பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோற்றது

T20 உலகக்கிண்ணத்தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு  குழுநிலைப்போட்டியில் இலங்கை அணி , பங்களாதேஷ் அணியிடம் தோற்றது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் 6 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் Rishad Hossain தெரிவுசெய்யப்பட்டார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய Hossain, 22 ஓட்டங்களை கொடுத்து 3விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இலங்கை அணியின் இரண்டாவது தோல்வி என்பதுடன் அணி தரவரிசையில்  குறித்த குழு நிலையில் கடைசி இடத்தில் இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *