இந்தியா அமெரிக்காவை வென்றது | T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகளில் இன்று அமெரிக்க  அணியை இந்திய  அணி வெற்றிகொண்டு அடுத்த சுற்றுக்கு தன்னை உறுதி செய்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, அமெரிக்க அணியை  துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி துடுப்பெடுத்தாட வந்த அமெரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 110  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய  அணி நிதானமான  துடுப்பெடுத்தாட்டத்தை வெளிப்படுத்தியது.

அதன்படி பத்து பந்துகள் மீதமிருக்க 3  விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 111 ஓட்டங்களை எடுத்து  7விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றது.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக   Arshdeep Singh அறிவிக்கப்பட்டார்.


நான்கு ஓவர்கள் பந்துவீசிய அர்ஸ்டீப், 9 ஓட்டங்களை மாத்திரம்  கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் களைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இதுவரை நடைபெற்று முடிந்த போட்டி முடிவுகளின் படி, அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்  அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *