ஒருவரின் பித்தப்பைக்குள்ளிருந்து 14,000 கற்களை நீக்கிய மருத்துவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார்.
தனது நோயாளி ஒரேயொருவரின் பித்தப்பைக்குள்ளிருந்து 14, 387 கற்களை நீக்கியிருக்கிறார் வஹித் முத்லு என்ற மருத்துவர். இது துருக்கியின் தொக்காத் என்ற நகரில் நடந்திருக்கிறது. நகர அதிகாரியொருவரின் முன்னிலையில் தான் அந்தக் கற்களை நோயாளியிடமிருந்து வெளியேற்றியதாக மருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கமால் டொக்ளு என்ற 64 வயதான நோயாளி சுமார் 40 நாட்களாக வயிற்று நோவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருந்துகள் எடுத்து ஒரு வாரத்தின் பின்னரும் அவருக்குக் குணமாகாததால் பரிசோதித்தபோது பித்தப்பை மூன்று மடங்கு பெரியதாக இருந்தது. அப்போதே டொக்ளுவின் பித்தப்பைக்குள் உலகில் அதிகமான கற்கள் இருப்பதைத் தான் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் சத்திர சிகிச்சை செய்த மருத்துவர்.
இதற்கு முதல் ஒருவரின் பித்தப்பைக்குள்ளிருந்து அதிக கற்கள் எடுக்கப்பட்டு சாதனை செய்யப்பட்டிருப்பதும் துருக்கியில்தான். மலாத்யா என்ற நகரில் ஒரு நோயாளியிடமிருந்து 8,422 கற்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்