Friday , February 26 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை.

ஞாயிறன்று ஸ்பெயினின் கத்தலோனிய மாநிலத்தில் நடந்த தேர்தல் அந்த நாட்டினரால் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. காரணம் பார்ஸலோனா நகரைத் தலைநகராகக் கொண்டு, ஸ்பெயினின் வடகிழக்கிலிருக்கும் பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட கத்தலோனிய மக்களிடையே தனிநாட்டுக் கோரிக்கை பலமாக இருப்பதாலாகும். ஸ்பெயினிலிருந்து வித்தியாசமான ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான சரித்திரத்தைக் கொண்ட கத்தலோனியா 7.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்பெயினின் சுபீட்சமான மாநிலமாகும். அப்பிராந்தியம் தனி மொழி, தனிக் கொடி, …

Read More »

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஸூமா தான் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வர மறுக்கிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது அடுக்கடுக்காக லஞ்ச ஊழல், நாட்டின் வளங்களைச் சுரண்டுதல் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தல் போன்றவைகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். அதற்காக நாளை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுப் போக மாட்டேன் என்கிறார். 78 வயதான ஜாக்கோப் ஸூமா 2018 இல் குப்தா சகோதர்களுக்ளுடன் இணைந்து செய்த ஊழல்கள் வெளிவந்ததால் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டவர். லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்தியாவைச் …

Read More »

முதல் தடவையாக உலக வர்த்தக அமைப்புக்குத் தலைவராக ஒரு ஆபிரிக்கப் பெண் தலைவர் பதவியேற்கவிருக்கிறார்.

டொனால்ட் டிரம்பின் காலத்து வர்த்தகப் போர் வியூகங்களின் காரணமாக முடமாகிப்போயிருக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்று உலக வர்த்தக ஒன்றியம். அமைப்பின் தலைவருக்கான போட்டியில் கடையிசியாக எஞ்சியிருந்த  யூ மியூங் ஹீ என்பவரும் பின்வாங்கிக்கொண்டதால் எஞ்சியவர் நைஜீரியரான  [Ngozi Okonjo-Iweala] ங்கோசி ஒக்கொன்யோ – இவாலாவாகும். நைஜீரியாவின் பொருளாதார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராகவும் இருந்த 66 வயதான ங்கோசி சுமார் 25 வருடமாக சர்வதேச வர்த்தக அமைப்பில் வளரும் நாடுகளின் பொருளாதார …

Read More »

தென்னாபிரிக்கா வைரஸ்:தீவிரமான மறுதொற்றுடன்ஆஸ்மா நோயாளி அனுமதி

பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். 58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக் காவில் தொடங்கிய திரிபு மாறிய வைரஸினால் அவர் இரண்டாவது தடவை மோசமாகப் பீடிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்ரெம்பரில் மூச்சு விட முடியாத நிலையில் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் …

Read More »

‘திட்டமிட்டபடி இராணுவத்தை வாபஸ் வாங்குங்கள்’, என்று ஆப்கான் தலிபான்கள் நாட்டோவுக்கு எச்சரிக்கிறார்கள்.

ஜோ பைடன் அரசுக்கு டொனால்ட் டிரம்ப் விட்டுப்போன தலையிடிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ துருப்புக்களை முழுவதுமாக வாபஸ் வாங்குவதாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியும், முடிவுமாகும். நீண்ட காலமாகத் தலிபான்களுடன் கத்தாரில் நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அடித்தளங்களில் ஒன்றாக அது இருந்து வருகிறது.  எனவே தான், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கும் ஒரு விடயமான ‘ஆப்கானிஸ்தானிலிருந்து நாட்டோவின் இராணுவத்தினரை வாபஸ்பெறுவதா, இல்லையா,’ என்பது பற்றித் …

Read More »

பால்டிக் கடல் பரப்பு, தேம்ஸ் நதியின் சில பகுதிகள் பற்பல வருடங்களுக்குப் பின்னர் உறைந்திருக்கின்றன.

சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் லண்டனின் தேம்ஸ் நதி ஆங்காங்கே உறைந்திருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. அதே போலவே பால்டிக் கடலின் வட பாகங்களும் சில வருடங்களுக்குப் பின்னர் முழுவதுமாக உறைந்திருக்கின்றன. சுவீடனின் கிழக்கிலும், மேற்கிலும் கடல் பகுதிகளும், டென்மார்க்கின் குளங்கள் சிலவும் கூட உறைந்து போயிருக்கின்றன. கடைசியாக தேம்ஸ் நதி முழுவதுமாக உறைந்து போயிருந்தது 1963 ஜனவரி மாதத்திலாகும். கடுமையான குளிர் வட பிராந்தியத்திலிருந்து பரவுவதே லண்டன் பகுதிகளில் உறையும் …

Read More »

இந்தியாவின் 20 விகிதமான நிலப்பரப்பின் நிலக்கீழ் நீர் பாவிப்பவர்களுக்கு ஆபத்தையூட்டும் நஞ்சு நிறைந்ததாகக் காணப்படுகிறது.

பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்கிறது ஆராய்ச்சி. இந்துஸ், கங்கா, பிரம்மபுத்ரா நதிப்படுக்கைகளின் நிலப்பகுதிகள் மிகவும் அதிக நச்சுத்தன்மையுள்ள நிலக்கீழ் நீரைக் கொண்டிருக்கின்றன. பஞ்சாப் [92%], பீகார் [70 %], மேற்கு வங்காளம் [69%], அஸாம் [48%], ஹரியானா [43%], உத்தர் பிரதேஷ் …

Read More »

ஏழு ரிபப்ளிகன் கட்சியினர் மட்டும் டிரம்ப்பைத் தண்டிக்கவேண்டுமென்று வாக்களித்தது போதாமையால் விடுவிக்கப்பட்டார் மீண்டும் டிரம்ப்.

செனட் சபையில் டிரம்ப்பைக் குற்றவாளியாகக் காண்பதற்கு 100 பேருள்ள சபையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆனால் 57-43 என்ற வாக்குகளே ஆதரவாக விழுந்தன. சபையின் 50 டெமொகிரடிக் கட்சியினருடன் ஏழு ரிபப்ளிகன் கட்சிக்காரரும் சேர்ந்து வாக்களித்தனர். ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்ததுபோலவே டிரம்ப் இரண்டாவது தடவையாகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிராக நடந்தாரென்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பியிருக்கிறார். இது ரிபப்ளிகன் கட்சியினரிடையே டிரம்ப்புக்கு இருந்துவரும் ஆதரவை மட்டுமன்றி கட்சிக்குள் நடந்துவரும் கோட்பாட்டு விரிசலையும் காட்டுகிறது. …

Read More »

நெப்போலியன் 1812 இல் ரஷ்யாவுடன் போரிட்டுத் தோல்வியுற்றுப் பின்வாங்கிய சமயத்தில் இறந்த இராணுவத்தினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பெரும் இராணுவ வெற்றிகளை அடைந்த நெப்போலியனுடைய இராணுவமும் ரஷ்யாவைக் கைப்பற்ற முற்பட்டுத் தோல்வியடைந்தது. வியாசாமா போர்க்களம் என்ற அந்தப் போரில் ரஷ்யா பின்வாங்க ஆரம்பித்தபோது இறந்த 120 போர்வீரர்களும் 200 வருடங்களுக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர். 1812 ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதியன்று ஆரம்பித்த அந்தப் போரில் ரஷ்யாவின் தளபதி நெப்போலியனின் இராணுவத்தின் மீது மொஸ்கோவுக்கு வெளியே வைத்து அதிரடித் தாக்குதலை நடத்தினார். பிரான்ஸிலிருந்து 100,000 வீரர்களுடன் ரஷ்யாவை …

Read More »

தமது நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் தேவையில்லையென்று தன்சானியாவுக்கு அடுத்ததாக புருண்டியும் அறிவித்திருக்கிறது.

கடந்த மாதத்தில் புருண்டி நாட்டின் நீர், நில எல்லைகளெல்லாம் கடந்த மாதம் மூடப்பட்டன. சுமார் 1,600 பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  “நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் 95 % பேர் குணமாகி வருகிறார்கள். நோய் வராமல் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுப்பதே அவசியம். தடுப்பு மருந்துகள் எங்களுக்குத் தேவையில்லை,” என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அறிவித்திருக்கிறார். நாட்டின் ஜனாதிபதி “எங்கள் நாட்டில் புதிய கொவிட் 19 நோயாளிகள் உருவாவதற்குக் காரணம் …

Read More »

ஏற்கனவே கொவிட் 19 ஆல் தொற்றப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மட்டுமே போதுமென்கிறது பிரான்ஸ்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பலமான கொரோனா  எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பதாக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், ஏற்கனவே நோயிலிருந்து குணமானவர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசி மட்டுமே போதுமென்ற அறிவுறுத்தலைப் பிரான்ஸ் தனது நாட்டின் மருத்துவ சேவைக்குக் கொடுத்திருக்கிறது.  இதுவரை 2.1 மில்லியன் பிரென்சுக்காரர்களுக்கு ஒரு தடுப்பூசியும், சுமார் 535,800 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே கொவிட் 19 பெற்ற ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஒரு தடுப்பூசியே …

Read More »

நீரிழிவு நோய்க்குப் பாவிக்கப்படும் மருந்தொன்று உடல் பருமனைக் குறைக்க உதவுமென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“உடல்பருமனைக் குறைப்பதற்கான போராட்டத்தில் இது மிகப்பெரிய ஒரு வெற்றி,” என்று New England Journal of Medicine சஞ்சிகையில் தமது ஆராய்ச்சியின் விபரங்களை வெளியிட்டிருக்கிறார்கள் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.  உடலில் இன்ஸுலினை அதிகரிப்பதற்காக நீரிழிவு நோயாளிகளிடையே பாவிக்கப்படும் Semaglutide என்ற மருந்தே உடல் பருமனைக் குறைக்கவும் பயன்படுகிறது. அது இன்ஸுலினை கூட்டும் அதே சமயம் பசியையும் மட்டுப்படுத்திவிடுவதே உடல் பருமனைக் குறைப்பதற்கான காரணமென்று ஊகிக்கப்படுகிறது. மருந்தின் செயற்பாடு மூளையை …

Read More »

கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டிருந்த துருக்கிய மாலுமிகள் விரைவில் நாடு திரும்புவார்கள்.

கடந்த மாதம் நைஜீரியாவுக்கு வெளியே கினியா குடாவில் வைத்துக் கடற்கொள்ளைக்காரர்களால் கைப்பற்றப்பட்ட துருக்கிய மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று துருக்கி தெரிவிக்கிறது. கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட ஒரு ஆஸார்பைஜானியைத் தவிர 15 துருக்கிய மாலுமியர்களும் நலமாக இருக்கிறார்கள். உலகில் கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும் கினியாக் குடாவில் The Mozart ஜனவரி 23ம் தேதியன்று கைப்பற்றப்பட்டது. மாலுமிகளையும், கப்பல்களையும் கைப்பற்றி வைத்துக் கப்பல் நிறுவனங்களிடம் கப்பம் கேட்கும் கடற்கொள்ளைக்காரர்கள் அதிகமாக இருக்கும் …

Read More »

ரிஹானாவின் தயாரிப்புக்கள் ஜார்காண்டில் குழந்தைகளின் வாழ்வைப் பாழடிப்பதாகக் குறிப்பிட்டு போராட்டம்.

பிரபல இசைத் தாரகை ரிஹானாவுக்கெதிராக இந்தியாவின் ஜார்காண்டின் குழுவொன்றினால் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. Fenty Beauty என்ற ரிஹானாவின் அழகுசாதனப் பொருட்கள் சிறுவயதினரைச் சுரங்க வேலைக்குப் பாவிக்கும் நிறுவனத்தின் பொருட்களைப் பாவிப்பதாகக் குறிப்பிட்டு பல்பொருள் அங்காடிக் கட்டடமொன்றின் முன்னால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.  Fenty Beauty பிரெஞ்சு நிறுவனமான ஸெபோராவால் சந்தைப்படுத்தப்படுகிறது. அந்த நிறுவனம் மிகா என்றழைக்கப்படும் ஜார்காண்ட் சுரங்கங்களில் எடுக்கப்பட்ட  இரசாயணப் பொருளைப் பாவிக்கின்றன. அச்சுரங்கங்களில் லட்சக்கணக்கான வயதுக்கு வராதவர்கள் …

Read More »

பாலுறவுக்கான சம்மதத்தைக் கொடுக்கும் வயதாக 15 ஐ தீர்மானிக்கவிருக்கிறது பிரான்ஸ்.

ஒருவர் எத்தனை வயதில் உடலுறவுக்கான சம்மதத்தை இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்ற வயது வரம்பு இல்லாத நாடாக பிரான்ஸ் இருந்துவந்தது. அதனால் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்குவது நீண்டகாலமாகவே பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. சிறு வயதில் ஒரு நபர் பாலியல் இச்சைக்கு இன்னொருவரிடம் பலியாகியிருந்தால் அந்த நபர் 48 வயதுவரை அதை வெளிப்படுத்தலாம் என்ற சட்டம் இருந்து வருகிறது. ஆனால், வயதுக்கு வந்த ஒருவர் எந்த வயதில் ஒரு வயது குறைந்தவருடன் …

Read More »

இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement to rebellion) என்று இன்று செனட் சபை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் உண்டு. வியாழனன்று வரை டெமொகிரடிக் கட்சியாளர்கள் டிரம்ப்பின் வார்த்தைகள் எப்படி அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டித் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபடவைத்தது என்ற வாதங்களை முன்வைத்தார்கள். அத்துடன் பாராளுமன்றக் கட்டடக் கண்காணிப்புப் படங்களையும் …

Read More »

அமெரிக்க அரசியலில் ரிபப்ளிகன் கட்சியிலிருந்து பிளவடைந்தவர்கள் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார்களா?

பதவியிலிருந்து விலகிய டொனால்ட் டிரம்ப்பின் நிழல் தொடர்ந்து ரிபப்ளிகன் கட்சியின் மேல் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக சுமார் 120 ரிபப்ளிகன் கட்சி முக்கியஸ்தவர்கள் கூடி நடாத்திய மாநாட்டில் புதியதொரு கட்சி தொடங்குவது பற்றி ஆராய்ந்தார்கள்.  டிரம்ப்பின் ஆட்சி அதிகாரங்களுக்குள்ளிருந்து விலகியவர்களும், அதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த புஷ், ரீகன் ஆகியோரின் ஆட்சியில் முக்கிய இடங்களை வகித்தவர்களுமான ரிபப்ளிகன் கட்சிக்காரர்களே அமெரிக்க அரசியல் மைதானத்துக்குள் புதியதொரு வலதுசாரி – மத்திய கோட்பாட்டுக் …

Read More »

வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரிட்டனுடனான பேச்சுவார்த்தைகளில் மென்மையான தனத்தைப் பேணும்படி கேட்டுக்கொள்கிறது. “வட அயர்லாந்து வர்த்தகக் கையாளல்” பற்றிய பேசுவார்த்தைகளில் பங்குபற்றும் பிரிட்டன், மற்றும் ஒன்றியப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் விசனத்துக்குரியதாக இருக்கின்றன. வட அயர்லாந்தில் ஏற்கனவே இருக்கும் அரசியல் பிளவுகளை ஆழமாக்காதீர்கள்,” …

Read More »

உலக நாடுகளிடையே தொற்றிப் புதியதாகப் பீதியைக் கிளப்பிவரும் பிரிட்டனில் திரிபடைந்த கொரோனாக் கிருமி வகை.

முதல் முதலாகப் பிரிட்டனில் காணப்பட்ட திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் இப்போது எண்பது நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றன. பிரிட்டன் முழுவது அது எப்படிக் காட்டுத்தீ போலப் பரவியதோ அதே போலவே உலகெங்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் பிரிட்டனின் கிருமித்தொற்றுப் பரவல் விற்பன்னர்கள். “1.1.7 என்ற அடையாளப் பெயரால் குறிப்பிடப்படும் இந்த வரைக் கிருமிகள் முன்னையதைவிட வேகமாகப் பரவித் தாக்குகின்றன. அவை தொடர்ந்தும் வெவ்வேறு உருவில் திரிபடையக் கூடியவை. அப்படியான …

Read More »

ஷின்சியாங் சீர்திருத்த முகாம்கள் பற்றியப் பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக பி.பி.சி – சீனாவில் தடை செய்யப்பட்டது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவரான ஊகூரர்களை கம்யூனிஸக் கோட்பாடுகளில் ஊறவைப்பதற்காகக் கட்டாய முகாம்களில் சிறைவைப்பது பற்றி பிபிசி உட்படப் பல ஊடகங்களும் எழுதி வருகின்றன. அம்முகாம்களில் அடிமை வேலை, முஸ்லீம் பெண்கள் மீதான கற்பழிப்புகள் போன்றவை அதிகாரிகளால் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்படுவதாகச் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பிபிசி விபரித்திருந்தது. அதைத் தவிர ஹொங்கொங்கில் சீனா அறிமுகப்படுத்திவரும் புதிய கட்டுப்பாடுகள், கொரோனா கிருமிகள் சீனாவில்தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டன போன்ற கட்டுரைகளையும் சீன …

Read More »