Monday , January 25 2021
Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

உள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 500 மீற்றர் ஆழத்தில் மாட்டிக்கொண்டிருந்த சீனாவின் சுரங்கத் தொழிலாளர்களில் பாதிப்பேரை உதவிப்படை மீட்டெடுத்தது. முதலாவதாக வெளியே எடுக்கப்படுபவரை இயந்திரம் மூலம் வெளியே தூக்கிப் போர்வைகளுக்குள் மூடிச் சிகிச்சைக்குக் கொண்டு செல்வதை அரச தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம். “எதிர்பாராதவிதமாக முதல் படலங்களைத் தோண்டியெடுத்தபின் பெரிய இடைவெளியை நாம் சந்திக்க முடிந்தது. அதனால் அதிர்ஷ்டவசமாக எமது காப்பாற்றும் படையால் 11 பேரை …

Read More »

ஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.

சர்வதேச ரீதியில் தேடப்படுகிறவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சீன – கனடியக் குடிமகன் ஸே சி லொப் [Tse Chi Lop] என்பவரை நெதர்லாந்து பொலீஸ் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆசியாவில் என்றுமில்லாத ஒரு பெரிய போதைப் பொருள் சாம்ராச்சியத்தின் தலைவன் ஸே சி லொப் என்று ஓரிரு வருடங்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது. சாம் கோர் சிண்டிகேட் என்றழைக்கப்படும் போதைப் பொருள் சாம்ராச்சியத்தை மக்காவ், ஹொங்கொங்க் மற்றும் …

Read More »

கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark Web” இல் கொவிட் 19 சம்பந்தப்பட்ட பல விதமான விளம்பரங்களைக் காணமுடிகிறது. தடுப்பு மருந்து மட்டுமன்றி, தடுப்பு மருந்து பெற்றதற்கான போலிச் சான்றிதழ், தொற்று இல்லையென்று காட்டும் போலிச் சான்றிதழ்கள் போன்றவையும் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரங்கள் காணக்கிடக்கின்றன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து மனிதர்களிடம் …

Read More »

கிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு!

“சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” , “பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது” , “வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது”.. “கூரையில் புறாக்கள் புறுபுறுக்கின்றன..””வீதி வளைவில் கழுதை கனைக்கிறது…”” வயலில் சூடடிக்கும் சத்தம் என் ஜன்னலில் கேட்கிறது… “.. கோவில் மணி ஓசை கிட்டவாய் ஒலிக்கிறது..” -இப்படியெல்லாம் அயலோடு குற்றம் குறைபட்டுக் கொண்டு யாரும் இனிமேல் நீதிமன்றங்களை நாடமுடியாது. கிராமங்களில் இது சகஜம். …

Read More »

கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப காலத்தில் மீன் மற்றும் விலங்குகளை விற்கும் சந்தையொன்றில் ஆரம்பித்ததாகக் குறிப்பிடப்படும் தொற்றல் வேகமாகப் பரவி வருகிறது. தாய்லாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் கூடக் கொரோனாத் தொற்றல்கள் நிற்கவில்லை. குறிப்பிட்ட தொற்றுக்களுக்கான காரணம் பக்கத்து நாடான மியான்மாரிலிருந்து தாய்லாந்துக்குக் களவாக வந்திருக்கும் தொழிலாளிகளே …

Read More »

பாரிஸில் கல்லூரி மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள்

பாரிஸில் 15 வயதான கல்லூரி மாணவன் ஒருவன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் மிக மோசமாகச் தாக்கப்பட்டுக் குற்றுயிராக விடப்பட்ட சம்பவத்துக்கு எதிரான உணர்வலைகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்மான்(Antoine Griezmann,) நடிகர் ஒமர் சீ(Omar Sy) உட்பட பல பிரபலங்கள் மாணவனுக்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டதை அடுத்து இந்தச் சம்பவம் பரவலான கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாக …

Read More »

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல் திட்டமிட்டது போல நடந்தேறும் என்றே தெரிகிறது. சுமார் பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போர்த்துகல் முதலாவது கொரோனாத் தொற்று அலையில் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடக் குறைந்த இறப்புக்களை நேரிட்டது. ஆனால், பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய …

Read More »

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021 ஆகிய இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் அதையொட்டியே உத்ரகாண்டைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியான ஸ்ருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர்கள்/சிறார்கள் மாநில சட்ட மன்ற முதல்வராக இருந்து வரும் ஸ்ருஷ்டி கோஸ்வாமி இந்த ஒரு நாள் மாநில …

Read More »

பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி!

கொரோனா பெருநோய்த் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் அரசியல் புகலிடம் கோருவோரது எண்ணிக்கை கடந்த வருடம் 41 வீதத்தால் குறைந் துள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட அதி கூடிய வீழ்ச்சி இதுவாகும்.2020 இல் 81,669 புகலிட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அதற்கு முதல் ஆண்டில் (2019)அந்த எண்ணிக்கை 138,420 ஆகும்.கொரோனா நெருக்கடி காரணமாக எல்லைகள் மூடப்பட்டமை, குடியேற்ற வாசிகளது பயணங்கள் தடைப்பட்டமை, கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத …

Read More »

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடுதல் “கொரானாப்பாதுகாப்பு,” என்பதற்கு மறுபெயராகிவிட்டது. முகக்கவசத்தால் மட்டுமே தொற்றிலிருந்து எவரும் தம்மையோ மற்றவரையோ முழுவதும் காப்பாற்ற முடியாது என்று மருத்துவ ஆராய்வுகள் குறிப்பிட்டு வந்தாலும், நீண்டகாலமாகவே துணியிலான சாதாரண முகக்கவசம் போதுமென்ற நிலைமை இருந்தது. ஆனால், சமீப வாரங்களில் …

Read More »