உண்ணும் போதும் தொலைபேசி|இது பெருமையல்ல| குழந்தைகள் வாழ்வுக்கு படு தீங்கு

குழந்தைகளுக்கு வழிகாட்டியும் நாமே .. வழிகோட்டிகளும் நாமே… தொலைபேசி என்பது உயிரற்ற பொருளாக இருந்தாலும் அது உயிருள்ளவைகளுடன் தொடர்புடைய பொருளாக காணப்படுகின்றன.இன்றைய காலத்தில் தொலைபேசி இல்லாத வீடுகளே இல்லை என்று கூட கூறலாம்.
பொதுவாக நம் வீட்டில் தொலைபேசி பயன்படுத்தாவிட்டால் குழந்தைகளுக்கு அதை பற்றிய அறிவு 75/100 இல்லை என்று கூறலாம். சிறு குழந்தைகள் எங்களிடம் இருந்துதான் அந்த அஃறிணைப் பொருளை தொலைபேசி என கற்றுக்கொள்ளிறார்கள் அதுவும் நாம் அவர்களுக்கு அதை தொலைபேசி என அறிமுகப்படுத்துகின்றோம்.
இன்றைய நவீன உலகிலே குறிப்பாக நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொலைபேசியில் காணொளி காட்டி கொண்டுதான் உணவூட்டுகிறார்கள்.
தாய்மார்களின் பெருமையாய் கூறும் விடயம் ..” எங்கட புள்ள வீடியோ பார்த்த கொஞ்சம் திண்ணுற இல்லாடி சாப்பாடு இறங்குறது இல்ல”

இதற்கு காரணம் நாமேதான் .. பெருமையாய் கூறும் தாய்மார்களுக்கு அதன் விளைவுகள் தெரிவதில்லை போலும்…

இதனால் பலவிதமான பிரச்சினைகள் சிறுவயதில் ஏற்படுகின்றன அது மாத்திரமின்றி அதன் தாக்கம் முதுமைவரை இருக்கின்றது

♦️குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைப்படும்

♦️கண்ணில் பலவிதமான நோய்கள் ஏற்படல்

♦️குழந்தை வளர்ச்சி விருத்தி இயக்கத்தின்மை தடைப்படல்

♦️ தொலைபேசிக்கு அடிமைப்படல்

♦️உள நோய்கள் ஏற்படல்

இவ்வாறு பல விதமான நோய்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

உணவில் மாத்திரமல்ல கார்ட்டூன் , சிறுவர் பாடல்கள் , காணொளிகள் எதுவாக இருந்தாலும் முற்றுமுழுதாக தவிர்த்து கொள்வது சாலச்சிறந்தது . உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஏற்பாடும் நோய்கள் , பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்க உதவும்.

குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது அவர்களை சரியாமுறையில் வழிகாட்டுவது நமது பொறுப்பில் தங்கியுள்ளது.

இதுவரைகாலமும் மேற்கூறிப்பிட்ட விடையங்களுக்கு உங்கள் குழந்தை அடிமையாகி இருந்தால் எவ்வாறு இப்போது மீளுவதற்கான சில டிப்ஸ்கள்.

  1. குழந்தை முன் வீட்டில் தொலைபேசி பாதிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  2. குழந்தைக்கு உணவூட்டும் போது படிப்பினையூட்டக்கூடிய கதைகளை கூறுங்கள்./ இயற்கையை காட்டுங்கள்/ சுற்றுப்புற சூழல் விலங்குகள் என்பதை காட்டுங்கள்.
  3. தொலைபேசியில் நீங்கள் காட்டும் பாடல்களுக்கு பதிலாக நீங்கள் அவர்களுக்கு பாடல்களை சொல்லிக் கொடுங்கள்.

4.தொலை பேசி பாவித்தால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர்வு காட்டி கூறுங்கள்.

5.தொலைபேசியில் கழிக்கும் நேரத்தை செலவிட சிறுவர் புத்தகங்களை வாங்கி கொடுங்கள். புத்தகங்களோடு நேரத்தை செலவிட பழக்குங்கள்.

  1. நீங்கள் தொலைபேசி குழந்தைகள் நேரத்தை குறைத்து நீங்கள் குழந்தையோடு நேரத்தை செலவிடுங்கள்.

7.விளையாடுவதற்கு ஊக்கமளியுங்கள்.

8.தொலைபேசியை கேட்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை அச்சமூட்டும் வகையில் கூறுங்கள்.

9.பெற்றோர் மாத்திரமின்றி வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளும் சிறு குழந்தைகள் முன் தொபேசி பாதிப்பதை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்.

  1. குழந்தைகளுக்கு எது சரி எது தவறு என்று நாங்கள் தான் சொல்லிக்கொடுக்க வேண்டும். பிஞ்சு மனங்களுக்கு எதுவும் தெரியாது. ” விளைவுகள் வரும் முன் காப்போம் “

எழுதுவது : பஹ்ரியா பாயிஸ், இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *