Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?

பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பணிகளை அனுமதித்த இராணுவம் படிப்படியாகத் தன் பிடியை இறுக்கி எதிர்ப்புக்களை நசுக்க ஆரம்பிக்கிறது. மியான்மார் மக்களின் போராட்டம் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடக்கும் எதிர்ப்பு ஊர்வலங்களுடன் நிற்கவில்லை. மருத்துவ சேவையாளர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் பல பகுதிகளிலும் வேலை நிறுத்தங்கள் செய்கிறார்கள். …

Read More »

தனது கட்சிக்குள்ளிருந்து தன்னை விமர்சித்தவர் மீது டிரம்ப் திருப்பித் தாக்குகிறார்.

சனியன்று அமெரிக்காவின் செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனவரி 06 வன்முறைகளில் டொனால்ட் டிரம்ப்புக்குத் தொடர்பில்லையென்று அவர் நிரபராதியாகக் காணப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆதரவாக வாக்களித்த மிச் மக்கொனால் டிரம்ப் தான் அந்த வன்முறைகளுக்கு முழுக்காரணம் என்று பேட்டிகொடுத்திருந்தார். செனட் சபையின் சிறுபான்மைக் கட்சியான ரிபப்ளிகன் கட்சியின் குழுத் தலைவர் மிச் மக்கொனால். அவரது மனைவி எலேன் டிரம்ப்பின் போக்குவரத்து அமைச்சராக இருந்து ஜனவரி 06 வன்முறைகளை எதிர்த்துப் பதவி …

Read More »

பிரெஞ்சு மக்களது சேமிப்புகடந்த ஆண்டில் மிக உச்சம்! வைரஸ் காலத்தின் நற்பலன்

பிரெஞ்சு மக்களின் நிதி சேமிப்புப் பழக்கம் கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இதனை வைரஸ் காலத்தின் மிக முக்கிய நல்ல செய்தி என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலம் பற்றிய அச்சம், பொது முடக்கங்களால் தேவையற்ற செலவுகள், கொள்முதல்கள் குறைந்தமை, விசேட அரச உதவிக் கொடுப்பனவுகள் இவை போன்ற பல காரணங்களினாலேயே பொது மக்களது சேமிப்பு உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. தேசிய அளவில் வங்கிகளின் livret A …

Read More »

வெளிநாட்டு மத போதனைகளுக்கு டெனிஸ் மொழிபெயர்ப்பு கட்டாயம்! டென்மார்க்கில் சர்ச்சைக்குரிய சட்டம்

ஐரோப்பாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் பரப்பப்படுவதற்கு மதபோதனை ஒரு பிரதான வழிமுறையாக மாறுவதைத் தடுக்க பல நாடுகளும் கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன. பள்ளிவாசல்களில் நடத்தப்படுகின்ற மதபோதனைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு டெனிஸ்(Danish) மொழி தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு மொழிகளில் நடத்தப்படுகின்ற மத போதனைகள், பிரசங்கங்கள் போன்றவற்றுக்கு இனிமேல் டெனிஸ் மொழி பெயர்ப்பைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்குவதற்கு டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட மூலம் ஒன்றை டென்மார்க் நாடாளுமன்றம் இந்த …

Read More »

எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் ரீபொக்கை விற்கப்போவதாக அடிடாஸ் அறிவித்தது.

நைக்கி நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தமது விற்பனையை உயர்த்தும் திட்டத்துடன் 2006 இல் ரீபொக் நிறுவனத்தை வாங்கியது ஜெர்மனிய நிறுவனமான அடிடாஸ். ஆனாலும் ரீபொக் சின்னத்துப் பொருட்களின் விற்பனையால் அடிடாஸ் நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவு இலாபமடைய முடியவில்லை. அடிடாஸ் நிறுவனம் தனது சின்னத்துடன் தயாரிக்கப்படும் விற்பனையைப் படிப்படியாக உயர்த்தினாலும் ரீபொக் விற்பனையில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காததால் அது அடிடாஸ் நிறுவனத்தின் மொத்த செயற்பாட்டுக்குப் பாரமாகவே இருந்து வருகிறது. எனவே, பங்குதாரர்கள், முதலீட்டாளர்களின் …

Read More »

பின்லாந்து ஆராய்ச்சியாளர்களின் கொரோனாத் தடுப்பு மருந்தை மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தலாம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது.  அப்படியான ஒரு மூக்குத் திவலைகளாலான மருந்தை பின்லாந்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகம், ஹெல்சிங்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தெரியவருகிறது. அந்தத் திவலைகளை மிருகங்களில் பரிசீலித்து வெற்றிகரமான விளைவைக் கண்டிருக்கிறார்கள்.  அடுத்த கட்டமாக அவைகளை மனிதப் பாவிப்புக்குப் பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக …

Read More »

பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்காக ஒரு தொகையைக் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்குக் கொடுப்பார்கள்.

“செய்தி நிறுவனங்களிலிருந்து சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான சமுகவலைத் தளங்கள் கொடுப்பதே நியாயம்,” என்ற பரவலான கருத்தைச் சட்டமாக்குகிறது ஆஸ்ரேலியா. அதற்கானபடி நாட்டின் சட்டப்பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றிய விவாதங்கள் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும். செய்தி நிறுவனங்கள் தமது முதலீட்டால் சேகரித்து வெளியிடும் செய்திகளையே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள் பலர். அதனால் செய்திகள் பலரை அடைந்தாலும் அதற்கான நியாயமான விலை செய்தியைத் தயாரித்தவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது பல நாடுகளின், நிறுவனங்களின் கருத்தாகும்.  கூகுள், …

Read More »

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை, அவர்கள் நோயைக் காவித் திரியவுமில்லை.

கொரோனாத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துச் சுவீடனில் நடாத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சியொன்றின்படி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆகக் குறைந்தத் ஒன்பது மாதங்களாவது எதிர்ப்புச் சக்தி நிலைத்திருக்கிறது என்று தெரியவருகிறது. சுவீடனின் கரோலின்ஸ்கா மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்களால் தாக்கப்பட்டவர்கள் 2,000 பேரை அடிக்கடி பரிசோதித்து அவர்களிடம் நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்படது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் நீண்ட காலத்துக்கு அந்தக் கிருமிகளால் மீண்டும் தொற்றப்படவில்லையென்பது ஒரு பிரயோசனத்துக்குரிய அவதானிப்பு …

Read More »

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்தவர்களைக் கொன்றதற்காக தனது குடிமக்களைத் தண்டிப்பது மிகவும் அரிது.  கணவன் பாஸம் சலேமுக்கு மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அபிரோனுக்கு மருத்துவ உதவி செய்யாமலிருந்த குற்றத்துக்காகவும், வீட்டுக்கு வெளியே வேறிடங்களில் வேலைக்கு அனுப்பியதற்காகவும் அவன் தண்டிக்கப்பட்டான். கொலையிலும் சித்திரவதைகளிலிலும் ஈடுபட்ட …

Read More »

கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.

2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில்  Vetevendosje என்ற இடதுசாரிக் கட்சி எதிர்பார்த்ததுபோல வெற்றியடைந்திருக்கிறது.  ஏற்கனவே ஆட்சிக்கட்டிலிலிருந்த பிரதான கட்சிகள் இரண்டும் முறையே 17 %, 13% வாக்குகளை எடுக்க அல்பின் குர்ட்டி என்ற மக்களின் அபிமான அரசியல்வாதியின் கட்சி 48 % வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறது. ஆனால், அபிமானத்துக்குரிய …

Read More »

றுவாண்டா இனப்படுகொலை : குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!

1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய பிரான்ஷூவா மித்ரோன் அரசு அங்குள்ள தனது விசேட பிரதிநிதிக்கு ரகசியமாக உத்தரவிட்டது. இதனை நிரூபிக்கின்ற பழைய ரகசிய தந்திப் பிரதி ஒன்று(telegram- confidential diplomacy) வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்ற தகவலை பிரான்ஸின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 1994 இல் றுவாண்டா படுகொலைகள் நிகழ்ந்த …

Read More »

பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி. இக்குற்றம் 2018 இல் நடந்தது. குறிப்பிட்ட தண்டனைகள் தவிர அதிபருக்கு ஒரு லட்சமும், ஆசிரியருக்கு 50,000 ரூபாயும் தண்டமும் விதிக்கப்பட்டது.  11 வயதான தங்கள் மகளின் சுகவீனத்தைக் கவனித்த பெற்றோர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசீலித்தபோது அவள் …

Read More »

நெதர்லாந்தில் கைதுசெய்யப்பட்ட போலந்துக்காரரைப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்கிறது நெதர்லாந்தின் நீதிமன்றம்

மனிதர்களைக் கடத்துதல், போதை மருந்துகளைக் கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த 33 வயது போலிஷ்காரரை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காரணம் போலந்தின் நீதிமன்றம் அரசியல் கலக்காமல் நீதி பரிபாலிக்கும் என்ற நம்பிக்கையின்மையாகும். நெதர்லாந்தின் நீதிமன்றம் எடுக்கும் இந்த முடிவின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே நிலவும் நீதிபரிபாலிப்பது சம்பந்தமான கூட்டுறவு சர்ச்சைக்கு உள்ளாகிறது. மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் போலந்துக்குமான உறவிலும் கேள்விக்குறி …

Read More »

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்த வன்முறைகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது.

கட்சிச் சார்பற்ற ஒரு குழுவின் மூலம் ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, நடத்தைகள் போன்றவை விசாரிக்கப்படவிருக்கின்றன. டெமொகிரடிக் கட்சியின் நான்ஸி பெலோசியால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருத்தை இரண்டு கட்சியினரும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களில் முக்கியமானவர்கள் உட்பட ரிபப்ளிகன் கட்சியினர் பலரும் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்தவைகளை முழுவதுமாக ஆராய்வது நல்லது என்று கருதுகிறார்கள். செப்டம்பர் 11 இல் …

Read More »

ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச் சட்டபூர்வமான குடியுரிமைகளைக் கொடுப்பதாக கொலம்பியா தெரிவித்திருக்கிறது.  கொலம்பிய ஜனாதிபதியும், ஐ-நா-வின் அகதிகளுக்கான உயரதிகாரியும் சேர்ந்து இந்த முடிவை அறிவித்தார்கள். இந்த நகர்வு உலகம் முழுவதும் பெரும் பாராட்டைக் கொலம்பியாவுக்குக் கொடுக்கிறது. வெனிசுவேலாவின் அகதிகளில் பெரும்பாலானோர் – சுமார் 1.7 மில்லியன் பேர் …

Read More »

துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை வளைத்துக் கைதுசெய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அக்கட்சி துருக்கியின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாகும். குர்தீஷ் தொழிலாளர் கட்சி (PKK) என்ற பெயரில் துருக்கி, ஈரான், ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ போன்றவர்களால் தீவிரவாத அமைப்பு என்ற பட்டியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுடன் கூட்டுறவு கொண்டிருப்பதாகவே அந்த குர்தீஷ் அரசியல்வாதிகள் …

Read More »

இரகசியமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெருவின் வெளிவிவகார அமைச்சர் பதவி விலகினார்.

கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதில் பெரு நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் செய்த முறைகேடுகள் வெளியாகி நாட்டை அதிரவைத்திருக்கின்றன. அப்படியாக ஜனவரியிலேயே எல்லோருக்கும் முதல் இரகசியமாக முதலாவது ஊசியைப் போட்டுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் எலிசபெத் அஸ்தேதே தனது நடவடிக்கை நாட்டு மக்களைக் கோபப்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை, என்று கூறிப் பதவியிலிருந்து விலகினார். சுமார் 32 மில்லியன் குடிமக்களைக் கொண்ட பெருவில் 1.2 மில்லியன் பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் …

Read More »

மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர்.

மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து கீழே போட்டார்கள். பின்னர் ஹெலிகொப்டர் ஒன்று அவர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமாகக் கியூபாவிலிருந்து படகொன்றில் புறப்பட்டபோது படகு உடைந்து அவர்கள் குறிப்பிட்ட தீவுக்கு அருகேயிருந்து நீந்தி அந்தத் தீவை அடைந்திருந்தார்கள். மனித நடமாற்றமற்ற அத்தீவிலிருந்து தேங்காய், கடலிருக்கும் …

Read More »

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் தனது பழைய விமானத் தளங்களை தூசு தட்டி மீண்டும் பாவிக்க ஆரம்பிக்கிறது அமெரிக்கா.

சீனாவைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலை தளம்பும் நிலையால் அமெரிக்கா தனது போர்த் திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது அதி நவீன F 35 போர் விமானங்களையெல்லாம் குவாமில் கட்டப்பட்ட நவீன விமானத்தளத்தில் வைத்திருந்த அமெரிக்கா தற்போது அவைகளை வெவ்வேறு சிறிய விமானத் தளங்களுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது. பசுபிக் பிராந்தியத்தில் பல விமானத் தளங்களை வைத்திருப்பதைவிட ஒரேயிடத்தில் நவீன தரங்களுடன் ஒரேயொரு போர் விமானத் தளத்தை வைத்திருப்பதால் செலவுகளைக் குறைக்கலாம் என்ற …

Read More »

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட பேஸ்புக் குழு மூலம் தமது கருத்துகளைப் பரப்பி வந்தனர். பெப்ரவரி 15 ம் திகதி சிறுதொழில்கள் செய்யும் கடைகளை அரச கட்டுப்பாடுகளை மீறித் திறக்கும்படி அந்தப் பேஸ்புக் குழுவில் எல்லோரையும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்கள் கொரோனாத் தொற்றுக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய், அதை …

Read More »