அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு 13ல் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் மாலை மூன்று மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் உலக அன்பு அறிவிப்பாளர் திரு அப்துல் ஹமீத் அவர்களும் சிரேஷ்ட கலைஞரும் திரைப்பட நாடக புகழ்பெற்ற நடிகருமான திரு சந்திரசேகரன் அவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

கிராமியக் கலைகளும் தலை நகரில் இந்த அரங்கில் அரங்கேற்றப்படவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

பல்துறைசார் ஆளுமைகள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கும் அதேவேளை இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் பங்குபற்றுகிறார்.அதேவேளை கௌரவ விருந்தினராக வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி சங்க தலைவர் வணக்கத்துக்குரிய அருட்கலாநிதி எஸ்.சந்திரகுமார் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

அதேவேளை இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்,தினகரன் பிரதம ஆசிரியர் திரு செந்தில் வேலவர் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்

அத்துடன் அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியத்தின் இரண்டாம் வருட மாபெரும் விழாவாக இது கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் அழைப்பிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *