அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

போதைப்பொருள் கலாசாரத்தை முற்றாக ஒழிப்போம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாடு முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியார். ஏதேனும் விமர்சனங்கள் வந்தாலும், அரசாங்கம் இதில் உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அவருடைய உரையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் பற்றி நாடாளுமன்றத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டாலும், அதற்கான முழுமையான பின்னணி தகவல் அரசாங்கத்தால் வெளியிடப்படாதது குறிப்பிடப்பட்டது. போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, எப்படி நாட்டில் வந்தது என விவரங்கள் இல்லை என்றாலும், இதன் ஆபத்துகள் குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் பிரதமர் கூறினார்.

இதன் பின்னணியில், ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருள் கலாசாரத்திலிருந்து காக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *