பதிவுகள்

தங்க விருது பெற்ற திருமலை புகையிரத நிலையம்!

மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சிறந்த பசுமை புகையிரத நிலைய போட்டியில் திருகோணமலை புகையிரத நிலையம் இலங்கையின் முதலாவது பசுமை நிறைந்த புகையிரத நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி அனுரகுமாரா திஸாநாயக்கவினால் தங்க விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கேகாலை நகரில் இன்று (05) ஒரு மாநில நிகழ்வாக “உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின்போது, திருகோணமலை புகையிரத நிலைய தலைமை அதிபர் தி.சர்வேஸ்வரனிடம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த தங்க விருது வழங்கி கெளரவித்தார்.

தேசிய ரீதியிலுள்ள புகையிரத நிலையங்களிடையே நடாத்தப்பட்ட பசுமை புகையிரத நிலைய போட்டியில் முதலாவது இடத்தினை திருகோணமலை புகையிரத நிலையமும், இரண்டாவது இடத்தினை உக்குவெல மற்றும் பாதுக்க புகையிரத நிலையங்கள் பெற்றுக்கொண்டது.

மூன்றாவது இடத்தினை
மாத்தறை, புகையிரத நிலையம்
பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *