Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

நிரந்தரமாக பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள் ஹரியும், மேகனும்.

“ஹரியும், மேகனும் எடுத்திருக்கும் முடிவினால் நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம். எனினும் அவர்களிருவரும் எங்கள் பேரன்புக்குரிய குடும்ப அங்கத்தவர்களாக என்றென்றும் விளங்குவார்கள்,” என்று பிரிட்டிஷ் அரச குடும்பம், விலகிக்கொள்ளும் தம்பதிகளைப் பற்றி அறிக்கை விட்டிருக்கிறது. 2020 இன் ஆரம்பத்திலேயே ஹரி-மேகன் தம்பதி பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கான தமது பொறுப்புக்களிலிருந்து ஓரளவு விலக ஆரம்பித்தார்கள். அதனால், அரசகுடும்பத்தினரிடையே அதை எப்படி ஏற்ற்குக்கொள்வது என்பது பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. “முழுவதுமாக அரசகுடும்பப் பொறுப்புக்களில் இருக்கவேண்டும், …

Read More »

கடும் உறைபனியால் கிரீஸின் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகள் நீர், மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் கிரீஸின் தலைநகரான ஏதன்ஸை உறைபனி கடுமையாகத் தாக்கியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக விழுந்திருக்கும் கடும் உறைபனியால் போக்குவரத்துகளெல்லாம் பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் நான்கு நாட்கள் மின்சாரம், நீர் வசதியின்றித் தவிக்கிறார்கள். நீண்ட காலமாகவே தம் அரசியல்வாதிகள் மேல் கொதிப்படைந்திருக்கும் மக்கள் அத்தியாவசியமான வசதிகளை இழந்ததால் மேலும் கோபமடைந்திருக்கிறார்கள். நகரின் ஒவ்வொரு அதிகாரங்களும் வேறொரு திணைக்களத்தைக் காரணமாகச் சுட்டிக்காட்டிப் பழிபோடுகின்றன.  கிரீஸ் பிரதமர் “ஏற்பட்டிருக்கும் நிலைமைக்குக் காரணம் முன்னர் இருந்த …

Read More »

இமாலயப் பிராந்தியத்தில் அணைகள், மின்சார நிலையங்கள் கட்டுவது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

“நிலக்கீழ் பூமித் தட்டுகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி நகரும் பிராந்தியம் இமாலயத் தொடர். அங்கே பெரிய கட்டடங்களைக் கட்டுவது மிகவும் ஆபத்தானது. வெவ்வேறு விதமான நகர்வுகளினால் ஏற்படும் ஸ்திரமின்மை அப்பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்துக்களையே உண்டாக்கும்,” என்கிறார்கள் புவியியலாளர்கள். சுமார் 10 நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் உத்தர்காண்ட் பிரதேசத்தில் சமோலியில் ஏற்பட்ட இயற்கைச் சேதம் உலகமெங்கும் பேசப்பட்டது. அத்துடன், ஏற்பட்ட மனித இழப்புக்கள், சேதங்கள் அப்பிராந்தியத்தை இந்திய அரசு கையாண்டு …

Read More »

பிரிட்டனில் ஊபர் சாரதிகள் தனியார் நிறுவனமல்ல, ஊபர் நிறுவனத் தொழிலாளிகளே என்கிறது பிரிட்டிஷ் நீதிமன்றம்.

பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் வாடகைக்கார் நிறுவனச் சாரதிகளுக்கு ஒரு வெற்றியாகும். பிரிட்டன் முழுவதும் சுமார் 65,000 சாரதிகளைப் பணிக்கமர்த்தியிருக்கும் ஊபருக்காக லண்டனில் மட்டும் 45,000 சாரதிகள் வாடகை வண்டிகளை ஓட்டுகிறார்கள். ஊபர் சாரதிகள் அந்த நிறுவனத்தின் தொழிலாளிகள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு பிரிட்டன் சட்டப்படி தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் எல்லாம் கொடுக்கப்படவேண்டும். அதாவது, அச்சாரதிகள் ஊபருக்காக வண்டியோட்டும்போது அந்த நிறுவனம் …

Read More »

உணவகங்களை மதிய நேரமாவது திறந்து இயங்க அனுமதியுங்கள்! செனற் உறுப்பினர்கள் கோரிக்கை

பிரான்ஸில் உணவகங்களை மதிய வேளையிலாவது குறிப்பிட்ட நேரம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு செனற் உறுப்பினர்கள் 65 பேர் அதிபர் மக்ரோனிடம் கடிதம் மூலம் கேட்டிருக்க கின்றனர். தொற்றுப் பாதிப்புகள் குறைந்த மாவட்டங்களில் மதிய நேரங்களில் சுகாதார விதிமுறைகளுடன் உணவகங்களைத் திறப்பதற்கும் பின்னர் மாலை ஆறு மணிக்குப் பிறகு ஊரடங்கு வேளையில் உணவு விநியோகத்தை (take-away) செய்வதற் கும் அனுமதிக்கலாம் – என்று செனற் உறுப்பினர்கள் அந்தக் கடிதத்தில் ஆலோசனை வெளியிட்டிருக்கின்றனர். உணவை …

Read More »

அகதிகள் வரவேற்பு நிலையத்தின்பொறுப்பாளர் வெட்டிப் படுகொலை! சூடான் குடியேற்றவாசி கைவரிசை

பிரான்ஸில் அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின் பொறுப்பாளர் வெளிநாட்டு அகதி ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அகதிகள் தஞ்சம் மறுக்கப்பட்டவர் எனக் கூறப்படும் சூடானிய நாட்டைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியிருக் கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. நாட்டின் தெற்கே பிரணி அத்திலாந்திக் பிராந்தியத்தில் (Pyrenees-Atlantiques) போவ் (Pau)என்ற நகரில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அங்கு அமைந்துள்ள ‘கடா’ எனப்படும் …

Read More »

ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களைக் கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பான EASO 2020 இல் ஐரோப்பாவினுள் அரசியல் தஞ்சம் கோரியிருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2019 இல் சுமார் 670,000 ஆக இருந்த தஞ்சம் கோரி வருவோரின் எண்ணிக்கை 2020 இல் சுமார் 460,000 ஆகக் குறைந்திருக்கிறது. ஐரோப்பாவினுள் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் சர்வதேச அளவில் போர்கள், அரசியல் பிரச்சினைகள் குறைந்திருப்பதல்ல. கொரோனாத் தொற்றுக்கள் காரணமாக …

Read More »

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில் போடப்படவிருக்கும் முதலாவது பெண் என்று கருதப்படுகிறது. ஷப்னத்தைத் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் மதுராவிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகளின் சிறைப்பகுதியில் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஏற்பாடுகள் டெல்லி கூட்டுக்கற்பழிப்புக் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றிய பவன் ஜல்லாத் தலைமையில் நடந்து வருகின்றன.  …

Read More »

ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதக் கெடு கொடுத்திருக்கிறது.

ஹங்கேரியினுள் செயற்படும் அரசு அல்லாத தனியார் அமைப்புக்கள் தமக்கு வெளி நாடுகளிலிருந்து யார் நிதி கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை அரசுக்கு வெளியிடவேண்டும் என்று ஹங்கேரி 2017 இல் சட்டமியற்றியிருக்கிறது. அப்படியான சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. “நாடுகளில் இயங்கும் அரசாங்கம் சம்பந்தமில்லாத அமைப்புக்களும் ஒரு நாட்டின் ஜனநாயகத்துக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் அவசியமானவை. அப்படியான அமைப்புக்களை எதிர்க்கலாகாது, உற்சாகப்படுத்தவேண்டும்,” என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம் ஹங்கேரி …

Read More »

பாரிஸில் மறைவிடத்தில்பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!!

பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள் ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. கைதானவர் இலங்கைத் தமிழரா அல்லது இந்தியத் தமிழரா என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.பாரிஸ் ஊடகங்கள் அவரை ஓர் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட் டிருக்கின்றன.சில சுயாதீன வட்டாரங்கள் அவர் ஒர் …

Read More »

“பெருமைக்குரிய கூட்டு முயற்சி” – மக்ரோன் புகழாரம்

பிராங்கோ-அமெரிக்க (Franco-American) கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாயின் தரையில் வெற்றிகரமாக இறங்கியிருப் பதை வரவேற்றுள்ள அதிபர் மக்ரோன், பெருமைப்படக் கூடிய அற்புதமான ஒரு குழுச் செயற்பாடு (“magnificent teamwork”) அது என்று புகழாரம் சூட்டியுள்ளார். நேற்றிரவு பாரிஸ் நகரில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சிக் கற்கைகள் நிலையத்தில் (Centre national d’études spatiales-Cnes) இருந்தவாறு விண்கலம் தரை இறங்குவதை அவதானித்த மக்ரோன் அதன் பிறகு அங்கு உற்சாகத் துடன் …

Read More »

2040 ம் ஆண்டுவரை உலகின் எரிநெய்யின் பெரும்பங்கைக் கொள்வனவு செய்யப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும்.

சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) கணிப்பீட்டின்படி இந்தியாவின் எரிநெய்த் தேவை படுவேகமாக அதிகரித்து வரும் அதே சமயம் இந்தியாவின் சொந்த எரிநெய்த் தயாரிப்பின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே வளைகுடா நாடுகளின் எரிபொருளை பெருமளவு கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா மாறும்.  கடந்து போன வருடங்களில் சீனாவின் தயாரிப்புக்களும், கொள்வனவும் அதிகரித்து வந்ததால் அது உலகின் பெரும்பகுதி எரிபொருளைக் கொள்வனவு செய்தது போன்று இந்தியா மாறவிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு …

Read More »

டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ இயற்கை வாயு ஏற்றுமதி செய்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. கடுமையான குளிர் அந்த மாநிலத்தின் பெரும்பாலான பாகங்களைத் தன் பிடிக்குள் வைத்திருக்க, உறைபனி போக்குவரத்துக்களையெல்லாம் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிக்கும் நிலையங்களெல்லாம் செயற்பட முடியாததால் மூடப்பட்டிருக்கின்றன. எனவே உள்மாநிலத் தேவைக்காக …

Read More »

“ரைம்ஸ்” சஞ்சிகையில் கனடா ஈழத்தமிழ் யுவதி!

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது பட்டியலிலேயே மைத்ரேயியின் பெயரும் இடம்பிடித்துள்ளது. ரிக்ரொக், இன்ஸ்ரகிராம் போன்ற சமூகவலைத்தள வீடியோக்கள் ஊடாக உலகெங்கும் பதின்ம வயதினரிடையே புகழ் பெற்றிருந்த இளம் நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அண்மைக்காலமாகத் …

Read More »

அமெரிக்காவின் பிரபல வானொலி நட்சத்திரம் ரஷ் லிம்பெக் மறைந்தார்.

கடந்த 30 வருடங்களாக அமெரிக்க வானொலி அலைகளில் பரவிவந்த  ”The Rush Limbaugh Show” நிகழ்ச்சியின் நட்சத்திரம் ரஷ் லிம்பெக் தனது 70 வயதில் மறைந்தார். நுரையீரல் புற்றுநோய் அவரது இறப்புக்குக் காரணமாக இருந்தது. வாராவாரம் 13 மில்லியன் அமெரிக்கர்கள் கேட்கும் அவரது வானொலி நிகழ்ச்சியே நாட்டின் மிகப்பெரிய, பிரபல நிகழ்ச்சியாக இருந்து வந்தது. அவரது ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் பழமைவாதிகள், மாஜி ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர்களாகும். லிம்பெக் வானொலி நிகழ்ச்சியானது …

Read More »

டுபாய் அரசன், தன் மகளைச் சிறை வைத்திருப்பது பற்றிய கேள்வி சர்வதேச அரங்கில் சூடாகிறது.

எமிரேட்ஸ் இளவரசி லத்திபாவின் சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோப் படங்களில் தனது தந்தை தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட காலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்த இவ்விடயம் அப்படங்களில் அவர் “எனது உயிருக்கு ஆபத்து,” என்று குறிப்பிட்டிருப்பது பலரையும் எமிரேட்ஸ் அரசனை நோக்கித் திருப்ப வைத்திருக்கிறது. எமிரேட்ஸில் சுதந்திரமாக வாழமுடியாத லத்திபா தன் வாழ்க்கையிலிருந்து தப்ப 2018 இல் படகொன்றில் வெளியேற எத்தனித்தார். முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான …

Read More »

நைஜீரியாவின் தெற்கு நகரொன்றின் பாடசாலைப் பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள்.

நைஜீரியாவின் தெற்கிலிருக்கு ககாரா நகரின் பாடசாலைக்குள் செவ்வாயன்று மாலை புகுந்த குண்டர்கள் குழுவொன்று ஒரு மாணவனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, மேலும் பல மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். சில ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.  இராணுவ உடைகளுடன், பலத்த ஆயுதபாணிகளாக இருந்த அந்தக் குண்டர்கள் சுமார் 1,000 மாணவர்கள் படிக்கும் அந்த அரச பாடசாலையில் கடத்திச் சென்றவர்களின் எண்ணிக்கை 40 என்று தெரியவருகிறது. 26 பேர் மாணவர்கள், மேலும் பதினாலு பேரில் ஆசிரியர்கள், …

Read More »

ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் போது மூச்சு முட்டி உயிரிழந்தது. அதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் அவ்விடயத்தால் 60,000 கையெழுத்துக்களைச் சேகரித்து புனித முழுக்கை வேறு வழியில் செய்யும்படி கோருகிறார்கள் ஒரு குழுவினர். கத்தோலிக்கப் புனித முழுக்கின்போது பாதிரியார் குழந்தைக்கு ஒரு சிறிய ஏதனத்திலிருக்கும் நீரையெடுத்துத் தலையைக் கழுவுவது பாரம்பரியம். ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவ …

Read More »

போர்ட் தனியார் வாகனங்கள் எல்லாமே 2030 இல் மின்கலத்தால் இயக்கப்படுபவையாக இருக்கும்.

தனியார் போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒவ்வொன்றாக எடுத்திருக்கும் முடிவுகளில் காணலாம். தமது சுற்றுப்புற சூழலில் நச்சுக்காற்றுப் பரவலைக் குறைப்பதற்காக அந்த நாடுகள் எடுத்த முடிவுகளின் விளைவாக வாகனங்களில் பாவிக்கப்படும் சக்தியும் மாற்றமடைகிறது. ஜெர்மனியின் வொக்ஸ்வாகன் நிறுவனம் 2026 இல் தனது தனியார் வாகனங்களெல்லாம் மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்கும் என்று அறிவித்தது. 70 புதிய வகை மின்சாரத் தனியார் வாகனங்களைத் தாம் …

Read More »

ஜப்பானின் லிபரல் டெமொகிரடிக் கட்சி ஐந்து பெண்களைக் கட்சி நிர்வாகக் குழுவில் சேர்க்கத் தயார் என்கிறது.

ஜப்பானின் பழம்பெரும் அரசியல் கட்சி ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சி. 1955 ம் ஆண்டிலிருந்து பெரும்பாலும் ஆண்டு வரும் இக்கட்சி தனது நிர்வாக சபையில் மேலும் ஐந்து பெண்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது, ஒரு நிபந்தனையுடன். லிபரல் டெமொகிரடிக் கட்சிப் பொதுச்சபையில் 25 அங்கத்தவர்களுண்டு. அவர்களில் மூவர் பெண்கள். நிர்வாகக் குழுவின் 12 அங்கத்தவர்களில் இருவர் மட்டுமே பெண்கள். அங்கே பெண்களின் இலக்கத்தை அதிகரிக்கவே வித்தியாசமாகச் சிந்திக்கிறது அக்கட்சி. நிர்வாகக் …

Read More »