இந்தியா பாகிஸ்தானை கடுமையாக போராடி வென்றது
T20 உலகக்கிண்ண போட்டிகளின் இன்றைய குழுநிலைப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானை கடுமையாக போராடி ஆறு ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஆரம்பத்தில் போட்டியை ஆரம்பிக்க மழை வந்து குறுக்கிட்டிருந்தாலும், பின்னர் போட்டி சற்று தாமதமாக துவங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி
ஆரம்பத்திலிருந்து பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு தடுமாறியது.
19 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்திய அணி 119 ஓட்டங்களை மொத்தமாக எடுத்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுக்களை இழக்காது நின்று நிலைத்தாடியிருந்தாலும் ஓட்டங்களை விரைவாக எடுக்கத்தவறியது. 20 ஓவர்களும் முழுதாக முகங்கொடுத்த பாகிஸ்தான் வீரர்கள் , 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
அதன்படி ஆறு ஓட்டங்களால் தோல்வியடைந்த பாகிஸ்தான் இந்த குழுவில் இரண்டாவது தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய Jasprit Bumrah அறிவிக்கப்பட்டார்.
4 ஓவர்கள் பந்துவீசிய பும்ரா வெறும் 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கு சவாலாக பந்து வீசியிருந்தார்.
இதன்படி இன்றைய வெற்றியின் பின்னர் இந்திய அணி தங்கள் குழுவில், அமெரிக்காவை இரண்டாம் நிலைக்கு பின்தள்ளி முதல் நிலைக்கு முந்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.