பங்களாதேஷ் அணி இன்று நெதர்லாந்தை வென்றது

T20 உலகக்கிண்ணத்தொடரில் இன்று  நடைபெற்ற ஒரு  குழுநிலைப்போட்டியில் நெதர்லாந்து அணியை  பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால்  வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம்  இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணியின் Shakib Al Hasan ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைத்தழுவியது.
பந்துவீச்சில் ஆகக்கூடுதலாக பாகிஸ்தான் அணியின் Rishad Hossain நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.

இன்றைய போட்டியின்  ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Shakib Al Hasan தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்படி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு பங்களாதேஷ் அணிக்கு பிரகாசமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *