யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன்

யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமத்துவ பீடாதிபதியாக பேராசிரியர் திரு பாலசுந்தரம் நிமலதாசன் அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதே பல்கலைக்கழகத்தின் வணிக பட்டதாரியான இவர் றாஜறட்ட பல்கலைகலைக்கழ பட்டதாரியுமாகி பங்களாதேஷ் நாட்டின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்று தனது கல்வித்தகமை அந்தஸ்தை மிகக்குறைந்த வயதில் உயர்வாக்கியிருந்தார்.

பல்கலைகழகத்தில் 2005ம் ஆண்டு விரிவுரையாளராக தனது கல்விப்பணியை ஆரம்பித்த பேராசிரியர் திரு நிமலதாசன், 2010ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளராகவும், 2015 ம் ஆண்டில் பேராசிரியராகவும் தகமைபெற்றிந்தார்.சம காலத்தில் யாழ் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி அமைப்பின் பணிப்பாளராக செயலாற்றினார்.

கல்வித்துறையில் கணக்கியலில் உயர்தகமையாகிய பேராசிரியராக திகழ்ந்த இவர் அண்மைய நாள்களில் முகாமைத்துவ வணிக பீடாதிபதியாக தெரிவாகி தன்னையும் தனது சமூகத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

மிகக்குறைந்த வயதில் பேராசிரியராகவும் பீடாதிபதியாகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ள பேராசிரியர் திரு பாலசுந்தகம் நிமலதாசன் அவர்கள் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *