36 வருடங்களாக உலகக்கோப்பைக் கால்பந்தாட்டத்திற்காக ஏங்கிப் போயிருந்த கனடாவில் மகிழ்ச்சிக் கொந்தளிப்பு.
நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிடுக்கும் உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றது கனடா. கடந்த 36 வருடங்களாக அக்கோப்பைப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான மோதல்களில் பங்குபற்றித் தோல்விகளால் மனமுடைந்து போயிருந்த கனடாவின் உதைபந்தாட்ட ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை நாட்டின் தேசிய குழு உண்டாக்கியது. 4 – 0 என்ற வெற்றியை ஜமேக்காவுடன் விளையாடியதில் பெற்றார்கள் அவர்கள்.
ஞாயிறன்று நடந்த மோதலில் CONCACAF என்ற குழுவில் இருந்து கத்தார் போட்டிகளுக்குப் போகும் கனடா வென்றதின் மூலம் 28 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அக்குழுவின் முதல் மூன்று அதிக புள்ளிகள் கத்தார் போட்டிகளில் பங்குபற்றத் தகுதியுள்ளவர்களாவார்கள். கனடாவை விட மூன்று புள்ளிகள் குறைவாகப் பெற்றிருக்கிறார்கள் அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் குழுவினர். கடைசி இடங்களைப் பெற்றிருக்கின்றன எல் சல்வடோரும், கொஸ்தா ரிக்காவும், பனாமாவும்.
1986 ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் போட்டிகளில் கனடா பங்குபற்றியிருந்தது. தமது முதல் மூன்று மோதல்களிலும் தோற்றது மட்டுமன்றி கனடா அங்கே ஒரு தடவை கூட எதிரணிகளின் வலைகளுக்குள் பந்தைப் போடுவதில் வெற்றிபெறவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்