சீனாவில் ஐஸ் கிரீமில் கொரோனாக் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
Tianjin Daqiaodao Food Company என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமுக்குள் கொரோனாக் கிருமிகள் இருந்ததாக சீனாவின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம் அறிவிக்கிறது. அவை எந்தெந்த நபர்களுடன் தொடர்பானவை என்று ஆராய்வதில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நிறுவனம் 4,836 பெட்டிகளைத் தயாரித்ததாகவும் அவைகளில் 2,089 பெட்டிகளைத் தனது பதனப்படுத்தும் இடத்தில் வைத்திருந்ததாகவும் குறிப்பிடுகிறது. ஷியாஞின் நகருக்கு 935 பெட்டிகள் அனுப்பப்பட்டு அவைகளில் 67 ஐஸ் கிரீம்கள் விற்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் 1,662 பேர் வேலை செய்வதாகவும் அவர்களெல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுப் பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஐஸ்கிரீம்களைச் சாப்பிட்டவர்கள் ஏதாவது உடல் நிலைப் பாதிப்பு இருப்பின் தத்தம் பகுதி மருத்துவ சேவைகளைத் தொடர்பு கொள்ளும்படி பணிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொரோனாக் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகளில் அவை நீண்டகாலம் குறிப்பிட்ட ஒரு இடதில் உயிர்வாழக்கூடியவை என்று தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்