிவித்தபடி “தேர்தல் வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்ற பெயரில் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த பேரணியில் அவர் பேசினார். “நாங்கள் கடைசி வரையில் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. களவு நடந்திருப்பதால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்று குறிப்பிட்டு தனது ஆதரவாளர்களை “உங்கள் குரலைக் கேட்கச் செய்யுங்கள், கடைசி வரை போராடுங்கள்,” என்று தூண்டிவிட்டு வெள்ளை மாளிகைக்குச் சென்றுவிட்டார். டிரம்ப் அங்கிருந்து அகன்றபின்னரும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அங்கேயே கோஷம் போட்டபடி நின்றிருந்தார்கள். …

Read More »

‘மொடர்னா’ ஊசியும் பாவனைக்கு! பிரான்ஸில் 38 வீதமானோரே தடுப்பூசி ஏற்ற சம்மதம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமெரிக்காவின் மற்றொரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ‘மொடர்னா’ (Moderna) ஊசி பாவனைக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ முகவரகம் ‘மொடர்னா’ தடுப்பூசியை அதன் ஒன்றிய நாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்நாடுகளில் ஏற்கனவே அமெரிக்கா-ஜேர்மனி கூட்டு நிறுவனத்தின் ‘பைசர்-பயோஎன்ரெக்’ தடுப்பூசி பாவனைக்கு வந்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் மொடெனா தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மொடர்னா தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் பிரான்ஸில் உள்ள அதன் தொழிற்சாலையிலும் …

Read More »

இரண்டாவது தடுப்பூசியை நேரத்துக்குத் தராவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகும் கனடியர்கள்.

கனடா தனது முதலாவது Pfizer-BioNTech தடுப்பூசிகளைப் பெற்றவுடன் அவற்றை நீண்டகால முதியோர் வாழ்வு இல்லமான Maimonides இல் வாழுபவர்களுக்குக் கொடுத்தது. அந்த முதலாவது பகுதியை அவர்கள் டிசம்பர் 14 அளவில் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு முதலாவது பகுதியைக் கொடுத்தபோது அவர்கள் தமது இரண்டாவது பகுதித் தடுப்பு மருந்தை ஜனவரி 3 ம் திகதி பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதிகூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த முதியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உறுதி தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதால் அவர்கள் சட்டத்தின் …

Read More »

தனது திட்டங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பேசிய கிம் யொங் உன்.

வட கொரியாவின் பொருளாதாரம், சுபீட்சம் ஆகியவற்றை முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்ட திட்டங்கள் படு மோசமாகத் தோல்வியடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் நாட்டின் அதிபர் கிம் யொங்-உன். நாடு முழுவதிலுமுள்ள சுமார் 7,000 கட்சித் தலைவர்கள் கூடிய மாநாட்டில் உரையாற்றிய கிம் யொங்-உன் 2016 இல் நடந்த மாநாட்டில் போடப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைத் தராததால் கடந்த ஆண்டில் அவைகள் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார். அவர் குறிப்பாக எந்த ஒரு …

Read More »

அதிக விபரங்களை வெளிவிடாமல் பிரிந்தவர்கள் கூடிய அல்உளா மாநாடு.

சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தின் மாநாடு சவூதி அரேபிய இளவரசனின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது. மாநாட்டைக் கூட்டியவர் சவூதி அரேபிய மன்னராக இருப்பினும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் தனது தந்தையின் சார்பில் அதை நடாத்தினார். ஜனவரி ஐந்தாம் திகதி மாநாடு கூட முன்னரே அந்த நாள் மாலையில் சவூதி அரேபியாவுக்கும், கத்தாருக்குமிடையே 2017 நடுப்பகுதி முதல் மூடப்பட்டிருந்த வான், கடல் வழிகள் …

Read More »

15 மில்லியன் உணவுப் பொதிகளைக் குப்பையில் கொட்டப்போகும் பிரிட்டிஷ் பாடசாலைகள்!

நாடு முழுவதும் கொரோனாத் தொற்றுக்கள் மோசமாகப் பரவிக்கொண்டிருந்த நிலையிலும் பிரிட்டிஷ் அரசு பாடசாலைகள் புதுவருட விடுமுறைக்குப் பின்னர் வழக்கம்போலவே ஆரம்பிக்கப்படுமென்று திடமாக அறிவித்து வந்தது. அதன் விளைவாகப் பாடசாலைகள் தமது மாணவர்களுக்கான முதல் வார உணவை ஏற்கனவே வாங்கத் திட்டமிட்டு ஒழுங்குசெய்யவேண்டியதாயிற்று.  கடைசி நிமிட திடீர் மாற்றமாக பிரிட்டிஷ் அரசு பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தபோது பாடசாலைகளுக்கு அந்த உணவுப்பொட்டலங்கள் பற்றிய முடிவுகளை மாற்றக்கூடிய காலம் கடந்துவிட்டிருந்தது. பாடசாலைகள் …

Read More »

பாரிஸிலும் புதிய வைரஸ் பரவல்! பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்!!

“இங்கிலிஷ் வைரஸ்”என்று அழைக்கப் படும் மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் (New variant of Covid) பாரிஸிலும் பரவி உள்ளது. பாரிஸ் மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம் Martin Hirsch  இத்தகவலை “பிரான்ஸ் – 2” தொலைக் காட்சிக்குத் தெரிவித்திருக்கிறார். “பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள ஆய்வுக்கூடம் ஒன்றில் நோயாளி ஒருவருக்கு புதிய வைரஸ் கண்டறியப்பட்டது. அவர் தற்சமயம் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறார்” என்பதை மருத்துவமனை களின் பணிப்பாளர் நாயகம்(directeur général …

Read More »

மிதிவண்டிகளின் மீதான காதலும் கொரோனாக்காலமும் ஜேர்மனியில் ஏற்படுத்தியிருக்கும் புதிய நிலைமை.

சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிப் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றும் அதையொட்டி வந்த கொரோனாத்தொற்று அலைகளும் சேர்ந்து மிதிவண்டிகள் மீதான ஆர்வத்தை உலகெங்கும் ஒரு சுனாமி அலையாக மாற்றியிருக்கின்றன. அதன் தாக்கங்களை வெவ்வேறு நாடுகளில், நகரங்களில் வெவ்வேறு விதமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜெர்மனியின், பெர்லின் நகரம் இதற்கெல்லாம் முன்னரே “துவிச்சக்கரவாசிகளின் சொர்க்கம்” என்று கருதப்படும் நகரங்களில் ஒன்றாகும். துவிச்சக்கரவாசிகளையும் நினைத்தே அமைக்கப்பட்டிருக்கும் நகரம் எப்போதுமே பலரையும் கவர்ந்தது. எனவே கொரோனாக்காலம் மேலும் …

Read More »

இணையத்தளக் கட்டுப்படுத்தலால் பெரும் நஷ்டமடைந்த உலக நாடுகளின் முதலிடத்தில் இந்தியா.

2020 இல் தமது நாடுகளில் இணையத்தளங்களை அவ்வப்போது மூடி, கட்டுப்படுத்திய 21 நாடுகள் மொத்தமாகச் சுமார் 4 பில்லியன் டொலர்களை இழந்திருப்பதாகக் பிரிட்டனிலிருந்து இணையத்தளப் பாதுகாப்பு பற்றி ஆராயும் அமைப்பொன்று குறிப்பிடுகிறது.  21 நாடுகளும் மொத்தமாக நஷ்டமடைந்த தொகையில் நாலில் மூன்று பங்கை இந்தியா தனது நாட்டில் ஏற்படுத்திய இணையத்தளக் கட்டுப்பாடுகளால் இழந்தது.  இந்தியாவால் 2019 லேயே கொண்டுவரப்பட்ட இணையத்தளக் கட்டுப்பாடுகள் 2020 லும் தொடர்ந்ததாகவும் அதனால் இந்தியாவின் நஷ்டம் …

Read More »

இந்தியக் குடியரசு தினத்தின் பிரதம விருந்தாளி தன்னால் வரமுடியாதென்று சொல்லிவிட்டார்.

2018 இல் வியட்நாம் பிரதமர், 2019 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதி, 2020 இல் பிரேசில் ஜனாதிபதி ஆகியோரைத் தனது நாட்டின் குடியரசு தினமான பெப்ரவரி 26 க்குத் தலைமைதாங்க வைத்திருந்தது இந்தியா. 2021 க்குப் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தவர் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன். பிரிட்டனில் அதிவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகளைத் திங்களன்று இரவு தனது நேரடிப் பேச்சில் அறிவித்த போரிஸ் …

Read More »

ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால்தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை!பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை

பைசர் – பயோஎன்ரெக் (Pfizer/Biontech) தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாட்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதன் நோய் எதிர்ப்புச் சக்தி முழுமையாகப் பலன் அளிக்கும். அவ்வாறு அன்றி இரண்டாவது ஊசியை ஏற்றவேண்டிய காலத்தை மூன்று வாரங்களுக்கு மேல் இழுத்தடித்தால் முதலாவது தடுப்பூசியின் முழுமையான பலன் கிட்டாது போகலாம். தங்களது தடுப்பூசி இரண்டாவது முறை ஏற்றாமல் ஒரே …

Read More »