ஐரோப்பியக்கிண்ணம் முதற்போட்டி இன்று| ஜேர்மனி மைதானங்கள் தயார்
உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐரோப்பியக்கிண்ணம் 2024 , இன்று ஜேர்மனியில் துவங்குகிறது.
இன்று ஜுன்மாதம் 14 ம் திகதிமுதல் தொடக்கம் வரும் ஜூலைமாதம் 14 ம் திகதிவரை உதைபந்தாட்ட கொண்டாட்டமாக ஐரோப்பா இருக்கப்போகிறது.
மொத்தமாக 24 அணிகள் மோதும் குழு நிலைப் போட்டிகளைத் தொடர்ந்து, அவை நொக்கவுட்(வெளியேற்ற போட்டிகள்) போட்டிகளைக்கடந்து,
இறுதிப்போட்டியில் வரும் ஜூலை மாதம் 14 ம்தேதி பேர்லின் ஒலிம்பியா மைதானத்தில் களங்காணும்.
இன்று ஐக்கிய இராச்சிய நேரம் இரவு எட்டுமணிக்கு(ஜேர்மனிய நேரம் இரவு 9 மணி), போட்டியை நடாத்தும் நாடான ஜேர்மனி உடன் ஸ்கொட்லாந்து முதற்போட்டியில் மோதவிருக்கின்றது.
இந்தப்போட்டி ஜேர்மனியின் மியூனிச் உதைபந்தாட்ட அரங்கில் துவங்கவிருக்கிறது.
வெற்றிக்கான சாத்தியம் ஜேர்மனியின் பக்கம் எதிர்வுகூறப்படுகிறது எனினும் , உதைபந்தாட்டத்தின் வெற்றி தோல்விகளில் எதுவும் நடக்கலாம் என்பது வெளிச்சம்.
கடந்த வருடம், இங்கிலாந்து அணியை பனால்ற்றி உதைகளில் வென்று ஐரோப்பியகிண்ணத்தை இத்தாலி கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.