T20 உலகக்கிண்ண போட்டிகளில் பாகிஸ்தானின் முதல் வெற்றி
T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகளில் இன்று கனடா அணியை பாகிஸ்தான் அணி வெற்றிகொண்டு தனது முதல் வெற்றியைப்பதிவு செய்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முதலில் களதைதடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, கனடா துடுப்பெடுத்தாட களம் வந்தது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி விக்கெட்டுக்களை பறிகொடுக்காமலேயே ஆடியது
அதன்படி 18 வது ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 10 ஓட்டங்களை எடுத்து 7விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக Mohammad Amir அறிவிக்கப்பட்டார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய அமிர், 13 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இதுவரை நடைபெற்று முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்தக்குழுவில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்துக்கு முந்தியிருக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் சளைக்காமல் வெற்றியை நோக்கி ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினால்,அமெரிக்கா அல்லது இந்தியா இனிவரும் போட்டிகளில் தோல்வியுற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.