உழவர் கிண்ணம் அல்வாய் மனோகரா அணியின் வசம்
வடமாகாண அணிகளை உள்ளடக்கிய உழவர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அல்வாய் மனோகரா அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது
பூநகரி உதைபந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடன் , பூநகரி மத்திய நண்பர்கள் விளையாட்டு கழகம் நடாத்திய சுற்றுப்போட்டியிலேயே வெற்றிபெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது
40 க்கும் மேற்பட்ட வடமாகாண அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அல்வாய் மனோகரா அணி , இளவாலை சென்லூட்ஸ் அணியை எதிர்த்து மோதியது .
போட்டியில் 2:1 என்ற கோல்கணக்கில்
வெற்றி பெற்று குறித்த மாகாண சுற்றுப்போட்டியின் சாம்பியனாகி
உழவர் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது அல்வாய் மனோகரா அணி.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாத இந்தப்போட்டியில், இளவாலை சென் லூட்ஸ் அணி 11 வது நிமிடத்திலேயே அடித்த கோலினால் முதற்பாதி நேர நிறைவில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 38வது நிமிடத்தில் மனோகரா அணி அடித்த கோலில் சமநிலையாகிய இந்தப்போட்டி, 68 வது நிடத்தில் அடித்த அடுத்த கோலினால் மனோகரா அணி வெற்றியை உறுதி செய்தது.
குறித்த போட்டியின் சிறந்த வீரராக மனோகரா அணியின் சார்பில் 2 கோல்களையும் அடித்து வெற்றியை உறுதி செய்த பிரணவன் சாருஜன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக சாந்தமூர்த்தி கோகுலனும் ,சிறந்த கோல்காப்பாளராக செல்வநாதன் இனியவனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.