விறுவிறுப்பான போட்டியில் தென்னாபிரிக்கா பங்களாதேஷை வென்றது

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகளில் இன்று பங்களாதேஷை மிகவும் விறுவிறுப்பாக கடைசி நிமிடத்தில் வெற்றிபெற்று புள்ளிகள் தரவரிசையில் முதல்நிலையைத் தக்கவைத்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மிக நிதானமாகவும் வேகம் குறைவாகவும் ஓட்டங்களைப்பெற்று நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியும் மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெறும் 4 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்த Heinrich Klaasen அறிவிக்கப்பட்டார்.
இதன்படி இதுவரை நடைபெற்று முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்தக்குழுவில் தென்னாபிரிக்கா , பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களையும் தக்கவைக்க , சிறீலங்கா அணி கடைசி இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *