லண்டனில் வெளியான தாமரைச்செல்வியின் வன்னியாச்சி
எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல் லண்டனில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அக்கதைகள் தொடர்பாக நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருமதி சந்திரா இரவீந்திரன் தலைமை தங்கியிருந்தார். மேலும் இந்நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நவஜோதி யோகரட்ணம், இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ச. வேலு மற்றும் குணநாயகம் ஆகியோரால் இந் நூல் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது.
கருத்துரைகளைத் தொடர்ந்து அங்கு சமூகமளித்திருந்த இலக்கிய ஆர்வலர்களால் பரிமாறப்பட்டது கருத்துப்பரிமாற்றத்தில் நூல் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
வளமான வன்னி மண்ணின் வாழ்வை கதைகளாகக்கொண்ட ஒரு நூல் இந்த வன்னியாச்சி பலரும் வாசித்து எம் மண்ணின் வாழ்வியலை நெடுகாலம் பேச வேண்டும் என்பது பலரின் வெளிப்பாடுகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.