Monday , January 25 2021
Breaking News

முதன்மைச் செய்திகள்

உள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 500 மீற்றர் ஆழத்தில் மாட்டிக்கொண்டிருந்த சீனாவின் சுரங்கத் தொழிலாளர்களில் பாதிப்பேரை உதவிப்படை மீட்டெடுத்தது. முதலாவதாக வெளியே எடுக்கப்படுபவரை இயந்திரம் மூலம் வெளியே தூக்கிப் போர்வைகளுக்குள் மூடிச் சிகிச்சைக்குக் கொண்டு செல்வதை அரச தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம். “எதிர்பாராதவிதமாக முதல் படலங்களைத் தோண்டியெடுத்தபின் பெரிய இடைவெளியை நாம் சந்திக்க முடிந்தது. அதனால் அதிர்ஷ்டவசமாக எமது காப்பாற்றும் படையால் 11 பேரை …

Read More »

ஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.

சர்வதேச ரீதியில் தேடப்படுகிறவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சீன – கனடியக் குடிமகன் ஸே சி லொப் [Tse Chi Lop] என்பவரை நெதர்லாந்து பொலீஸ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆசியாவில் என்றுமில்லாத ஒரு பெரிய போதைப் பொருள் சாம்ராச்சியத்தின் தலைவன் ஸே சி லொப் என்று ஓரிரு வருடங்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது. சாம் கோர் சிண்டிகேட் என்றழைக்கப்படும் போதைப் பொருள் சாம்ராச்சியத்தை மக்காவ், ஹொங்கொங்க் மற்றும் …

Read More »

கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark Web” இல் கொவிட் 19 சம்பந்தப்பட்ட பல விதமான விளம்பரங்களைக் காணமுடிகிறது. தடுப்பு மருந்து மட்டுமன்றி, தடுப்பு மருந்து பெற்றதற்கான போலிச் சான்றிதழ், தொற்று இல்லையென்று காட்டும் போலிச் சான்றிதழ்கள் போன்றவையும் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரங்கள் காணக்கிடக்கின்றன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து மனிதர்களிடம் …

Read More »

கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு!

“சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”.. “கூரையில் புறாக்கள் புறுபுறுக்கின்றன..””வீதி வளைவில் கழுதை கனைக்கிறது…”” வயலில் சூடடிக்கும் சத்தம் என் ஜன்னலில் கேட்கிறது… “.. கோவில் மணி ஓசை கிட்டவாய் ஒலிக்கிறது..” -இப்படியெல்லாம் அயலோடு குற்றம் குறைபட்டுக் கொண்டு யாரும் இனிமேல் நீதிமன்றங்களை நாடமுடியாது. கிராமங்களில் இது சகஜம். …

Read More »

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப காலத்தில் மீன் மற்றும் விலங்குகளை விற்கும் சந்தையொன்றில் ஆரம்பித்ததாகக் குறிப்பிடப்படும் தொற்றல் வேகமாகப் பரவி வருகிறது. தாய்லாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் கூடக் கொரோனாத் தொற்றல்கள் நிற்கவில்லை. குறிப்பிட்ட தொற்றுக்களுக்கான காரணம் பக்கத்து நாடான மியான்மாரிலிருந்து தாய்லாந்துக்குக் களவாக வந்திருக்கும் தொழிலாளிகளே …

Read More »

பாரிஸில் கல்லூரி மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள்

பாரிஸில் 15 வயதான கல்லூரி மாணவன் ஒருவன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் மிக மோசமாகச் தாக்கப்பட்டுக் குற்றுயிராக விடப்பட்ட சம்பவத்துக்கு எதிரான உணர்வலைகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்மான்(Antoine Griezmann,) நடிகர் ஒமர் சீ(Omar Sy) உட்பட பல பிரபலங்கள் மாணவனுக்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டதை அடுத்து இந்தச் சம்பவம் பரவலான கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாக …

Read More »

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல் திட்டமிட்டது போல நடந்தேறும் என்றே தெரிகிறது. சுமார் பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போர்த்துகல் முதலாவது கொரோனாத் தொற்று அலையில் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடக் குறைந்த இறப்புக்களை நேரிட்டது. ஆனால், பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய …

Read More »

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021 ஆகிய இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் அதையொட்டியே உத்ரகாண்டைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியான ஸ்ருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர்கள்/சிறார்கள் மாநில சட்ட மன்ற முதல்வராக இருந்து வரும் ஸ்ருஷ்டி கோஸ்வாமி இந்த ஒரு நாள் மாநில …

Read More »

பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி!

கொரோனா பெருநோய்த் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் அரசியல் புகலிடம் கோருவோரது எண்ணிக்கை கடந்த வருடம் 41 வீதத்தால் குறைந் துள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட அதி கூடிய வீழ்ச்சி இதுவாகும்.2020 இல் 81,669 புகலிட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அதற்கு முதல் ஆண்டில் (2019)அந்த எண்ணிக்கை 138,420 ஆகும்.கொரோனா நெருக்கடி காரணமாக எல்லைகள் மூடப்பட்டமை, குடியேற்ற வாசிகளது பயணங்கள் தடைப்பட்டமை, கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத …

Read More »

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடுதல் “கொரானாப்பாதுகாப்பு,” என்பதற்கு மறுபெயராகிவிட்டது. முகக்கவசத்தால் மட்டுமே தொற்றிலிருந்து எவரும் தம்மையோ மற்றவரையோ முழுவதும் காப்பாற்ற முடியாது என்று மருத்துவ ஆராய்வுகள் குறிப்பிட்டு வந்தாலும், நீண்டகாலமாகவே துணியிலான சாதாரண முகக்கவசம் போதுமென்ற நிலைமை இருந்தது. ஆனால், சமீப வாரங்களில் …

Read More »

சிறுமியொருத்தியின் மரணத்தின் பின் இத்தாலி டிக் டொக்குக்கு புதிய வரையறைகளை விதிக்கிறது.

டிக் டொக்கைப் பாவித்த ஒரு 10 வயதுச் சிறுமி அதில் நடந்த போட்டியொன்றால் இறந்து போனதால்  வயது நிர்ணயிக்க முடியாதவர்களை டிக் டொக் செயலியில் சேர அனுமதிக்க வேண்டாமென்று இத்தாலிய அரசு கேட்டுக்கொள்கிறது.  டிக் டொக் செயலியில் சேர்ந்துகொள்வதற்கான வயது 13 என்று அந்த நிறுவனத்தின் நிபந்தனைகள் அறிவிக்கின்றன. ஆனாலும், நிஜத்தில் அதை அந்த நிறுவனத்தால் கண்காணித்துப் பேண முடியவில்லை.  இத்தாலியின் பலர்மோ நகரைச் சேர்ந்த டிக் டொக் பாவிக்கும் …

Read More »

இன்று முதல் நோர்வேயின் தலைநகரம் பொதுமுடக்கத்தில்!

இன்று [23.01]காலை நடந்த பிரத்தியேகமான பத்திரிகையாளர் சந்திப்பில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவும் அதன் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 10 நகரசபைப் பிராந்தியங்களும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஒஸ்லோவின் அருகிலுள்ள Nordre Follo என்ற நகரசபைக்குள் இருக்கும் நீண்டகால முதியோர் இல்லமொன்றில் வாழும் 12 முதியவர்களும், 22 சேவைத் தொழிலாளர்களும் பிரிட்டனில் இருந்து பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமியால் தொற்றியதாகக் …

Read More »

மனிதர்களைக் கடத்திவந்தவர்களுக்கு பிரிட்டனில் நீண்டகாலச் சிறை.

2019 இல் பிரிட்டனுக்குள் பாரவண்டி மூலம் வியட்நாம் அகதிகள் 39 பேரைக் கடத்திவந்தபோது அவர்கள் இறந்ததில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு பிரிட்டனில் 13 முதல் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கொலைகள், திட்டமிட்ட மனிதக் கடத்தல்கள், அகதிகளை பாரவண்டிக்குள் சாகவிட்டமை போன்றவைகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட குழு பல வருடங்களாகவே மனிதக் கடத்தல்களில் ஈடுபட்டிருந்ததாகப் பொலீஸ் விசாரணைகள் மூலம் அறிய முடிந்தது. அகதிகள் பெல்ஜியத்தில் ஸீபுருக் என்ற இடத்தில் …

Read More »

பிரான்ஸில் பொதுமுடக்கம் இனப்பெருக்கத்தை குறைத்திருக்கிறது.

சமீப வருடங்களில் இனப்பெருக்கம் குறைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கியமான ஒன்று பிரான்ஸ். 2020 இல் கொரோனாப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்போகிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால், அது நிஜமாகவில்லை. தம்பதியர்கள் வேலைக்குப் போகாமல் வீடுகளில் ஒன்றாக இருக்கும்போது அவர்களிடையே நெருக்கம் ஏற்படவும், கருத்தரிப்புக்கள் உண்டாகவும் சந்தர்ப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது. அது ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் நகைச்சுவையாகவும் குறிப்பிடப்பட்டது. ஆரம்ப மாதத்தில் …

Read More »

உறுதியளித்ததைவிடக் குறைவான மருந்துகளையே ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தரமுடியும் என்கிறது அஸ்ரா ஸெனகா.

தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களால் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தால் ஐரோப்பிய நாடுகளுக்குத் தருவதாக உறுதியளித்த தடுப்பு மருந்துகளைவிட 60 விகிதம் குறைவானவையையே கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் 80 மில்லியன் பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே தொகையையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்பார்த்துத் தமது தடுப்பூசி கொடுத்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தன. ஆனால், 31 மில்லியன் தடுப்பு மருந்துகளையே தம்மால் தரமுடியுமென்று …

Read More »

மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர்.

வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பிரான்ஸின் மருத்துவ அக்கடமி (l’Académie de médecine) விடுத்துள்ள ஒரு வேண்டுகோளிலேயே மெற்றோ ரயில்கள் உட்படப் பொதுப் போக்குவரத்துகளின் போது அதிகம் பேசிக்கொள்வதைக் குறைத்து அமைதி பேணுமாறு அறிவுறுத்தி உள்ளது.காற்றில் வைரஸ் பரப்பப்படுவதை இயன்றவரை குறைப்பதற்கான இலகுவான …

Read More »

ஆரி அர்ஜூனனின் வெற்றிக் கொண்டாட்ட அழைப்பு

அண்மையில் இவரின் பெரு வெற்றி பொதுவெளியில் பலராலும் பேசப்பட்டதொன்று.நேர்மையுடன் கருத்துமோதல்களை போட்டியின் உள்ளே ஆணித்தரமாக  முன்வைத்ததும், விளையாட்டில் பங்குபற்றிய பலராலும் உள்ளுக்குள்ளே குறி வைத்து தாக்கப்பட அல்லது ஒதுக்கப்பட, மக்களின் வாக்குகளால் அவர் நேர்மைக்காக காப்பாற்றப்பட்டு போட்டியில் தக்கவைக்கப்பட்டார் என்பதும் இவரின் பெரு வெற்றிக்கான மிக முக்கியமாக பேசப்படும்  காரணங்களாகும். அவர் தான் இந்த ஆரி அர்ஜுனன் இந்த நுணுக்கங்களை  அவர் அந்தவிளையாட்டுக்கான யுக்தியாக மட்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், பல்வேறு …

Read More »

டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியை விட அதிகமானோர் பைடனின் பதவியேற்பைப் பார்த்தார்கள்.

ஜனவரி 20 திகதியன்று ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தவர்கள் தொகை வேறெந்த ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியையும் விட அதிகம். மொத்தமாக வெவ்வேறு தொலைத்தொடர்புகள் மூலமாகப் பார்த்தவர்கள் தொகை இன்னும் முழுவதுமாகக் கணிக்கப்படவில்லை. நேரடியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பதவியேற்பு வைபவத்தை வெவ்வேறு தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் பார்த்தவர்களின் தொகைகளை வைத்துக் கவனிக்கும்போது டிரம்ப் ஆதரவாளர்களைப் பெரிதும் கவரும் Fox News தொலைக்காட்சியில் பதவியேற்பை இவ்வருடம் …

Read More »

சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம்.

சீனாவின் தங்கச் சுரங்கத்துக்குள் வேலைசெய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தொன்றினால் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கும் முயற்சி மெதுவாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. “எங்களைக் காப்பாற்றாமல் விட்டுவிடாதீர்கள், என்று வேண்டிக்கொள்கிறார்கள் சீனச் சுரங்கத்துக்குள் மாட்டிக்கொண்ட தொழிலாளிகள். ஏற்கனவே ஒன்றரை வாரங்கள் கடந்த நிலையில் நிலத்துக்குக் கீழே மாட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து போன்ற உதவிகளை தற்காலிகமாக உண்டாக்கிய ஓட்டைகளின் மூலம் கீழே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை தொடர்பிலுள்ள 12 தொழிலாளர்கள் தவிர்ந்த மற்றைய 10 பேருடன் எந்தவிதத் …

Read More »

தடுப்பு மருந்தால் மற்றைய நாடுகளில் என்னாகிறது என்று கவனித்துக்கொண்டிருக்கும் ஆஸ்ரேலியா.

உலகில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளெல்லாம் வெகு வேகமாக தத்தம் நாட்டவருக்கு அவைகளைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க ஆஸ்ரேலியா “கவனித்துக்கொண்டு முடிவெடுப்போம்,” என்ற நோக்கிலிருக்கிறது. பெப்ரவரி – மார்ச் மாதங்களில் தான் அங்கே தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்குக் கொடுப்பது ஆரம்பமாகும். தனது நாட்டின் மருத்துவ சேவையாளர்கள், நீண்டகால முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், தனிப்படுத்தப்பட்டோருக்குச் சேவை செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே முதல் கட்டமாகத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  தனது …

Read More »